தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்?
தோடு, வளையல், அட்டிகை, ஒட்டியாணம், மோதிரம், வங்கி, காப்பு இவையெல்லாம் தான் நாம் அறிந்தவை. ஆனால் மற்ற நாட்டவர்கள் அதை பல்வேறு விதமாக பயன்படுத்த முயல்கிறார்கள். அவை பெரும்பாலும் விளம்பரத்திற்கென்றாலும், செய்திருக்கும் பொருட்கள் விசித்திரமானவை.
சென்ற ஆண்டு 2011 முடிவில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஜப்பானைச் சேர்ந்த தனாகா என்பவர், ஒரு தங்க கிறிஸ்துமஸ் மரத்தையே உருவாக்கியிருந்தார். அவர் டோக்கியோவின் முக்கிய வணிகச் சந்தையான கின்சாவில் சிறந்த நகைக்கடையை வைத்திருப்பவர். 12 கிலோ எடையில், 2.4 உயரம் கொண்ட இந்த மரம் பலரையும் கவர்ந்தது. இது 20 இலட்ச அமெரிக்க டாலர்கள், 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், இத்தகைய தங்க மரத்தை உருவாக்கியிருப்பது மிகவும் விசேடமானது.
மரமே தங்கம் என்றால் கேட்கவும் வேண்டுமா? அதுவும் எந்தக் உலோகத்தையும் கலக்காமல் சொக்கத் தங்கத்தில் ஆன மரமென்றால் எப்படி இருக்கும். அதில் 60 இதயச் சின்னங்களும், தங்க ரிப்பன்களும் அமைக்கப்பட்டிருந்தன. தானாகா லேசுப்பட்ட ஆள் அல்ல. அவர் 2006ஆம் வருடம் கிட்டத்தட்ட 9 இலட்சம் டாலர்கள் மதிப்புள்ள தங்க மரத்தை உருவாக்கியவர். அதற்கு முன்னர், ஜப்பானிய இளவரசர் பிறந்த போது தங்க குதிரையைச் செய்து கொடுத்தவரும் கூட.
2011இன்றின் தங்க உருவமைப்பின் விசித்திரத்தைப் பற்றிப் பேசும் போது 2010இன் 110 இலட்ச டாலர்கள் மதிப்புக் கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. ஆம்.. துபாய் நகரில் இருக்கும் எமரைட்ஸ் பேலஸ் ஹோட்டல் எனும் ஏழு நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு இத்தகைய மரத்தை உருவாக்கி சுற்றுலா பயணிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர் இந்த விடுதி அமைப்பாளர்கள்.
மற்ற எல்லா கிறிஸ்துமஸ் மரங்களைப் போன்றே இம்மரமும் 13 மீட்டர் உயரத்துடன் அமைக்கப்பட்டது. மரம் மட்டுமே 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதை அலங்கரிக்கக் கூடிய பொருள்கள் அனைத்தும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், முத்து, மரகதம் என்று விலையுயர்ந்த பொருட்களாக இருந்தன. சிறு சிறு வெள்ளை நிற விளக்குகளுடன் அட்டிகை, தோடுகள், மாலைகள் என்று அந்த மரத்தின் மதிப்பை உயர்த்திய ஆபரணங்கள் மரத்தில் ஆங்காங்கே தொங்க விடப்பட்டிருந்தன.
தங்க முலாம் பூசிய 14000 ஜன்னல்கள் கொண்ட கட்டடம் கனடா நாட்டின் டொரான்டோ நகரில் உள்ளது. ராயல் பேன்க் பிளாசா என்ற இந்தக் கட்டடத்தில் சுற்றுப்புற சூழலை நன்கு வைத்துக் கொள்ள வேண்டி, சூரியக் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க இதன் ஜன்னல்களை 70 கிலோ தங்கத்தால் மூலாம் பூசப்பட்டுள்ளது.
உள்பக்கம் குளிர் காலங்களில் கதகதப்பாகவும், வெயில் காலங்களில் இதமாகவும் இருக்க தங்கத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தங்கத்திற்கு கதிர் வீச்சினை தடுக்கும் ஆற்றல் இருப்பதன் காரணமே இக்கட்டடம் இப்படி உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் இனிப்பு வகைகள் மிகவும் பிரபலம். சில இனிப்பு வகைகள் தங்கத் தகடுகளாலும் வெள்ளித் தகடுகளாலும் சுற்றப்பட்டு விற்கப்படுகின்றன. அவை உண்மையில் தங்கம் வெள்ளியாக இருக்குமா என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழும். உண்மையிலேயே தங்க வெள்ளித் தகடுகளைக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளும் இந்தியாவில் விற்கப்பட்டே வருகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு, பெங்களுர் நகரில் ஒரு விடுதியாளர், தாங்கள் செய்யும் தோசையை தங்கத் தகடு வைத்து விற்க ஆரம்பித்துள்ளனர். கேட்பதற்கு விசித்திரமாகத் தானே இருக்கிறது. 1 மில்லி கிராம் தங்கத் தகடு கொண்ட தோசை மல்லேஸ்வரத்தில் இருக்கும் ராஜ் போக் விடுதியில் 1011 ரூபாய்க்கும் வெள்ளித் தகடு கொண்ட தோசை 151 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.
நம் நாட்டில் தங்க பஸ்பம் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்த பலரின் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. சிறிய அளவில் உட்கொள்ளப்படும் தங்கத்தால் முதலில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பது பலரின் கூற்று. இத்தகைய தங்க தோசையைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்க முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
——–
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்