ஆர்யா பட்டாவின், விதை இந்திய மண்ணில், கிமு 476ல் விழுந்தது.
அவர், தனது 23 வயதில், ஆர்யபாட்டியம் எழுதினார். கணக்கின் சுவாசக்குழுக்குள் விரலைவிட்டு ஆட்டியவர். அல்ஜீப்ராவின்
இதய ஒலியை கேட்டறிந்தவர். வான சாஸ்த்திரத்தின் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவர்.
பிரம்ம குப்தா, வான சாஸ்த்திரத்தின் நூலை எழுதி, ஆர்யபட்டாவின்
அறிவு தளத்தில் புகுந்து, வானசாஸ்திரத்தை உலகிற்கு எடுத்து சொன்னவர்.
பாஸ்கர ஆச்சார்யா கிமு 1114 ல், இந்திய மண்ணில் பிறந்தவர்.இவர், ஆர்யபட்டாவின், விதிகளை கடைப்பிடித்து, பூஜ்ஜியத்திற்கு, விடைக்கண்டுப்பிடித்து, இந்தியாவின் பெருமையை, உலகிற்கு பறைச்சாட்டியவர்.
ஆல்பர் என்ஸ்டின், இந்த இந்திய மண்ணின் கணக்கு சாஸ்திரம்தான், உலகிற்கே , வானசாஸ்திரத்திற்கும், மேன்நிலை கணிதத்திற்கும் வழிகாட்டி என, புகழாராம் சூட்டி, அவரது,கண்டு பிடிப்பிற்கே, அவர்கள்தான், வழிகாட்டிகள் என பெருமை பட்டுக்கொண்டார். உலக்கத்தவர்கள், இந்தியர்களுக்கு கடமைப்பட்டவர்கள், என கூறினார்.
மீண்டும், ஒரு துருவ நட்சத்திரம் , கும்பகோண மண்ணில்,
கணித வடிவில் பிறந்தது. அவர் தான், இராமானுஜம். அவரது கணித தீரங்களை, இன்னும் யாரும் முடிக்க முடியாமல், திணறுவாத சொல்கின்றனர்.
நாம் வாழும் காலத்திலேயே, சர்.சி,வி.ராமன், சந்திரசேகர் போன்ற மேதைகளும் தோன்றி உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மண்னும், பல திறமை சாலி, கணக்கு புலிகளை தந்துள்ளதாக, நமது விஞ்ஞான மேதையும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
அத்யபக் ரத்ன தோதாத்திரி, கால்குலஸ் சீனிவாசன், போன்றவர்களை குறிப்பிடுகின்றார்.
நமது, முன்னோர்கள், கலை, இலக்கியம், விஞ்ஞானம், கணிதம், இசை, நாட்டியம், அரசியல் போன்ற துறைகளின் வழிக்காட்டியாக
விளங்கியுள்ளனர்.
பின்னால் வந்த அரசியல்வாதிகளால், இந்தியாவின் பெருமை, சிறுமைப்பட்டாலும், விஞ்ஞானத்தின் விதை மட்டும், விருட்சமாக விளங்கி, இன்னும், உலகிற்கே வழிகாட்டியாகவும், வளர்ந்த நாடுகளின் வரிசையில் இன்று இடமும் பிடித்துள்ளது.
அக்னி 5 ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் சோதனையில் வெற்றி பாதையை நோக்கி சென்றுள்ளது. இது, இந்தியர்களின் வான நூல் அறிவையும், வல்லுனர்களின் திறமையையும் நீருப்பித்துள்ளது.
இந்தியா ஏவுகணை சக்தி நாடாக விளங்குகின்றது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சைனா போன்ற நாடுகளுடன், தற்போது இந்தியாவும் சேர்ந்து பெருமை கொள்ளும் நாடாக திகழ்கின்றது.
சைனா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு, இச்சோதனை வெற்றி, ஒரு சவாலாகவும், கவனமாகவும் இருக்க செய்துள்ளது. நாம், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; அதே நேரத்தில், அகிம்சா வழியில் இந்த நாடுநடை போடும் எனற கொள்கையை, நாம் மகாத்மா காந்தி மூலம், உணர்த்தியுள்ளோம்.
இந்தியாவும்- சைனாவும் ஒற்றுமையாக இருக்க, முதலாளியத்து நாடுகள் விரும்புகினறன. ஏனெனில், அவர்களுடைய வியாபார சந்தையே, இந்தியாதான்.
மேலை நாட்டு, சோதனைக்கூடமும் இந்தியா தான். இரண்டாம் தர, மருத்துவ சோதனைகளும், வளர்ந்த நாடுகளால், சப்தமின்றி நடந்தேறுகின்றது. இதற்கும் இந்திய மண்தான் பலிகடாவா?
யார் செய்த புண்ணியமோ, இந்த அரசியல் வாதிகள், இன்னும் வளருகின்ற விஞ்ஞானத்தின் மேல் கைவைக்காமல், இருக்கின்றனர். ஏற்கனவே, சாதி சண்டையும், வகுப்புவாத பிரிவினை, கோட்டா சிஸ்டம் போன்றவற்றால், பல் புத்திசாலியான இந்திய மண்டைகள், அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், மூளை வியாபாரியாக மாறி விட்டனர். ஏதோ, அப்துல் கலாம் போன்ற மேதைகள், நாட்டுப்பற்றுக் காரணமாக, இந்தியாவின் விஞ்ஞான அறிவை, இந்த நாட்டின் வளர்ச்சிக்கே, அர்ப்பணித்துள்ளனர்.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் விஞ்ஞானி வி.கே. சரஸ்வத் மற்றும் அவரது விஞ்ஞான குழுவிற்கு, நாம் தலை வணங்கி, வணக்கம் செய்தல் வேண்டும்.
காகிதம் செய்வோம், நல்ல ஆயுதம் செய்வோம்.
=======================================
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை