சந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம் ரோல் மாடல் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஹைதராபாத்தை சைபராபாத் ( cyberabad ) ஆக, கணினி மயமாக்கி ஆந்திராவை வளர்த்து விட்ட்தாக அறிவு ஜீவிகள் பாராட்டினார்கள். நான் முதல்வர் அல்லன். முதன்மை செயல் அலுவலன் என கார்ப்பரேட் அதிகாரி போல அவர் பேட்டி கொடுத்தார். அவர் முதல்வராக இருந்த்து போதும். பிரதமராக வேண்டும் என அறிவு ஜீவுகள் கெஞ்சினார்கள்.
ஆனால் தேர்தல் வந்தபோது , தோல்வி அடைந்து வெளியேறிய அவர் , இன்று வரை தோல்வியில் இருந்து மீள முடியவில்லை.
ஏன் தோற்றார் என அறிவு ஜீவுகளுக்கு புரியவே இல்லை. அவருக்கு ஆலோசகர்களான அதிகாரிகளுக்கும் புரியவில்லை. பத்திரிக்கைகளிலோ, இண்டர்னெட்டிலோ கருத்து சொல்லாத நலிந்த , கிராமத்து மக்கள் அமைதி புரட்சி நட்த்தி விட்டு , தம் வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.
அவர்களிடன் கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்கள். ஹைதராபாத்தில் கண் கவர் கட்டிடங்கள் கட்டினால் மட்டும் போதாது. கிராமங்களையும் கவனிக்க வேண்டும். ஏழைகளையும் மேம்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களையும் உயர்த்த வேண்டும். அதுதான் அரசின் வேலை என சொல்லி கொடுத்து இருப்பார்கள். ஆனால் நாயுடுவுக்கு இதை கேட்க நேரம் இல்லாமல் போய் விட்ட்து.
ஆனால் எம் ஜி ஆர் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். அவர் வள்ளுவர் கோட்டம் போன்ற கட்ட்டங்கள் கட்டியது இல்லை. பிரமாண்ட சிலைகள் அமைத்த்து இல்லை. ஆனாலும் அவர் மக்களால் நேசிக்கப்பட்டார். ஏன்?
சினிமாவில் செய்த்தையே , நிஜ வாழ்விலும் செய்தார். வசதியானவர்களை மேலும் வசதியாக்காமல், நலிந்தவர்கள் மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என பார்த்தார். சத்துணவு திட்டம், இலவசங்கள் மூலம் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன என்ற விமர்சனங்க்ளை அவர் கண்டு கொள்ளவே இல்லை. எனவேதான் அவரை நலிந்த மக்கள் கடைசி வரை கைவிடவில்லை. இன்றும் கூட கிராமங்கள்தான் அதிமுகவின் கோட்டைகளாக உள்ளன. சிம்பிள் ஃபார்முலா.. வசதியானவனிடம் இருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடு.
இதற்கு நேர் எதிரான ஃபார்முலாவை சென்ற ஆட்சி கடைபிடித்த்து. நலிவுற்றவர்களிடம் இருந்து எடுத்து வசதியானவனுக்கு கொடு என்பது அவர்கள் ஃபார்முலா.
தமிழ் நாட்டில் கல்வி அறிவில் பின் தங்கிய மாவட்டங்கள் பல உண்டு. படிக்க வாய்ப்பில்லாத தாழ்த்தப்பட்டோர் வாழும் ஊர்கள் உண்டு. பெயருக்கு சில நூலகங்கள் இருந்தாலும், தேவையான வசதிகள் இல்லாத கிராமங்கள் உண்டு.
அதற்கெல்லாம் நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டிய அரசு, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்து, ஏற்கனவே படிப்பறிவில் வலுவாக உள்ள , அண்ணா பல்கலைகழகம் அருகே ஆடம்பரமாக ஒரு நூலகம் அமைத்த்து.
இது மனித நியாயங்களின்படி தவறு என்பதைக்கூட விட்டு விடலாம். சட்டப்படியேகூட இது தவ்று. ஒரு மாவட்ட்த்தின் நூலக நிதியை , அந்த மாவட்ட்த்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் , இதை மீறி, பின் தங்கிய மாவட்டங்களின் நிதியை எடுத்து, ஆடம்பர கட்ட்டம் கட்டினார்கள்.
அவர்கள்தான் அப்படி என்றால் இதை கண்டிக்க வேண்டிய அறிவுலகம், கிடைக்கவிருக்கும் சில எலும்புத்துண்டுகளை மனதில் கொண்டு வாலாட்டி கொண்டு மவுனம் சாதித்த்து. ஞானி ஒருவர் மட்டுமே அதை கண்டித்து அன்று எழுதினார்.
இன்று ஏதோ சில காரணங்களால் நூலகத்தை இடம் மாற்ற முடிவு செய்துள்ளனர். காரணம் என்னவாக இருந்தாலும், கன்னிமராவுக்கு அருகே மாற்றப்படுவது நல்லதுதான் என்பது வேலை தேடும் இளைஞர்களின் கருத்து. நூலகங்கள் ஒரே இட்த்தில் இருந்தால், தேர்வுகளுக்கு படிக்க வசதியாக இருக்கும் என நினைக்கிறார்கள் அவர்கள்.
ஆனால் நூலகங்கள் சென்றே இராத பலரும் , போராளிகளாக காட்டிக்கொள்ள இட மாற்றத்தை எதிர்க்கிறார்கள். அறிவு ஜீவுகளும் இந்த ஆட்டு மந்தை கூட்ட்த்தில் சேர்ந்து கூச்சலிட்டு கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து நிற்கிறார்கள். சாரு நிவேதிதா மட்டுமே தெளிவான நிலை எடுத்து இருக்கும் ஒரே இலக்கியவாதி.
இந்த நிலையில் , புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு என்ற செய்தி வெளிவந்த்து. அறிவு ஜீவிகள் இனிமேலாவது தம் நிலையை மாற்றி கொள்வார்களா என தமிழகம் எதிர்பார்த்த்து.
ஆனால் அவர்கள் தாம் எப்பேற்பட்ட சுயனலவாதிகள் என காட்டினர்.
” முறைகேடு நடந்தால் என்ன.. நூலகம் வசதியாக இருக்கிறது. அப்படியே இருந்து விட்டு போகட்டுமே “
என்று மேம்போக்காக பேசும் இவர்களுக்கு மக்களின் நலனே விட கட்ட்ட்த்தின் நலனே பெரிதாக தெரிவது கொடுமை.
அந்த கட்ட்ட்த்தில் மருத்துவமனை கட்டினால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடுமா என முட்டாள்தனமாக அடுத்த கேள்வி.
ஒரே இட்த்தில் 200 கோடி செலவில் நூல்கம் கட்டினால் பலர் வந்து பயன்படுத்த முடியாது. அதற்குபதிலால , இந்த நிதியை பிரித்து மாவட்ட நூலகங்களை மேம்படித்தி இருக்க வேண்டும்.
ஏனென்றால் தொலை தூரத்தில் இருந்து அன்றாடாம் கோட்டுர்புரம் வர இயலாது.
ஆனால் மருத்துவமனை என்பது எப்போதாவது தேவைப்படும் ஒன்று. அது கோட்டூர்புரத்தில் இருக்கலாம்.
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நூலகம், கன்னிமராவுக்கு அருகே வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்
மக்களுக்கு நெருக்கமான எம் ஜி ஆர் ஃபார்முலா.. அறிவு ஜீவிகளுக்கு நெருக்கமான நாயுடு ஃபார்முலாவா?
ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் என எளிய மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
- மதத்தின் பெயரால் அத்துமீறல்
- கதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY)
- பூனைகள் தூங்கியது போதும்
- ஆதாமிண்டே மகன் அபு
- Painting & Sculpture Exhibition to be held on November 20 at Cholamandal Artist Village
- கிணற்று நிலா
- ஒரு வித்தியாசமான குரல்
- அகாலம் கேட்கிற கேள்வி
- காக்காப்பொண்ணு
- கவிதைகள் : பயணக்குறிப்புகள்
- பழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்
- அசூயை
- நானும் பிரபஞ்சனும்
- பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்
- தொலைவில் மழை
- ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்
- கிருமி நுழைந்து விட்டது
- வட கிழக்குப் பருவம்
- ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?
- கவிதை
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 18
- கவிதை
- அமீதாம்மாள்
- முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15
- கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!
- சிலையில் என்ன இருக்கிறது?
- பழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்
- தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?
- நெசமாலும் நாடகமுங்கோ
- பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -4)
- இதுவும் அதுவும் உதுவும் – 4
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)
- இதுதான் உலகமென
- ஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்
- தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்