தாலாட்டு

This entry is part 13 of 53 in the series 6 நவம்பர் 2011

தாலாட்டு நானும் பட
தனிப்பாட்டு தேவையில்லை
பாராட்டும் கடலை பார்த்து
படகோட்டும் பகலவனாலே
ஒளிபார்த்து உள்ளம் மகிழ
ஒலிக்காதோ உயிரின் ஓசை ?

கேட்காத காதும் இல்லை
கிடைக்காத கவிதை சொல்ல
பார்க்காத கனவில் ஒன்றை
பசிக்காக நீ அழுதிருந்தாலும்
பாலூட்ட நிலவு வருமே
பகுத்தறிவால் புசித்திருப்பாயோ ?

இதயத்தில் மலரினை பூக்க
இறையிடம்தான் அடத்தினால் கேட்க
கைகாலை நீ உதைத்து அழுதால்
காரணம்தான் நான் கேட்க மாட்டேன்

எனக்காக நீதான் அழுது
இதற்காக அழுவேன் சொன்னால்
நான் கூட அழத்தான் வேண்டும்
நம் சேர்ந்து அழுதே இருப்போம் .

அ. இராஜ்திலக்

Series Navigation”மாறிப் போன மாரி”ராசிப் பிரசவங்கள்
author

அ.இராஜ்திலக்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *