அடிகளாசிரியர் மறைவு – அஞ்சலி

This entry is part 30 of 30 in the series 15 ஜனவரி 2012

அடிகளாசிரியர் அவர்களின் கோட்டோவியம் அடிகளாசிரியர் (குருசாமி) (17-04-1910  –  08-01-2012) தமிழறிஞர் ம்ற்றும் தமிழ்ப்பேராசிரியர் அன்புடன் சேது வேலுமணி செகந்திராபாத்

மெர்சியின் ஞாபகங்கள்

This entry is part 29 of 30 in the series 15 ஜனவரி 2012

குழல்வேந்தன் அன்பு தோழர்களே, நமக்கெல்லாம் பெண்களைப் பற்றிய செய்திகளோ அல்லது தகவல்களோவென்றால் விருப்பமானதன்றோ? பெண்களைப் பற்றிய சித்திரங்கள்,  வண்ணப் படங்கள், சிற்பங்கள், கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், என எங்கும் பெண்கள் எதிலும் பெண்களென்பதன்றோ நம்மவர்களின் விருப்பமும் தேர்வும். ஆடவர்களின் ஜட்டி விளம்பரம் தொடங்கி முகச் சவரம் செய்துகொள்ள ாடவர்கள் பயண்படுத்தும் பிலேடு விளம்பரம் வரை  எல்லாவற்றிர்க்கும் நமக்கு ஒரு பெண்ணின் பிம்பமன்றோ வேண்டி  இருக்கிறது. எனவே தோழர்களே நானும் உங்களோடு பெண்ணைப் பற்றியே பேசுவதென்று தீர்மானித்துள்ளேன். பெண்கள் […]

ஷங்கரின் ‘ நண்பன் ‘

This entry is part 28 of 30 in the series 15 ஜனவரி 2012

  சிறகு இரவிச்சந்திரன் நேர்த்தி என்பது இயக்குனர் ஷங்கரின் தவிர்க்க முடியாத ஒரு தன்மை என்பது அவரது முதல் படமான ஜென்டில்மேனிலேயே பார்த்ததுதான். இது இன்னமும் பல பரிமாணங்களில் பட்டை தீட்டப்பட்டு எந்திரனில் வெளிப்பட்டது. அவர் ஒரு இந்திப் படத்தை மறுபடியும் எடுக்க இசைந்துள்ளார் என்ற போது பலரது மனங்களில் எழுந்த ஐயம் இதில் அவரது தனித் தன்மையையோ பிரம்மாண்டத்தையோ நுழைத்து விட்டாரென்றால் படம் சுவைக்காது என்பது தான். திரையுலகில் பலரும் கூட அவர் அப்படிச் செய்து […]

பொங்கல் வருகுது

This entry is part 27 of 30 in the series 15 ஜனவரி 2012

சி. ஜெயபாரதன், கனடா பொங்கல் வருகுது ! புத்தரிசி பொங்க வருகுது ! மகிழ்ச்சி பொங்கி வருகுது ! எங்களை எல்லாம் இன்பத்தில் முங்க வருகுது !  நாவில் தங்க வருகுது !  கும்பி குளிர வருகுது ! கும்மி அடிக்க வருகுது !  அன்பில் அணைக்க வருகுது ! விழாவில் இணைக்க வருகுது ! புத்தாடை மங்கையர் உட்கார்ந்து முற்றத்தில் வண்ணக் கோல மிட்டுப் பால் பொங்கல் இனிதாய்ப் பொங்கப் போகுது ! வெண் பொங்கல் […]

3 இசை விமர்சனம்

This entry is part 26 of 30 in the series 15 ஜனவரி 2012

A Life Full Of Love பியானோவின் நோட்ஸுடன் தொடங்கிப்பின் அதே நோட்ஸ்களை வயலின் இசையோடு தொடரும் தீம் ம்யூஸிக், கொஞ்சம் சைனீஸ் டச்சுடன் ஒலிக்கத்தொடங்கி , தொடர்ந்தும் நம்மை கூடவே அழைத்துச்செல்கிறது. ரஹ்மான் சொல்லுவார் அதிகமா சைனீஸோட இசையில சிந்துபைரவி ராகம் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துவாங்கன்னு, அதோட அவங்க இசையின் அடிப்படையும் அதுவாவேதான் இருக்கும், கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க இதுல சிந்துபைரவி டச் இருக்கான்னு. இன்னும் தொடர்ந்தும் கேக்கும்போது எனக்கு யானி’யோட Tribute-ம் , […]

இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்

This entry is part 25 of 30 in the series 15 ஜனவரி 2012

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான  தேவையுமாகும். அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் […]

பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்

This entry is part 24 of 30 in the series 15 ஜனவரி 2012

யோசனையில்லாத உபாயம்   ஒரு காட்டில் ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் நாரைகள் கூடு கட்டி இருந்து வந்தன. மரத்தின் ஒரு பொந்தில் ஒரு கருநாகம் இருந்தது. நாரைகளின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைப்பதற்குமுன்பே அவற்றை தின்று காலங்கழித்து வந்தது.  அப்படியே ஒருநாள் ஒரு நாரையின் குஞ்சுகளைப் பாம்பு தின்றுவிட்டது. அதனால் அந்த நாரை துக்கத்தோடு ஏரிக்கரைக்குப் போய் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு அழுது தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்றது.   அதைப் பார்த்த ஒரு நண்டு, ‘’மாமா, ஏன் இப்படி […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6

This entry is part 23 of 30 in the series 15 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஸ்டீஃபன் !  உனக்கு வாணிபத்தில் ஈடுபாடு இல்லை.  வழக்காடும் திறமை இல்லை ! கலை, இலக்கிய நாடகத்தில் இச்சை துளியும் இல்லை !  வேதாந்தம் உனக்கு விளங்காதது !  ஆனால் மனிதர் பலருக்குத் தெரியாத நல்லது கெட்டது நியாயம் மட்டும் உனக்கு எப்படிப் புரியுது ? பெர்னாட் ஷா (ஸ்டீஃபன் அண்டர்ஷாஃப்ட்) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த […]

அன்று கண்ட பொங்கல்

This entry is part 22 of 30 in the series 15 ஜனவரி 2012

ஆரங்கள் கொஞ்சம் குறைந்து போன சாரநாத் சக்கரங்களைக் கட்டை வண்டியில் பூட்டி சந்திக்கத் துடிக்கும் கொம்புகளில் காவி-வெள்ளை -பச்சை பூசி தேசியமயமாக்கி… உமிப்போர்வையில் உறக்கம்போட்ட விதை நெல்லை எழுப்பி வந்து ஆடியில் காயம்பட்ட மண்ணில் எறிந்து… பாஞ்சலி பூமிக்குத் தலையெண்ணை தடவி… பஞ்சாங்கம் புரட்டி மேட்டுர் அணையை வானொலியில், செய்தித் தாளில் எதிர்பார்த்து… சேற்றில் கால்புதைத்து பாட்டுப் பாடி பொய்களைப் புடுங்கி உண்மைகளை நட்டு வைத்து… டெமக்ரானில் தாளடிப் பூச்சியை சந்தித்து என்ட்ரோ சல்ஃபானில் தத்துப் பூச்சியைக் […]

ரம்யம்/உன்மத்தம்

This entry is part 21 of 30 in the series 15 ஜனவரி 2012

ரம்யம் வசந்தகாலத்தின் முதல் பழங்களை அணில் ருசிக்கும் பறவைகளின் சப்தம் சன்னமான இசை மேகங்களற்ற வானம் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தான் பாறையில் மோதிய கணத்தில் சிறகு முளைத்தது அந்தி வானத்தில் கூடு திரும்பும் பறவைக் கூட்டம் பருந்தின் நிழல் கண்டு அஞ்சும் புறாக்கள் லேசான தூறல் ரம்யமான மாலை கிழக்கு வானத்தில் வானவில் அலைகள் சொன்ன கதைகளை கரை யாரிடம் சொல்லும் குளம் எப்படி நிலாவை சிறை பிடித்தது தோட்டத்து மலர்களில் அவள் கூந்தலை அலங்கரிக்கப் […]