கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)

This entry is part 12 of 30 in the series 22 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சிக்கலான அரவங்கள்

செம்மையான சொற்கள் அல்ல

புரியாத வற்றைப் பிடித்து

உரிய தாக்குவேன் !

கிளைகளில் துவங்கிக்

கீழே இறங்கி

வேர்களிலும் தீப்பற்றி

வெந்தழிகிறது !

பூரா மரமும்

புகைந்து சாம்பலாச்சு !

*கிதர் பசுமை மனிதன்

பற்றிய

கதைகளும்

கிதரே கூறிய கதைகளும்

மீண்டும்

தெரிய வந்தன !

மறைந்து

போய் விட்ட

புராதனக் கதைகள் என்று

நினைக்கப் பட்டவை !

புராதனக் காதல்

புதிய வடிவங்களில்

உதிக்குது !

நமது பரிதிக்கு நாம் சொல்வது

கதிரோன் உதித்தது

என்று !

வாசிக்கத் துவங்குவோம்

திருக் குர்ரானின்

உபதேச வரிகளை (சூரா – 140)

“ஒரு வழி மூலம்

கடவுளை

ஒப்பு நோக்கிட

முடியாது !”

முன்னோக்கு அது !

+++++++++++

*கிதர் பசுமை மனிதன் The Green Man *Khidr -The Green Man and Al-Khidr of Islam

Al-Khidr literally means ‘The Green (one)’, though Muslim commentators are not agreed on who he exactly was. Some say he is a prophet while others say he is a wali meaning one who is close to God, in other words, a saint.

There can however be no doubt that it is he who figures in the Qur’an as the unnamed servant of God who initiates Moses into the mysteries or rather paradoxes of life.

**************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Open Secret – Versions of Rumi By John Moyne, & Coleman Barks (1984)

4. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (Janauary 18, 2012)

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)ஒரு நாள் மாலை அளவளாவல் (2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *