கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)

This entry is part 8 of 29 in the series 25 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கம்பளத்தில் பொறி இந்த வடிவத்தை !

ஒருவனை நேசமாய் நோக்கும்
ஆயிழையை ஒத்தது
ஆன்மீக அனுபவம் !
அது ஒரு நதி ஓட்டம் !
வாத்துகள் துள்ளி அங்கே
வசிக்கும் !
ஆற்று நீரில் மூழ்கும்
காகங்கள் !

கண்ணுக்குத் தெரியும் :
கிண்ணத்தில் உள்ளது உண்டி !
உடல் வளர்ச்சியும்
குடல் எரிச்சலும்
உண்டாக்கும் மூலங்கள் !
நமது கண்ணுக்குத் தெரியாமல்
நமக்குக் கொடை அளித்து நாம்
மதிக்கும் ஒன்றின்
மகத்துவம் தெரிகிறது !

நீதான் நீரோட்டம் !
நீரியக்கும் அரைப்பு உருளை நாம் !
நீதான் காற்று !
வடிவடையும் தூசி நாம் !
நீதான் ஆன்மா !
திறந்து மூடும் கரங்கள் நாம் !
நீ தெளிவு விளக்கம் !
சொல்ல முயலும் மொழி நாம் !
நீ ஆனந்தச் சுடர் !
பல்வேறு
வேடிக்கைப் பிறவிகள் நாம் !

அசைவதும் ஒலிப்பதும் மானிடம்
நம்பத் தகும் தொழில்கள்,
நீரோட்டம்
அரைப்பு உருளையை
இயக்குவது போல் !
எந்த ஓர் உதாரணமும்
இதைக் கூற இயலாது !
ஆயினும் நான்
சுட்டிக் காட்ட வேண்டும்
அழகுத்துவம் பற்றி !

ஒவ்வொரு கணமும்
ஒவ்வோர் இடமும்
எடுத்துரைக்கும்
இந்த வரை படத்தை
உன் கம்பளத்தில்
பொறி யென்று !

கடவுள் அங்கியில் பேனை
எடுக்கவும், அவரது
காலணி செப்ப மிடவும்
ஆட்டிடையன் விழைந்தது போல்
ஆழ்ந்த உணர்வுடன்
உன்னை
ஆதரிக்க விருப்பம் எனக்கு !
என் கூடாரம் விடுபட்டு
உயரே
வானோக்கிச் செல்லட்டும் !

என் காதலி வரட்டும்
இங்கு !
வந்தென் கூடாரத்தின்
வாசல் முன்னே நிற்கட்டும்
காவல் நாய்
காத்திருப்பது போன்று !

கடல் வெகுண்டு
பொங்கி எழும் போது
காதில் மட்டும் அரவம்
விழ வேண்டாம் எனக்கு !
இதயத்தின் உள்ளேயும்
சிதறி விழட்டும் !
***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 21, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)பஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *