This entry is part 29 of 31 in the series 5 பிப்ரவரி 2012

கொடியில் காயப்போட்ட பட்டுச்சேலையாய்
விட்டத்தில் தொங்கி கொண்டிருந்தாள் பவானி
குறிப்பெதும் இல்லாததால் கூறுபோட்டது ஊரு
காதல் தோல்வி
தீராத தீட்டுவயிற்று வலி
அம்மா கடுமையான எச்சு
வயிற்றில் வாங்கி கொண்டாள்
இன்னம் இஷ்டத்துக்கு
ஒரு வாரம் கழித்து
தன் சாவுக்கு காரணமில்லை குறிப்புடன்
விஷம் குடித்து மரித்தான் மாரி
அப்போதும் அப்பனையும் ஆத்தாளையும்
காப்பாற்ற இப்படி எழுதியிருக்கான்
வேறு ஏதோ தப்பு தண்டாவென
வாய்கள் மென்றன
புரளிக்கு பதிலளிக்க ஆளில்லை யென்றால்
மனசாட்சிகள் அடகுவைக்கப்பட்டு
வாய்கள் இறந்தவர்களை உடற்கூறு செய்கின்றன

Series Navigationபேஸ்புக் பயன்பாடுகள் – 1கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8