காதலில் கதைப்பது எப்படி ?!

This entry is part 41 of 45 in the series 4 மார்ச் 2012

படத்துல வர்ற ஒவ்வொருத்தரும் ஆயிரம் பக்கம் வசனம் பேசறது தான் செமசொதப்பலா இருக்கு,ஒரு வேள ஜெயமோகன் தான் வசனம் எழுதுனாரோ படத்துக்கு..?  இத எழுதினவுடனே என்னால சிரிப்ப அடக்கவேமுடியல, கொஞ்சம் இருங்க , அடுத்த பாராவுக்கு கொஞ்ச நேரம் ஆகும் எனக்கு வர்றதுக்கு.. :-)
அமலா பாலின் முடிக்கற்றைகள் முன் நெற்றியில் கண்களை மறைத்துக்கொண்டு எப்போதும் விழுந்து கிடந்தாலும் அவர் சித்தார்த்தை சீரியஸாக பார்த்து லவ் பண்ணத்தான் செய்கிறார். ஒரு இடத்துல கூட தன்னோட முடிக்கற்றைகளை கை விரல்களால் ஒதுக்கிவிடாமல் இருப்பது போல , சித்தார்த்தையும் முழுதுமாக ஒதுக்கி விடமுடியாமல் தவிக்கத்தான் செய்கிறார் படம் முழுக்க. படத்துல ஒரு லவ் ஸ்டோரின்னு இல்லங்க, ஏகத்துக்கு லவ் ஸ்டோரி இறைஞ்சு கிடக்கு. அமலா பால் ஒவ்வொரு தடவையும் send button ஐ அழுத்த முயற்சிக்கும் காட்சியில் , நம்மையும் சேர்த்து அனுப்பிவைக்கிறார் , சித்தார்த்திடம் போய்ச்சொல்லி ஃபோன் பண்ணவைக்க. 
படியத்தலை சீவி , நான்கு முடிகளை மட்டும் முன்னர் தொங்கவிட்டுக்கொண்டு அலையும் அமலாபாலும், நன்கு தலைமுடியை சீவியிருந்தாலும் , பின்னர் அதைக்கொஞ்சம் கலைத்துவிட்டுக்கொண்டு செல்லும் சித்தார்த்தும் யதார்த்தங்கள்..!
ஒரு தடவ Breakup ஆயிருச்சின்னா கொஞ்சம் Gap விடுங்கடா , மறுபடியும் சேர்றதுக்கு,இடையில புகுந்து அபேஸ் பண்ணாதீங்கடான்னு சொல்றது நூத்துல ஒரு வார்த்த மச்சி. ராகமாலிகா’விலருந்து கொஞ்சம் கிடச்ச Gapல ரொம்ப ஓவராவே Autoவே ஓட்றார்.அந்த ஒவ்வொரு பொண்ணுட்டயும் கண்ணுமண்ணு தெரியாம அறை வாங்குறாரே ,அவர் தான் படத்துல வர்ற உண்மையான ஹீரோ. பதினாறு வயதினிலேவில ஏகப்பட்ட தடவ “இது எப்டி இருக்கு”ன்னு ரஜினி கேட்கிற மாதிரி சளைக்காம அவரும் அறை வாங்கிக்கிட்டே இருக்கார்.: -) ஒரு காட்சில க்ளாப் அடிக்கிறதுக்குப்பதிலா ஒரு பொண்ண விட்டு அவர அறையவிட்டு ஆரம்பிக்கிறது ஹஹ்ஹா..:-)) ரெண்டு பேருக்கும் இடையில மத்தியஸ்தம் பண்ணி வைக்கிறேன் பேர்வழின்னு அவர் ஒக்கார்ற இடம் பிரமாதம்.
காதலில் ஊடல் நம்மை உணரவைக்கிறது , இதுவரை செய்த தவறுகளையும், சிலநேரங்களில் செய்த மிகச்சரிகளையும். யாருமே இந்த உலகத்துல Made For Each Other கிடையாது, நமக்குப்பிடிச்சவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறதும் , கொஞ்சம் விட்டுக்குடுத்துப்போறதும் தான்னு தன் மகளுக்கு தான் தெளிவான பிறகு புரியவைக்கிறார் சுரேஷ். ஆனா அதுக்காக “வளையோசை கலகலவென” பாட்டெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.பார்த்துக்கிட்டிருக்க நம்மள சிரிக்க வைக்கிறதுக்காக மட்டும்னு வேணா ரசிக்கலாம். எதிரும் புதிருமா Divorce Notice File பண்ற அளவுக்குப்போனபிறகு ஒரு முட்டலில் Backgroundல் ராஜா சாரின் பாடல் ஒலிப்பதும், மனைவி தன் கழுத்தை ஒட்டகம் போல பின்னால் இழுத்து கணவரைப் பார்ப்பதும் ரொம்பவே சினிமாத்தனமாத்தான் தெரியுது.( ஓ..நான் சினிமாதான் பாத்துக்கிட்டு இருக்கனோ ? )
எதுத்துப்பேசினா எங்க மறுபடியும் கோவம் வந்து Glassஅ தூக்கி அடிச்சிட்டுப் போய்டுவாளோன்னு பயந்துக்கிட்டு சித்தார்த் , அப்டீல்லாம் நான் ஒண்ணும் Feel பண்ணல்லாம் இல்லன்னு சொல்றதும், தன்னோட அப்பா திரும்பி வந்த சந்தோஷத்துல மனசு மாறி வந்து அமர்ந்து கொண்டு, எனக்காக கொஞ்சம் பரிஞ்சு பேசேண்டான்னு மருகிக்கிட்டு பேசுற அமலா பாலும் அருமை..அந்த எடத்துக்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய மால போடணும். எத்தனையோ காதல் படங்கள் வந்தாச்சு,ஒண்ணொண்ணும் ஒரு விதமா இருந்தாலும் , இந்தப்படத்துல அப்டி என்னமோ ஒண்ணு இருக்கத்தான்யா செய்யுது.
கேண்டீனில் கடைசியாகக்கிடைத்த சாத்துக்குடி ஜூஸை அமலா பாலுக்கு குடுக்குறேன் பேர்வழின்னு சித்தார்த் வழியறதும், 160 பக்கம் Notebook தான் வேணும்னு சித்தார்த் கிட்ட அமலாபால் கெஞ்சறதும் ஹ்ம்..:-) Facebookல இத்தன GirlFriendsஆன்னு சந்தேகப்படுற அமலா பாலும், Phoneல இத்தன BoyFriendsஓட Numbersஆன்னு சந்தேகப்படுற சித்தார்த்தும்,,ஹ்ம்.,.அங்கயும் இதே பிரச்னைதானா..?! 
Divorce வாங்கும் மனநிலையில் இருக்கும் தம்பதியினரின் மகளாக வரும் அமலா பால் அந்த விஷயத்தை அருமையாகவே காட்டியிருக்கிறார்.சில நேரங்கள்ல அந்த நினைப்பு வரும்போது மூடவுட் ஆய்ரும்னு அவர் சொல்ற இடம் ரொம்பவே இயல்பா இருக்கு. அப்பா தன்னோட அம்மாவுக்கு எழுதின காதல் கடிதத்த படிக்கும்போது , கடைசியில் வரும் முத்தங்களை தானே வாங்கிக்கொண்டதுபோல எதிர்பாராமல் சட்டென நடந்துவிட்ட விஷயத்தை எப்படி உணர்வாரோ அதுபோலவே முகபாவனையை காட்டியிருப்பது என்று பல காட்சிகள். அப்பா மாதிரி இவனும் எங்க ஓடிடுவானோன்னு நினைப்பதை படம் முழுக்க தன் கண்களில் வைத்துக்கொண்டு வலம் வந்திருக்கிறார் அமலா பால்.
என்ன ஒரு Boringஆன விஷயம்னா சித்தார்த் Narration பண்ணிக்கிட்டே இருக்கார் ஏதோ Forrest Gumpல Tom Hanks மாதிரி படம் முழுக்க அதான் கொஞ்சம் சொதப்புது.ரொம்ப நாளைக்கிப்பிறகு தமனுக்கு நல்ல பாடல்கள் அமைந்த படம் இது.”அழைப்பாயா” பாடல் வெகுவாகவே நம்மைக்கவர்கிறது. “சந்திப்போமா மறுபடி சந்திப்போமா” என்ற ‘உனக்கு 20 எனக்கு 18’ படத்தில் வரும் பாடல் போல இருப்பினும் ரசிக்கத்தான் வைக்கிறது  கடைசீல பின்னணீல வர்ற , அத்தனை பேருக்கும் நல்லதே நடக்குதுன்னு , நம்மள நெகிழ்ச்சியாக்கிற காட்சிகளுக்கு வர்ற பின்னணிப்பாட்டும் அருமை.எனினும் பின்னணி இசை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ‘அழுதகாதலி அண்ணா’ன்னு சொன்ன விக்னேஷ் ஆயிரம் வயலின்கள் சேர்ந்திசைக்கிற Symphony மாதிரின்னு காட்சிய விவரிக்கிற இடத்துல கூட ஒரு Music ஆல Feel கூட வரமாட்டேங்குது நமக்கு.
சரி என்ன காரணத்துக்காக Breakup ஆயிருச்சின்னு தெரியாமயே அப்டீயே இருந்துடுவீங்களான்னு நண்பனின் காதலி தனது CellPhoneஐக்கொடுத்து பேச வைக்கும் காட்சி முதலில் சிறு அலை வந்து அடிக்க, கொஞ்சம் கொஞ்சமாக அது பெரிய அலையாக அடிக்கத்தொடங்கி phone-ஐக் கட் பண்ணுமளவிற்கு செல்லும் காட்சி ஹ்ம்..ஹ்ம்..சான்ஸே இல்ல,, பேசணும்னு நினைச்சவன் தானே வலிய வந்து பேசிட்டானேன்னு உள்ள மகிழ்ச்சிய வெளிக்காட்டாம, ஆற்றமாட்டாமல், தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கையில், பழைய கலகங்கள் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்து அமலா Phone-ஐக்கட் பண்ணும் காட்சி அருமை. கோர்வையாக எந்த இடத்திலும் தொய்வில்லாமல் செல்கிறது. :-)
முன்னெல்லாம் வீட்ல அஞ்சாறு பிள்ளைகள் இருந்த காலங்களில் பெற்றோரின் கவனிப்புங்கறது கொஞ்சமும் சரியாக்கெடக்கிறதில்ல .ஏதோ பத்தோட பதினொண்ணுன்னு இருக்குற மாதிரிதான் எல்லாருக்கும் ஒரு Feeling. அதனால தான் விடலைப்பருவத்துல வீட்ல கிடைக்காத அன்பை ,கவனிப்பை வெளியில இன்னொரு பெண்கிட்டயோ , இல்ல பையன்கிட்டயோ எதிர்பார்த்த காலங்கள்ல வந்த காதல் நிலையா இருந்தது.இப்பத்தான் ஒண்ணுக்கு மேல பெத்துக்கிர்றதேயில்லயே, அதனால அந்தப்பிள்ளையே தன் உலகம்னு வாழ்ற பெற்றோர்கள் கிட்ட கிடைக்கிற அன்பும் பாசமும், அரவணைப்பும் வெளில எங்க கிடைக்கப்போகுதுன்னு நினைக்கிற இந்த காலகட்டத்துல நடக்கிற காதல்லாம் சும்மா Easyயா புட்டுக்குது, அதோட வீட்ல ஒரே பிள்ளைங்கறதால கேக்றதெல்லாம் கிடைக்கிறதும்,வீட்டுக்குள்ளயே போட்டீங்கறதும் இல்லாம போறதும்,விட்டுக்குடுத்துப்போகணும்ங்கறதுக்கான Chanceஏ இல்லாமப்போய்விடுவதும் கூட இதற்கான காரணங்கள்னு சொல்லலாம். இருந்தாலும் அமலா பாலிற்கு ஒரு அழுத்தமான மற்றும் கனமான பின்னணியிலான குடும்பச்சூழலை வைத்துக் கதை பின்னி விட்டு, முன்னர் சொன்ன மாதிரியான ஒரே பிள்ளை , ஏகக்கவனிப்புங்கற மாதிரி சித்தார்த்த வெச்சு, கொஞ்சம் பயந்தாங்கொள்ளியா ( இப்டி ஒரே புள்ளயா இருக்குறவன்லாம் அப்டித்தான் இருப்பான் , நான் நெறயப் பேரப்பாத்துருக்கேன்  ) காட்டி, ரெண்டு பேரும் காதலில் முட்டிக்கிர்றாங்கங்கற முடிச்சு ரொம்பவே நல்லாருக்கு. அமலா பாலின் நினைவில் எப்பவுமே அவரோட அப்பாதான் இருக்கார், அதனாலேயே அவருக்கு அவ்வளவு சீக்கிரம் சித்தார்த் மேல நம்பிக்கை வர்றதேயில்ல படம் முழுக்க.அதே சிந்தனையிலேயே எப்பவும் இருக்குறதால , அவன் திரும்பி வரும்போதெல்லாம், இதுக்கு இவ்வளவு நாள் ஆச்சான்னு கேக்றதும் Class Sir.. :-)
காடு,மலைன்னு சுத்தி மைனாவில காதலிச்சு, வேட்டைல கொஞ்சம் கிராமத்துப்பொண்ணா தையத்தக்கான்னு ஆடிப்பாடி காதலிச்சு, இந்தப்படத்துல சுடிதார்லாம் போட்டுக்கிட்டு, சித்தார்த்த காதலிச்சுக்கிட்டு , ஆமா இந்த தமிழ்ப்படத்துல வர்ற தலைவிகள் காதலிக்கிறத/காதலிக்கப்பட்றதத் தவிர வேற வேலையே செய்யமாட்டாங்களா,?! 
சிவா மனசுல சக்தி, கண்டேன் காதலை, இது மாதிரி கொஞ்சம் “கலகம்,காதல், இசை “ங்கற மாதிரியான படங்கள ஞாபகப்படுத்தினாலும் இது ஒரு புதிய Genre.:-)) கொஞ்சம் உண்மயச்சொன்னா அதிகம் பேசுனாலே எந்த விஷயத்திலயும் முடிவுங்கறதே எட்ட முடியாது , அதுக்காக மன்மோகன் சிங் மாதிரி எப்பவுமே Silent Moodலயும் இருந்தாலும் உருப்படாது.ஆனாலும் பேச்சு ரொம்பவே ஓவர் படம் முழுக்க. படத்துக்குபேரு “ காதலில் கதைப்பது எப்படி ”ன்னு வெச்சிருக்கலாம் போல  ஊடல்ல இருக்கிற இடங்கள்ல கூட காதலனும் காதலியும் வேற யார்கூடவாவது பேசிக்கிட்டேதான் இருக்காங்க..ஹ்ம்..என்னத்த சொல்றது ,,இவ்வளவெல்லாம் பேசுனா,இதுக்கு மேலயும் பேசுனா என் காதலிக்கு பிடிக்கவே பிடிக்காது..அதனால படத்த நீங்களே போய் தியேட்டர்ல பாத்துக்குங்க…

சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationவிளையாட்டும் விதியும்மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *