பேரதிசயம்

This entry is part 4 of 45 in the series 26 பிப்ரவரி 2012

அந்திவரை வெயில் அழகும்..
பிந்திவரும் இருள் அழகும்..
வானுடுத்த உடுவழகும்..
பானுவிடும் கணையழகும்..
மண்ணுலகில் இல்லையெனில் –
மாந்தர் நிலை என்னவாகும்..?
“காற்று” வீச மறந்தால்..
ப+மி சுற்றமறுத்தால்..
மேகம் அசையாது போனால்..
தேகமும் உள்ளமும் என்னவாகும்!

புவி ஆகர்சம் இல்லையென்றால்..
“ஆக்சஸின்” வாயு அழிந்துபோனால்;;
நீர் வட்டங்கள் குழம்பி விட்டால்..
“வாழ்க்கை வட்டங்கள்” நிலையென்ன..?,
“கண்ணீர் வட்டங்கள்”தான் மீதமாகும்!

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – (87)முனைவர் மு.வ நூற்றாண்டு விழா
author

ஜே.ஜுனைட்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *