சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில் மூன்று சாதிகளாகப் பிரிக்க இயன்றது என்பது அந்த அந்த சாதி பற்றிப் படிக்கும் போதே தெரிந்து விடும்.
அ.மனிதர் என்னும் சாதி
—————————
நேர்மறையான அடையாளங்கள்:
1.தன்மானம் போற்றுவார். அதே போல் யாரையும் அவமானம் செய்ய மாட்டார். தனக்கு வலிப்பது போலத்தான் மற்றவ்னுக்கும் வலிக்கும் என்னும் அடிப்படையில் மற்றவரது உரிமைகளை, சுதந்திரத்தை மதிப்பார். குறிப்பாக மாற்றுக்கருத்துள்ளோரின் கருத்துச் சுதந்திரத்தை.
2.காண்கிற கனவெல்லாம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த மேன்மைக்காக இருக்கும்.
3.தனது மேம்பாடு பற்றி சிந்தித்தாலும் அது சமுதாயத்தின் உயர்வுக்கான பணிகளில் தலைமை ஏற்கும் விதமானதாக இருக்கிறதா என்று ஆழ்ந்து நோக்குவார்.
4.கடவுளிடம் செய்யும் பிரார்த்தனைகளில் மனித குலம் உய்யும் பிரார்த்தனை கண்டிப்பாக இருக்கும்.
5.மதம் என்பதும் ஆன்மீகம் என்பதும் வெவ்வேறானவை என்பதைத் தெளிவாக அறிவார்.
6.இது மத நூலில் உள்ளது, இது தாத்தா சொன்னது, இது அரசியல் தலைவன் சொன்னது என்று எதையும் கண் மூடித்தனமாக ஏற்காமல் சீர்தூக்கிப் பார்த்து சரியானதை மட்டுமே ஏற்பார்.
7.பெற்றவரோ மற்றவரோ உறவோ ஊரோ யாராயினும் நியாயத்தை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவார். தன் பக்கம் நியாயம் இருப்பது என்பது வேறு நியாயத்தின் பக்கம் தான் இருப்பது வேறு என்பதை நன்கு உணர்ந்தவர்.
8.தன்னலமும் , துய்க்கும் வேட்கையும் தனது சமநிலையை அனேகமாய் பாதிக்கும் என்பதை உணர்ந்து தனது முடிவுகளையும் போக்குகளையும் சிந்தனைத்தடத்தையும் தானே சுய விமர்சனம் செய்து முடிவெடுப்பார்.
9.தான் எடுக்கும் எந்த ஒரு முடிவின் அடிப்படையும் சுயநலம் அற்றதாயும், பொது நலம் பேணுவதாயும் இருக்கிறதா என்று தெளிவாக ஆய்ந்தே முடிவெடுப்பார்.
10.மதம், இனம், மொழி, பண்பாடு இவை தன்னால் காப்பாற்றப் பட வேண்டிய அளவு பலவீனமாவை ஆகா என்பதையும் இவை சம்பந்த பற்ற உணர்வுகள் யாவையும் கிணற்றுத் தவளைகளின் போக்கே என்பதையும் ஒருங்கே உணர்ந்திருப்பார்.
11.தனது ஆதரிப்போ எதிர்ப்போ இரண்டுமே விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையும் சிந்தனையும் கொண்டது என்பதில் தெளிவாக இருப்பார்.
12.தனிமையையும், தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையையும் கடைப்பிடிப்பார்.
13.தான் கொண்டாடும் கொள்கைகளுக்கும் தனது நிஜ வாழ்க்கைக்கும் இடைவெளி இருக்கிறதா எந்த அளவு என்பதை கவனமாக அவதானித்துக் கொண்டே இருப்பார்.
14.வாழும் வரை மனித நேயத்துடன் வாழ்ந்து மடியும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பார்.
எதிர்மறையான அடையாளங்கள்:
1.தோலின் நிறம், வருமானம், சாதி, மதம், செல்வாக்கு, பால் என்னும் எந்த அடிப்படையில் மனிதர்களுள் உயர்வு தாழ்வு காண மாட்டார்.
2.குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், தலித்துகள், சிறுபான்மையினர் இவர்களின் உரிமைகளை மதித்து அவர்களுக்கு ஊறு செய்யும் எந்தப் போக்கையும் அனுமதிக்க மாட்டார்.
3.மாற்றங்களை எதிர்க்கும், தேக்க நிலையை ஆதரிக்கும் சிந்தனைத் தடத்தில் உள்ளோரோடு இணங்க மாட்டார்.
4.தனக்கு வசதிப்படுகிறதே என்பதற்காக நடுநிலையிலிருந்தோ நியாயத்தின் பக்கம் நிற்பதிலிருந்தோ விலக மாட்டார்.
5.எந்த ஒரு சூழலிலும் தான் உறுதியாக நம்பும் கொள்கைகளில் மற்றும் வழி முறைகளில் சமாதானம் செய்து கொள்ள மாட்டார். அதே சமயம் தான் கொண்ட நம்பிக்கையும், சிந்தனைத் தடமும் சரியான திசையில் இல்லை என்று நிறுவப்பட்டால் தனது போக்கை மாற்றிக் கொண்டு அதை வெளிப்படையாய் ஒப்புக் கொள்ளத் தயங்க மாட்டார்.
6.குறுகி, குழுக்களாகவும், ஒட்டுமொத்த சமூக நோக்கற்றதுமாய் இயங்கும் எந்த அமைப்புடனும் சேர மாட்டார்.
7.திசையும் தெளிவுமற்ற வறட்டுத்தனமான வெட்டி வாத விவாதங்களைத் தவிர்ப்பார். வம்பர்களிடமிருந்து விலகுவதில் எந்தத் தயக்கமும் காட்ட மாட்டார்.
8.அரசியலின் அரசியல்வாதிகளின் ஏற்ற இறக்கம் பற்றிய விவாதங்கள், தனது இயங்கு வட்டத்துக்குள் அரசியல் நடவடிக்கைகள் இவற்றில் ஈடுபட மாட்டார்.
9.போலியான பேச்சு, செயற்பாடு மற்றும் போலியான ஒரு பெருமிதமிகுந்த ஆளுமையைக் கட்டமைப்பது இவை இவர் அறியாதவை.
ஆ.மனிதத் தோற்றம் உள்ளோர் என்னும் சாதி:
——————————
மேற்குறிப்பிட்ட இயல்புகளுள் எதுவும் தன்னிடம் இருப்பது போல் வசதிக்கு ஏற்ப , சூழ்நிலைக்கு ஏற்ப, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, தன்னலம் என்னும் அடிப்படையில் மட்டும் பலவிதமான அவதாரங்கள் எடுத்து, சச்சரவு என்றால் ஒதுங்கி, வசதி வாய்ப்பு, வலிந்தோர், நலிந்தோர் என ஆளுக்கேற்ப ஒரு நீதி பேசி வாழ்க்கையைச் சுவாரசியமாகவும், பொழுது போக்கும் விதமாகவும் கழித்து வருவார். சுருக்கமாகச் சொன்னால் சௌகரியமான ‘சமாதானப் புறா’.
இ.மிருக ஜாதி:
—————–
திட்டமிட்டு அரசியல், வன்முறை, அபகரிப்பு எதை வேண்டுமானாலும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ செய்து, மனித சாதி விழுமியங்கள் எதிலும் ஈடுபாடு அற்று, தானும் தன் வாரிசுகளும் நிறைந்த செல்வமும், அதிகாரமும் பெற்று வாழ சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ-அரசியலிலோ, வேறு துறையிலோ – வேட்டையாடி இயங்கும் மனிதத் தோல் போர்த்திய மிருகங்கள். வேடங்களும், கபடமும் இவருக்கு மிகவும் கை வந்தவை. மனித உரிமைகள், மனித நேயம் இவருக்கு அன்னியமானவை.
- ரங்கராட்டினம்
- சே.ரா.கோபாலனின் “ மை “
- தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
- ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
- குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
- முள்வெளி அத்தியாயம் -6
- சாதி மூன்றொழிய வேறில்லை
- பணம்
- வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்
- 2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்
- ரோஜா ரோஜாவல்ல….
- வேறோர் பரிமாணம்…
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
- விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “
- தங்கம் 4 – நகை கண்காட்சி
- பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
- கடவுளும் கடவுளும்
- நூபுர கங்கை
- அக்கினி புத்திரி
- மறு முகம்
- ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு
- முன்னால் வந்தவன்
- பள்ளிப்படை
- நியாயப் படுத்தாத தண்டனைகள்..!