கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)

This entry is part 26 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மீட்டெழுச்சி நாளில் உனது
மேனி உனக் கெதிராய்ச்
சாட்சி சொல்லும் !
“களவாடி னேன்”, என்று உனது
கரங்கள் கூறும் !
“இழிவு செய்தேன்” என்று உன்வாய்
இதழ்கள் உரைக்கும் !
“போகக் கூடா இடமெல்லாம்
போனேன்” என்று உனது
கால்கள் சொல்லும் !
“நானும்தான்” என்று உனது
பாலுறவுக் குறியும் சொல்லும் !

பிரார்த்தனை வழிபாட்டு
வரிகள் உனக்கு
வஞ்சக மொழியாய்த் தெரியும் !
இப்போது உன்னெதிர்ப்பு
எதுவு மின்றி
அனுமதி அளிப்பாய் நீ
வெளிப் படையாய்
உன்னுடல் உறுப்புகள் செய்து
மொழிவதை !
ஆசிரியர் பின்னே செல்லும்
மாணவர் போல் கூறுவீர் :
“என்னை விடத்
தெளிவாய்த்
தெரிந்தவர் என் குரு நாதர்
ஏகும் என் பாதைக்கு !
இந்த இடம் ஒரு
கனவு பூமி ! இதைத்
தூங்கு மூஞ்சி மட்டும்
மெய்யெனக் கருதுவான் !

***************
மீட்டெழுச்சி நாள் : The Resurrection Day

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 19, 2011)

Series Navigation“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *