கல்லா … மண்ணா

This entry is part 12 of 29 in the series 25 டிசம்பர் 2011


 

என்னவோ  துரத்துகிறது

எப்படியோ  தப்பிக்கிறேன்

 

போயிராத கோயிலிருந்து

பிரசாதம் வருகிறது – கடவுள்

கொடுக்க சொன்னதாக ..

 

ஒடி  ஒடி வருகிறேன்

ரயில் கிளம்பிவிட்டது !

பகீர் என்றானது – வாழ்க்கை

முடிந்து விட்டது  போல் ..

 

தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன்

சிறுவயதில் உடன்  படித்த தோழி.

சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக

 

வீடு வாங்கியதை தேவையற்று

சொல்லி கொண்டிருக்கிறேன் – அவள்

முகம் கோரமாக மாற தொடங்குகிறது

 

இறந்தவர்கள் நடக்கிறார்கள்

இயல்பாக  பேசுகிறார்கள்

 

யாருடைய குழந்தையோ

பூங்கொத்து கொடுக்கிறது

 

என்னன்னவோ நடக்கிறது

முன்னுக்கு பின் முரணாக

 

விழித்து கொள்கிறேன்

கனவு கலைகிறது

 

நிகழ்வுகள் நிகழ்கின்றன

என்னன்னவோ  நடக்கிறது – தொடர்கின்றன

புரிதலுக்கு பிடிபடாமலேயே …

இறந்தவர்கள் தென்படுவதில்லை

என்பதை தவிர ..

 

– சித்ரா

Series Navigationவிளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்
author

சித்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *