பீஹார் எங்கிருக்கிறது என்று ஆரம்பித்து ஆரம்ப வகுப்பு எடுக்கவில்லை. எங்கு இருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரம், தமிழகம் எங்கிருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரத்தோடு அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. ஆனால் பீஹாரிகள் தோல் நிறமும் தமிழர்களில் நிறமும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதைக் காணலாம். இதை அனுபவத்தில் காண்பது சிறப்பு: பட்னாவில் நடந்து போகும் தமிழன் ஒருவனை அங்கிருப்பவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதே வண்ணம் இங்கு ஒரு பீஹாரி நடந்து சொல்லின் தமிழர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இருப்பினும் பிரச்சினை மொழியால் வருகிறது. பீஹாரிகள் போஜ்புரி, அல்லது போஜ்புரி கலந்த இந்தியைத் தவிர வேறு மொழியைக் கற்பதுமில்லை; பேச விரும்புவதுமில்லை. பீஹாரை விட்டு இரு தலைமுறைகளாகும்போது மட்டுமே அவர்கள் ஆங்கிலம் தெளிவாகவும், அவ்வூர் மொழியை விரும்பியும் பேசுவர். காங்கிரசு தலைவர் டிவாரி ஒரு எ.கா. இந்நிலை ஏற்படக்காரணம் கிராம வாழ்க்கை; அதன் படிநிலை வாழ்க்கை; ஜாதிமுறை வாழ்க்கை. ஜாதிப்பேயால் பீடிக்கப்பட்ட மாநிலங்களில் பீஹாரே முதலில் வரும்! ஒருவித தாழ்வு மனப்பான்மையை இது அவர்களுக்குள் ஏற்படுத்த அவர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளிமாநிலம் வரும்போது ஒன்றாக இறுக்கிக்கொண்டு வாழ, அது பார்ப்போருக்கு அவர்கள் தம்மின வெறியர்களோ என்ற மேலோட்ட எண்ணத்தை உருவாக்கும். அது தவறு. அவர்களுக்கு மேட்டிமை உணர்வு கிடையாது. தாழ்வு மனப்ப்பான்மையே. இதனால் அவர்கள் எங்கு சென்றாலும் தம் கலாச்சார வாழ்க்கையைக் கூடி ஒன்றாக வாழ்கின்றனர். பம்பாய், தில்லி மாநகரங்களில் இப்படி வாழ்வதால் அவர்கள் தனித்து அடையாளங்காணப்படுகிறார்கள். தில்லியில் அவர்களை எவரும் ஒன்றும் செய்வதில்லை அங்கு அரசியல் சக்தியாக அவர்கள் விளங்குவதால். பம்பாயில் அந்நிலையில்லை.
இப்படி கூலிகளாக இவர்கள் இருக்கும்போது மராட்டியர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அரசு பணிகளில் – இரயில்வே, வங்கி, போன்றவற்றில் – கூட்டமாக இவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றவுடந்தான் மராட்டியர்கள் கிளர்ந்தெழுந்து இவர்களை அடித்து விரட்டினார்கள். இதே செயல் அசாமிலும் நடந்தது. தொடர்ந்து சிவசேனா இவர்களை அடித்து விரட்டியதால். இவர்களைக் கூலிவேலைகளில் அமர்த்தி தம் வாழ்க்கை வசதி காணும் கண்காணிகள் (ஏஜென்டுகள்) இவர்களை பம்பாய்க்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டு, தென் மாநிலங்களுக்கு அனுப்பத் தொடங்கி விட்டார்கள். இவர்களும் தாமாகவே வங்கி, இரயில்வே வேலைகளுக்கு விண்ணப்பித்து பெருமளவில் கிளார்க் பதவிகளில் அமரத் தொடங்கி விட்டார்கள். தமிழ், மலையாள இளைஞர்கள் தகவல் தொழில் நுட்பத்துறைக்கே செல்வதால், அரசில் கிளார்க் லெவல் பணிகளுக்கு இவர்கள் வர இலகுவாகுகிறது. பீஹாரிகளில் ஓபிசி, தலித்துகள் எண்ணிக்கை அதிகம். இட ஒதுக்கீட்டால் ஓபிசி இடங்களை இவர்கள் பிடித்து இங்கு வேலையில் அமர்கிறார்கள். பீஹார் பிராமணர்கள் – பீஹாரை விட்டு வெளிவருவதில்லை, வந்தாலும் பெரிய பதவியில் அமர்ந்தவர்களாகத்தான் வருவார்கள். நான் அண்மையில் திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலி வந்த போது, திருவனந்தபுரத்தில் பீஹாரி புக்கிங் கிளார்க்கிடம் டிக்கட் வாங்கி டிக்கட் பரிசோதகரிடம் காட்டினேன் பயணத்தில். வண்டியில் கார்டும் பீஹாரியே. நல்லவேளை ஓட்டுனர் மலையாளி.
போனவாண்டு ஒரு செய்தி பரபரப்பானது: ஆங்கிலம் தெரியா ஒரு தமிழ்ப்பெண் மயிலாப்பூர் ரயில் முன்பதிவு கவுண்டரில் தமிழில் எழுதிய விண்ணப்பத்தைக் கொடுக்க, பீஹாரி கிளார்க அதைக்கிழித்தெறிந்து விட்டு, ‘ஆங்கிலத்தில் கொண்டுவா!’ என எரிச்சலுடன் சொன்னானாம்! அவள் சத்தம்போட அது நாளிதழ்களில் மறுநாள் வெளிவந்தது.
இதாவது அரசுப்பணிகள்; மற்ற கூலிவேலைகளுக்காக ஏஜென்டுகள் அழைத்துவரும் பீஹார் இளைஞர்கள் தமிழக கிராமங்களில் பெருகி வருகிறார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டக் கிராமங்களில் இவர்களைக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். எந்த பீஹாரியும் தமது மாநிலத்துக்குத் திரும்புவதேயில்லை. அவர்கள் பூமியில் அவர்களுக்கு வாழ்க்கையில்லை. எனவே தில்லிக்குச் சென்றாலும், பம்பாய்க்குச் சென்றாலும், சென்னைக்கோ, திருநெல்வேலிக்கோ சென்றாலும் தற்போது திருவனந்தபுரத்துக்குச் சென்றாலும், அவர்கள் நிரந்தரக் குடிகளாகி விடுகிறார்கள்.
எனினும் அவர்கள் உள்ளூர் மக்களுடன் ஒட்டுவதில்லை. மொழி தடுக்கிறது. உள்ளூர் மக்களும் இவர்களை வெறுக்கத் தொடங்கிவிட்டதை இவர்களும் உணரத்தொடங்கி விட அது பெரிய இடைவெளியை உருவாக்கி வருகிறது. இப்போது வங்கிக்கொள்ளைகள், என்கவுண்டர்கள் என்று போவதால், இவர்கள் மேலும் மேலும் அன்னியப்படுத்தப் படுத்தப்படுகிறார்கள். உள்ளூர் மக்கள் இவர்களை என்ன செய்தாலும் தகும் என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். நான் திருச்சூரில் இருந்த போது, இரு பீஹார் இளைஞர்கள் அடித்தே கொல்லப்பட்டார்கள் பொதுமக்களால். காரணம் அவ்வூரில் பலவீடுகளில் தொடர் கொள்ளைகள் நடக்க, இந்த இளைஞர்கள் இந்தியில் பேசிக்கொண்டு பஜாரில் நின்றதைப் பார்த்த சிலர் இவர்கள் ஏதோ புரியாத மொழியில் பேசிக் கொள்ளையடிக்க சதித்திட்டம் வகுக்கிறார்கள் என்று எல்லாரையும் கூட்ட இவ்விளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். பின்னர் அவர்கள் அப்பாவிகள் என வெளித் தெரிந்தது.
இந்திய இறையாண்மையின்படி எவரும் எங்கேயும் போய் பிழைக்கலாம்; குடியேறலாம். பீஹாரிகளைத் தமிழகம் தடுக்கமுடியாது. தமிழர்களே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என தம்பட்டம் அடித்துக்கொண்டு சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இப்போது அமெரிக்காவுக்கும், பிழைக்கப்போய் நிரந்தரமாகக் குடியேறும்போது, எப்படி பீஹாரிகளை ‘இங்கே வராதே!’ என்று சொல்லமுடியும்? “இல்லை…நீ தப்பாச் சொல்றே எங்களைப்பத்தி! “நாங்கெல்லாம் ஸ்கில்ட் லேபர். புரொஃபஷனல்ஸ்!”‘ என்றால், பம்பாயில் தமிழகத் தென்மாவட்டங்களிலிருந்து தமிழர்கள் லட்சக்கணக்கில் 60களில் குடியேறியதையும் (இன்று நிரந்தரக்குடிகளாகி தாராவியில் வாழ), வலைகுடா நாடுகளில் கூலிகளாகப் போய் அடிநிலை வாழ்க்கை வாழும் நீங்கள், பீஹாரி இளைஞர்கள் “அன்ஸ்கில்ட் லேபர்தானே?” என்றெல்லாம் சொல்லித்தட்ட முடியாது !
‘மார்வாடிகளும் பஞ்சாபிகளும் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழகத்தில் குடியேறவில்லையா? எனினும் பீஹாரிகள் வெறுக்கப்பட காரணம் அவர்கள் தோற்றம் தமிழனைப் போல இருப்பதாலும், அவர்களில் பெரும்பான்மையினர் கூலி வேலைக்கே தகுதியுள்ளவர்களாகவும் இருப்பதாலும். இந்த வெறுப்பு எப்படிச்சரியாகும்? வெளிர் நிறத்துக்கு சலாம் போடும் கேவலமான சிந்தனை கொண்டவன் தமிழன். எனவேதான் தன்னைப்போல் கருமை நிறம்கொண்ட தலித்துக்களை வெறுத்து வெளிர் நிறம் கொண்ட வந்தேறிகளுக்கு வணக்கம் சொல்கிறான். இரு தலைமுறைகள் போனபின் பீஹாரிகள் நன்றாகத் தமிழ் பேசுவார்கள்; புதிய கலாச்சாரத்தைத் தமிழக கலாச்சாரத்தின் ஒரு பங்களிப்பாகச் செய்வர். பொங்கல் கொண்டாடுவர், துர்கா பூஜாவும் கொண்டாடுவர். இவர்களைப் பிடிக்கப் பெந்தோஸ்தோவினர் வருவார்கள்; மாபெரும் வெற்றி காண்பார்கள்.
500 ஆண்டுகளுக்குமுன் வந்த சவுராட்டியர்கள் தமிழ் வாழ்க்கையில் கலக்கவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு வந்த தெலுங்கர்கள், திருமலை நாயக்கர் பிறந்த நாளை வருடந்தோறும் கொண்டாட ஒட்டும் சுவரோட்டிகளில் ‘தெலுங்கினமே திரண்டுவா!’ என்று கொக்கரிக்கிறார்கள்; மார்வாடிகள் சவுகர்பேட்டையில் இந்தி தினசரிகள் படித்து, தமிழை ஏதோ அருவருப்பான மொழிபோல கொஞ்சமாக மட்டும் பேசி வாழ்ந்து வருகிறார்கள். பஞ்சாபிகள் தமிழரை விட தாம் உயர்ந்தோர் என நினைப்பிலே தனியாகத்தான் வாழ்கிறார்கள்; தமிழ்ப்பார்ப்ப்னர்களிடம் நிரந்தர பிணக்கு இருக்கிறது. அவர்கள் வடமொழியின் மஹாத்மியத்தை என்றுமே விடுவதில்லை. இன்றும் ‘தமிழா? வடமொழியா?’ என்ற பிரச்சினைக்கு அவர்கள் முடிவு காணவில்லை. இக்கேள்வியைத் திண்ணையில் கட்டுரையாக வைத்து “தமிழே!” என எழுதிப்பாருங்கள். உங்களிடம் மல்லுக்கட்ட ஒரு கூட்டமே ஓடி வரும். ‘வியக்தி’யென்றும் ‘மஹோதய’ என்று இன்றும் எழுதி தங்களை தாங்கள் என்றுமே தமிழ்ப்பகைவர்கள்தான் என்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இல்லையா?
தமிழ்ப்பகைவர்கள் ஆதிகாலத்திலிருந்தே தமிழகத்தில் உண்டு. தமிழை எதிர்ப்பவரும் தமிழ் மக்களின் தொல்கலாச்சாரத்தைப் பகடி பண்ணி வாழும் மேட்டிமைத்தன்மை கொண்டோர் சிறப்பாக வாழும் தமிழகத்தில் தாம் இவர்களைவிட உயரந்தோரில்லை என்றவுணர்வுடைய பீஹாரிகள் தமிழையும் தமிழ்மக்களையும் நேசிப்பார்கள். இன்று தமிழ்தெரியா அன்னிய உணர்வுடனிருப்பதால் தமிழ் மக்கள் மேல் ஈடுபாடும் ஒட்டுறவும் இல்லை. அது தானாகவே வரும். அதற்கு இரு தலைமுறைகள் ஆகும்.
“அது சரி! வந்த இடத்தில் இவர்கள் கொள்ளையடிக்கிறார்களே! நாங்கள் வலைகுடா நாடுகளில் கொள்ளையடிக்கிறோமோ?” என்றால், வலைகுடா நாடுகளில் பீஹாரிகளும் கொள்ளையடிக்கவில்லை; அந்நாட்டுச் சட்டங்கள் கடுமை. பம்பாயில் கள்ளச்சாரயம், விபச்சாரம் என தமிழர்கள் தாராவியில் பண்ணிக்கொண்டிருக்கவில்லையா ? நாயகன் படத்தில் காட்டப்படுவது முழுக்கக் கற்பனையன்று. வந்தேறும் ஆயிரக்கணக்கான பீஹாரிகளில் ஒரு சிலர் கொள்ளைக்காரர்களாக மாறுவதால், அதை ஊடகங்கள் உரக்கச்சொல்வதால் அனைவரும் மோசம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் அவர்கள்.
தமிழ் இளைஞர்கள் அவர்களை வேற்று மனிதர்களாகப் பார்க்காமல் பழகும்போது, தமிழும் தமிழர் வாழ்க்கையும் அவர்களுக்குப் புரிய வரும். தாம் இவர்களை விட உயர்ந்தோர் என்ற மேட்டிமையுணர்ச்சியில்லையாதாலால், அவர்கள் கலப்பு நன்றாக நடக்கும். பீஹாரிகளைத் தடுக்க முடியாது.
******
- “தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”
- காற்றின் கவிதை
- மகளிர் தினமும் காமட்டிபுரமும்
- நன்றி கூறுவேன்…
- நன்றி. வணக்கம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை
- நிஜங்களுக்கான பயணிப்புக்கள்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2
- பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி
- பழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 33
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்
- பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.
- தென்கச்சியார் கூறும் மருத்துவக் குறிப்புகள்
- சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை
- பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16
- வியாசனின் ‘ காதல் பாதை ‘
- கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை
- கன்யாகுமரியின் குற்றாலம்
- முல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை
- தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை
- வழிமேல் விழிவைத்து…….!
- அந்த முடிச்சு!
- கசீரின் யாழ்
- ஷிவானி
- வசந்தபாலனின் ‘ அரவான் ‘
- உழுதவன் கணக்கு
- மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? – புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?
- பருந்தானவன்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.
- நீ, நான், நேசம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழா
- முன்னணியின் பின்னணிகள் – 30
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது
- பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்
- ”சா (கா) யமே இது பொய்யடா…!”
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 13
- விளையாட்டும் விதியும்
- காதலில் கதைப்பது எப்படி ?!
- மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்
- அச்சாணி…
- கணேசபுரத்து ஜமீன்
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)