3 இசை விமர்சனம்

This entry is part 26 of 30 in the series 15 ஜனவரி 2012


A Life Full Of Love

பியானோவின் நோட்ஸுடன் தொடங்கிப்பின் அதே நோட்ஸ்களை வயலின் இசையோடு தொடரும் தீம் ம்யூஸிக், கொஞ்சம் சைனீஸ் டச்சுடன் ஒலிக்கத்தொடங்கி , தொடர்ந்தும் நம்மை கூடவே அழைத்துச்செல்கிறது. ரஹ்மான் சொல்லுவார் அதிகமா சைனீஸோட இசையில சிந்துபைரவி ராகம் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துவாங்கன்னு, அதோட அவங்க இசையின் அடிப்படையும் அதுவாவேதான் இருக்கும், கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க இதுல சிந்துபைரவி டச் இருக்கான்னு. இன்னும் தொடர்ந்தும் கேக்கும்போது எனக்கு யானி’யோட Tribute-ம் , இங்க டெல்லி கன்செர்ட்டுக்கு வந்திருப்ப வாசிச்சார்.அந்த ட்ரிப்யூட்’டோட வாசனையும், நம்ம ரஹ்மானின் பாம்பே தீம் ம்யூஸிக்கும் கலந்து ஒலிப்பது போலத்தானிருக்கு, இசைச்சேர்ப்பு மற்றும் கலந்தொலிக்கும் போது எனக்கு யானி’யும் ரஹ்மானும் தான் நினைவுக்கு வருகின்றனர்.கேட்டுப்பாருங்க…உங்களுக்கும் காதல் மூட் வருதா இல்லியான்னு..ஆனா தம்பி அனிருத்துக்கு ஏற்கனவே பிரவாஹமா பொழியுதுன்னு தான் தோணுது. A Life Full Of Love …J

Yanni’s Tribute : http://www.youtube.com/watch?v=PooVtv_fP0g

Bombay Rahman’s Theme : http://www.youtube.com/watch?v=zvQbZNT8eeU

போ நீ போ

மோஹித் சௌஹானும் அனிருத்தும் இணைந்து பாடின பாடல். கொஞ்சம் நம்ம யுவனோட “ஓ இந்தக்காதல் என்னும் பூதம் “ ( சத்தம் போடதே படத்திலிருந்து) உள்ள பாடல் போல ஆரம்பத்தில் ஒலிக்கிறது.ஹ்ம்..கொஞ்சம் 6-8 ல இருக்குற Tempo’வக்குறச்சு 2-4 ல கேட்டுப்பாருங்க அதே பாட்டுதான்..So இந்தப்பாட்டுக்கு யுவன்..! J இருந்தாலும் Perfect Match’ன்னா “ஓ சனம்,முஹப்பத் கீ கஸம்” என்ற கொஞ்சம் பழய நம்ம லக்கி அலி’யோட பாடலை அச்சசல் நினைவுறுத்தவும் தவறவில்லை.இருப்பினும் சாயல் தெளிவாகத்தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் அனிருத். மோஹித் சௌஹானின் குரலும் , லக்கி அலியின் கொஞ்சம் Boss கூடின குரலும் ஒன்று போல அமைந்திருப்பதும் அந்தப்பாடலை தொடர்ந்தும் நினைவில் நிறுத்துகிறது. ஆஹ் ஆஹ் என்று பின்னிலிருந்து உயிர் போவதுபோல் , சித்ரவதைக்குட்பட்டவர் போல, கத்தும் Effect கேட்கும்படித்தான் இருக்கிறது. பாடலைத்திசை திருப்பாமல் ..! பாடல் மொத்தமும் இசைச்சேர்ப்பு , ஒலிக்கலவை , ஸிந்தஸைஸரில் செய்தது போலவே தெரியுது,,J

 

நீ பார்த்த

பின்னணியில் முழுக்க ஒலிக்கும் வயலின் ,எனக்கு “ந்யூயார்க் நகரம்” பாடலையே நினைவூட்டுகிறது. அருமையான மெலடியாக உருவெடுத்துக்கிறது.  “நீ பாதி நான் பாதி” பாடல் ஸ்டைல் தான் (கேளடி கண்மணி) Same Treatment பாடல் முழுக்க. பாடலின் Mood-ஐ தவிர்த்துவிடாமல் தொடர்ந்தும் செல்லவைக்கிறது. ஆனாலும் பாடலின் Interludes ரசிக்கும்படியில்லை. அனிருத் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்னு தோணுது.. J

கண்ணழகா

ஒண்ணுமில்ல…நம்ம ராஜா சாரோட How To Name it-ல ஒரு ‘Is It Fixed’ன்னு சின்ன Master Piece இருக்கு, கொஞ்சம் அதக்கேட்டுட்டு இந்தப்பாட்டக்கேளுங்க. அனிருத்கிட்ட கேட்டா Just Inspired ன்னு சொன்னாலும் சொல்லிருவார். என்ன இருந்தாலும் அது Original மாஸ்டரோட Piece  அல்லவா..?! J இருந்தாலும் பாட்டின் இடையில வர்ற பூவின் மடல் போல விரியும் ரெண்டு Interludes –லயும் மனிதர் ரொம்பவே அசத்துறார்.Guitar E Major String-ல ஆரம்பிக்கிற பாட்டு அப்டியே நம்ம மனசோட அத்தனை Stringsஐயும் தொட்டுவிட்டுத்தான் செல்கிறது.Guitar-உடன் பின்னர் violinம் சேர்ந்து கொள்ள , மனதைக்கொள்ளை கொள்கிறது..! 1st Interlude-ஆக 1:04 லருந்து 1:12 வரை , அப்டியே நம்ம ராஜா சாரோட Is it Fixed J தான் , பிறகு 2:36 ல் ஆரம்பிக்கும் Interlude-ல் பூவின் இதழ் போல் விரியும் வயலினும் பின்னர் புல்லாங்குழலுமாக மனதைக்கொள்ளை கொள்கிறது…என்னைக்கேட்டா இந்தப்பாட்டு தான் ஸூப்பர் படத்துலயே…அதோட ஸ்ருதி நிஜமாகவே கொஞ்சுகிறார் நம்மோட..!

How To Name it “Is it Fixed“ http://www.youtube.com/watch?v=MPU4lPyopKI

Theme of 3

ஸ்பானிஷ் பின்னணி போல ஆரம்பிக்குது தீம் , ஆ ஹோ என்ற பின்னணி பிறகு சேர்ந்துகொள்ள , தொடர்ந்தும் Mandolin Strings இசைக்கிறது.ஹ்ம்..ஒண்ணும் சொல்லிக்கிர்ற மாதிரி Impress பண்ணல..! J Sorry Anirudh. Theaterical Thriller க்கு வேணா Use பண்ணிக்கலாம் இதை.. :-)

The Rthythm of Love

சிவதாண்டவம் போல ஆரம்பிக்கிற தாளத்துக்கேற்றவாறு பின்னால புல்லாங்குழல் சேர்ந்திசைக்கிறது..கொஞ்சம் நம்ம யுவனோட “தொட்டுத்தொட்டுப்போகும் தென்றல்”  (காதல் கொண்டேன்) போல இசைக்கிறது இந்த இசைத்தொகுப்பு.. ஒருவேள படத்துல காட்சிகளோட பார்க்கும் போது வேண்ணா Impress பண்ணும்னு நினைக்கிறேன்.

இந்த ஒரு படத்தை வைத்து எடை போடமுடியாது , ஏற்கனவே உலகப்புகழ் வாங்கிட்டார்னு சொன்னாலும், தம்பி அனிருத்’கிட்ட சரக்கு இருக்கத்தான் செய்யுது.அதை ரொம்ப தைரியமாவே காட்டீருக்கார் எல்லாப்பாட்டுலயும்…! “வாகை சூடவா “ ஜிப்ரான் போல நமக்கு ஒரு Promising Talent கிடைத்திருக்கிறதுன்னு தான் சொல்லணும். ஒரு பாட்டில் உலகப்புகழ் என்கிறதால எதிர்பார்ப்பும் அதே மாதிரி தான் இருக்கும் இனி அவரிடமிருந்து வரும் அத்தனை பாடல்களுக்கும்..! சொல்லப்போனா ராஜா, ரஹ்மான், மற்றும் யுவனின் இசைக்கலப்பு போலத்தான் தெரியுது எல்லாப்பாடல்களும்..! இருப்பினும் தமது இசையைப் பிறர் சாயலின்றி தொடர்ந்தும் வெளிப்படுத்துவாரேயானால் வெற்றிகளைக்குவிப்பது உறுதி…!!

வாழ்த்துகள் அனிருத்…,!

Series Navigationஇந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்பொங்கல் வருகுது
author

சின்னப்பயல்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *