This entry is part 11 of 36 in the series 18 மார்ச் 2012

உடல் நொறுங்கி சரிய
சபை அதிர்ந்தது
சூதாடி தலைதொங்கியவன்களின்
முகம் உமிழ்ந்த எச்சிலால்

சபதம் நிறைவு கொள்ள
பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம்
பூசி முடிந்த கூந்தலுள்
ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக
நீராடி கேசம் நீவிய
துரோபதையை பிறப்பித்தது

குளித்து வந்த மதுவாகினியின்
கூந்தலில் வடிந்த நீர்த்துளிகள்…

Series Navigationமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வைநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்