நெடுஞ்சாலை அழகு..

This entry is part 13 of 44 in the series 30 அக்டோபர் 2011

===============

பாலேடு சுருக்கங்களாய்
மடிந்து மடிந்து – குளத்து
நீரின் சிறு அலைகள்.

நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து
மேலே தூக்கி விசிற விரிந்தது
போலொரு நீல வானம்- அதில்
புரண்டோடும் மேக கூட்டம்.

இக்கொள்ளை அழகுக்கு இடையே
கொணரிப் பட்டையில் அடுக்கபட்ட
சந்தை பொருட்களாக நகர்கிறோம்
அலுவலகம் நோக்கி நெடுஞ்சாலையில்.

-சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்மூன்று தலைமுறை வயசின் உருவம்
author

சித்ரா

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *