சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50

This entry is part 35 of 41 in the series 13 நவம்பர் 2011

  
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்து கொள்ளவும்.
भक्तः कण्णप्पः
कालहस्तिक्षेत्रस्य समीपे एकं वनम् आसीत्। तत्र एकं शिवलिङ्गम् आसीत्। तस्य दैनिकपूजा न आसीत्। एकैकस्मिन् मासे द्विवारं कश्चन ब्राह्मणः तत्र गत्वा पूजां करोति स्म।
एकस्मिन् दिने कश्चन अनागरिकः व्याधः तत्र आगतवान्। तस्य नाम कण्णप्पः। शिवलिङ्गे तस्य विशेषभक्तिः आसीत्। तस्मात् कारणात् सः प्रतिदिनं तत्र गत्वा पूजां करोति स्म। लिङ्गस्य आहारार्थं फलानि ,मूलानि च अर्पयति स्म। सः व्याधः। तस्मात् यत् भक्ष्यं सः खादति स्म तत् अपि अर्पयति स्म। कः तस्य आहरः। मृगमांसम् एव।
सः प्रतिदिनं पर्णद्वयेन मांसं गृहीत्वा मन्दिरम् आगच्छति स्म। प्रथमतः मुखे जलं गृहीत्वा तेन लिङ्गं सिञ्चति स्म। सः एव कण्णप्पस अभिषेकक्रमः। मुखतः निस्सृतं जलम् अशुद्धम् इति सः न जानाति स्म। अभिषेकस्य अनन्तरम् एव सः मांसखण्डान् शिवाय अर्पयति स्म।
एकदा अर्चकः तत्र आगत्य लिङ्गस्य समीपे स्थितानि अशुद्धानि वस्तूनि दृष्टवान्। सः महान्तं दुःखम् अनुभूतवान्। लिङ्गं शुद्धीकृत्य पुष्पाणि फलानि च अर्पितवान् । अर्चकस्य गमनानन्तरं कण्णप्पः यथाक्रमम् आगत्य लिङ्गाय मांसं समर्पितवान्। एवं मासाः गताः ।
एकस्मिन् समये व्याधेन कृताम् अनुचितां पूजां दृष्ट्वा अर्चक्ः द्ःखितः अभवत्। तदा ईश्वरः तस्य सान्त्वनम् एवं कृतवान् –“ हे ब्राह्मण। एकः भक्तः मम पुजाम् इत्थं करोति। चिन्ता मास्तु। अधुना अपि सः आगमिष्यति। वृक्षस्य पृष्टतः स्थित्वा तस्य कार्यं पश्यतु।“
ब्राह्मणः तथैव कृतवान्। कण्णप्पः आगतवान्। प्रथमम् उच्छिष्टेन जलेन लिङ्गं सिञ्चितवान्। तदनन्तरं मांसखण्डान् अर्पितवान्। तदा लिङ्गस्य वामात् नयनात् रुधिरं निस्सृतम् । कण्णप्पः तत् दृष्ट्वा लिङ्गस्य नेत्रव्याधिः इति चिन्तितवान्। सपति बाणेन स्वस्य एकं नयनम् उध्दृत्य तत् लिङ्गस्य वामभागे निक्षिप्तवान्। सपदि लिङ्गस्य दक्षिणात् नयनात् रुधिरम् आगतम्। कण्णप्पः स्वस्य एकं पादं लिङ्गस्य दक्षिणे नयने स्थापितवान्। तदनन्तरं स्वस्य अन्यत् नयनम् अपि उद्धर्तुम् उद्युक्तः अभवत्। तस्मिन् समये ईश्वरः स्वरूपम् आदाय तस्मै आशीर्वादं दत्तवान्। कण्णप्पस्य अन्यत् नेत्रम् अपि प्रतिदत्तवान्।
एतत् सर्वं दृष्ट्वा अर्चकः स्न्तुष्टः अभवत्। “अहो ! एषा एव उत्तमा भक्तिः” इति सः चिन्तितवान्।
पत्रं पुष्प्ं फल्ं तोयं यो मे भक्त्या प्रयच्छति
तदहं भक्त्युपहृतम् अश्नामि प्रयतात्मनः।।
इति भगवत्गीतायां भगवान् श्रीकृष्णः वदति।।
kālahastikṣetrasya samīpe ekaṁ vanam āsīt| tatra ekaṁ śivaliṅgam āsīt| tasya dainikapūjā na āsīt| ekaikasmin māse dvivāraṁ kaścana brāhmaṇaḥ tatra gatvā pūjāṁ karoti sma|
ekasmin dine kaścana anāgarikaḥ vyādhaḥ tatra āgatavān| tasya nāma kaṇṇappaḥ| śivaliṅge tasya viśeṣabhaktiḥ āsīt| tasmāt kāraṇāt saḥ pratidinaṁ tatra gatvā pūjāṁ karoti sma| liṅgasya āhārārthaṁ phalāni mūlāni ca arpayati sma| saḥ vyādhaḥ| tasmāt yat bhakṣyaṁ saḥ khādati sma tat api arpayati sma| kaḥ tasya āharaḥ| mṛgamāṁsam eva|
saḥ pratidinaṁ parṇadvayena māṁsaṁ gṛhītvā mandiram āgacchati sma| prathamataḥ mukhe jalaṁ gṛhītvā tena liṅgaṁ siñcati sma| saḥ eva kaṇṇappasa abhiṣekakramaḥ| mukhataḥ nissṛtaṁ jalam aśuddham iti saḥ na jānāti sma| abhiṣekasya anantaram eva saḥ māṁsakhaṇḍān śivāya arpayati sma|
ekadā arcakaḥ tatra āgatya liṅgasya samīpe sthitāni aśuddhāni vastūni dṛṣṭavān| saḥ mahāntaṁ duḥkham anubhūtavān| liṅgaṁ śuddhīkṛtya puṣpāṇi phalāni ca arpitavān arcakasya gamanānantaraṁ kaṇṇappaḥ yathākramam āgatya liṅgāya māṁsaṁ samarpitavān| evaṁ māsāḥ gatāḥ|
ekasmin samaye vyādhena kṛtām anucitāṁ pūjāṁ dṛṣṭvā arcakḥ dḥkhitaḥ abhavat| tadā īśvaraḥ tasya sāntvanam evaṁ kṛtavān – he brāhmaṇa| ekaḥ bhaktaḥ mama pujām itthaṁ karoti| cintā māstu| adhunā api saḥ āgamiṣyati| vṛkṣasya pṛṣṭataḥ sthitvā tasya kāryaṁ paśyatu|
brāhmaṇaḥ tathaiva kṛtavān| kaṇṇappaḥ āgatavān| prathamam ucchiṣṭena jalena liṅgaṁ siñcitavān| tadanantaraṁ māṁsakhaṇḍān arpitavān| tadā liṅgasya vāmāt nayanāt rudhiraṁ nissṛtam | kaṇṇappaḥ tat dṛṣṭvā liṅgasya netravyādhiḥ iti cintitavān| sapati bāṇena svasya ekaṁ nayanam udhdṛtya tat liṅgasya vāmabhāge nikṣiptavān| sapadi liṅgasya dakṣiṇāt nayanāt rudhiram āgatam| kaṇṇappaḥ svasya ekaṁ pādaṁ liṅgasya dakṣiṇe nayane sthāpitavān| tadanantaraṁ svasya anyat nayanam api uddhartum udyuktaḥ abhavat| tasmin samaye īśvaraḥ svarūpam ādāya tasmai āśīrvādaṁ dattavān| kaṇṇappasya anyat netram api pratidattavān|
etat sarvaṁ dṛṣṭvā arcakaḥ sntuṣṭaḥ abhavat| aho eṣā eva uttamā bhaktiḥ iti saḥ cintitavān|
“patraṁ puṣpṁ phalṁ toyaṁ yo me bhaktyā prayacchti
tadahaṁ bhaktyupahṛtam aśnāmi prayatātmanaḥ”
iti bhagavatgītāyāṁ bhagavān śrīkṛṣṇaḥ vadati|

பக்தன் கண்ணப்பன்
காலஹஸ்தி ஷேத்திரத்தின் அருகேஒரு வனம் இருந்தது. அங்கே ஒரு சிவலிங்கம் இருந்தது. அவருக்கு தினப்பூஜை நடைபெறவில்லை. ஒரு மாதத்தில் இருமுறை ஏதோஒரு பிராமணர் அங்கு சென்று பூஜை செய்து வந்தார்.
ஒருநாள் ஒரு நாகரிகம் தெரியாத வேடன் அங்கு வந்தான். அவனுடைய பெயர் கண்ணப்பன். சிவலிங்கத்தின் மீது அவனுக்கு விசேஷ பக்தி இருந்தது. அந்தக்காரணத்தால் அவன் தினமும் அங்கு சென்று பூஜை செய்து வந்தான் லிங்கத்திற்கு உணவாக பழங்கள் மற்றும் வேர்கள் அர்பணித்து வந்தான். அவன் வேடன். அதனால் எந்த உணவு அவன் சாப்பிட்டு வந்தானோ அதைக்கூட அர்பணித்து வந்தான். எது அவனுடைய ஆகாரம்? மிருக மாமிசம் தான்.
அவன் தினமும் இரு இலைகளால் மாமிசத்தை பிடித்து கோவிலுக்கு வருவது வழக்கம். முதலில் வாயில் தண்ணீரை பிடித்து அதனால் லிங்கத்தை சுத்தம் செய்து வந்தான். அதுதான் அவனுடைய அபிஷேக முறை. வாயிலிருந்து துப்பும் தண்ணீர் அசுத்தம் என்று அவனுக்குத் தெரியாது. அபிஷேகத்திற்குப் பின் அவனே மாமிசத்துண்டுகளை சிவனுக்கு அர்பணிப்பது வழக்கம்.
ஒருநாள் அர்ச்சகர் அங்கு வந்து லிங்கத்திற்கு அருகில் இருந்த அசுத்தப் பொருள்களைக் கண்டார். அவர் மிகுந்த துக்கமடைந்தார். லிங்கத்தைச் சுத்தம் செய்து பூக்கள், மற்றும் பழங்களை அர்பணித்தார். அர்ச்சகர் சென்றபின் கண்ணப்பன் அங்கு வந்து மாமிசத்தைச் சமர்ப்பித்தான். இதுபோலவே மாதங்கள் கடந்தன.
ஒருமுறை வேடனால் செய்யப்பட்ட பூஜையைப் பார்த்து அர்ச்சகர் கவலையடைந்தார். அப்போது கடவுள் அவரை குதூகலப்படுத்துவதற்காக ,”அர்ச்சகரே ! ஒரு பக்தர் எனக்கு இவ்வாறு பூஜை செய்கிறார். கவலை கொள்ளாதீர்கள். இப்போது அவர் வருவார். மரத்திற்குப் பின்னால் நின்று அவனுடைய செயலை கவனி ” என்று கூறினார்.
பிராமணரும் அதுபோலவே செய்தார். கண்ணப்பன் வந்தான். முதலில் வாயிலிருந்த தண்ணீரால் லிங்கத்தை சுத்தம் செய்தான். அதற்குப்பின் மாமிசதுண்டங்களை அர்ப்பித்தான். அப்போது லிங்கத்தின் இடது கண்ணில் இருந்து இரத்தம் வழிந்தது. கண்ணப்பன் அதைப்பார்த்து லிங்கத்திற்கு கண்வியாதி என்று நினைத்தான். உடனே அம்பால் தன்னுடைய ஒரு கண்ணைத் தோண்டி அதை லிங்கத்தின் இடது கண்ணில் வைத்தான். அந்த சமயத்தில் லிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வழிந்தது. கண்ணப்பன் தன்னுடைய ஒரு காலை லிங்கத்தின் வலது கண்ணில் வைத்தான். அதற்குப்பின் தன்னுடைய மற்றொரு கண்ணையும் தோண்டி எடுப்பதற்கு ஆயத்தமானான். அந்த சமயத்தில் கடவுள் அவன் முன் தோன்றி அவனை ஆசிர்வதித்தார். கண்ணப்பனின் மற்றொரு கண்ணையும் திருப்பிக்கொடுத்தார்.
இவையனைத்தையும் பார்த்து அர்ச்சகர் சந்தோஷமடைந்தார். ” இதுவல்லவோ பக்தி”என்று அவர் நினைத்தார்.
”இலை, பழம், பூ, நீர் போன்றவற்றை யார் எனக்கு பக்தியுடன் அளிக்கிறானோ, தூய மனத்தை உடைய அவன் பக்தியுடன் அளிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -4)
author

ரேவதி மணியன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  பா. ரெங்கதுரை says:

  சைவ வெறியர்கள் இக்கதையைப் படித்த பிறகாவது அசைவம் சாப்பிடுவோர் மீதான அசூயையைக் கைவிட்டு சிவ பெருமானின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்.

 2. Avatar
  nandhitha says:

  பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம்
  பாடம் 50

  सः एव कण्णप्पस अभिषेकक्रमः। என்பது कण्णप्पस्य என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,ईश्वरः तस्य सान्त्वनम् एवं कृतवान् இதற்குப் பொருள் புரியவில்லை, ईश्वर: सान्त वचनम् என்று இருக்கலாம் என்று நினைக்கிறேன்
  தவறாக இருப்பின் மன்னிக்கவும்
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 3. Avatar
  Revathi Manian says:

  பெருமதிப்பிற்குரியீர் வணக்கம்,
  சகோதரி நந்திதா கூறியதுபோல் सः एव कण्णप्पस्य अभिषेकक्रमः। என்பதுதான் சரி. ’कण्णप्पस्य‘என்பதற்கு பதிலாக ‘कण्णप्पस‘ என்று தவறாக உள்ளது. மன்னிக்கவும். ’ईश्वरः तस्य सान्त्वनम् एवं कृतवान्।’என்றால், ’கடவுள் அவரை இவ்வாறு (இனிய வார்த்தைகளைக்) கூறி சமாதானப்படுத்தினார்’ என்று பொருள். கீழேயுள்ள இணைய தளங்களில் சரிபார்த்துக்கொள்ளவும்.

  http://www.aa.tufs.ac.jp/~tjun/sktdic/cgi-bin/dic-srch.cgi
  http://www.spokensanskrit.de/

  நன்றி,
  ரேவதி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *