பதின்பருவம் உறைந்த இடம்

This entry is part 7 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இயலுமானால்
சுவர் அலமாரியின்
இரண்டாம் தட்டை
இடிக்காமல் விடுங்கள் …

உடைந்த மரப்பாச்சி,
கறுத்த தாயக்கட்டைகள்,
தொலைந்த சோழிக்கு மாற்றான
புளியங்கொட்டைகள்,
ஆத்தாவின் சுருக்குப்பை,
ஜோடியோ திருகோ
தொலைந்த காதணிகள்,
அருந்த பிளாஸ்டிக் மாலை
கோர்க்கும் நரம்பு ,
கல்யாணமாகிப்போய்விட்ட
நிர்மலா தந்துசென்ற
கமல் படம் ….
எதுவுமே காணாவிடினும்
காண்பதுபோல்
கண்டுகொள்ளமுடியும்
இரண்டாம் தட்டு இருக்குமானால்…
உமாமோகன்

Series Navigationமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4
author

உமாமோகன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *