(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ)
பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு , மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய கால கட்டம் அப்போது அவர் காமராஜர் கால கட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த விசயங்களை நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போதைய இணைய இதழ்களில் வெளி வந்தது அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது
”அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் Ego தான் அணைகள் கட்டப்பட்டன ”.
இதே வசனம் இன்று நிதர்சனமாகி வருகின்றது. கட்டப் படுவதற்கும் உடைக்கப் படுவதற்கும் கூட அதே ஈகோதான் இன்று காரணமாக இருக்கின்றது.கேரள பகுதி மக்களின் பிரதி நிதியாகவோ தமிழக மக்களின் பிரதி நிதியாகவோ இல்லாது நீர் நலமும் , நில நலமுமாக யோசிக்கின்ற பொது நலவாதிகளோ நாம் நம் இன மக்களுக்கு எதிரானவனாக சித்தரிக்கப் பட்டு விடுவோமோ என்று பயந்து தான் வார்த்தை பேச வேண்டி இருக்கின்றது.அல்லது அப்படியான பொதுநலவாதிகளின் குரல்கள் அமுங்கிப் போய் இனப் பற்றென்பதன் பேரில் இனவெறியை தூண்டிவிடும் தலைவர்கள் தான் பகுத்தறிவு பாசறையில் பிரகாச வெளிச்சத்தில் இன்று இருக்கின்றார்கள்
இன்று கம்பம் தேனி , என கேரள எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து மக்கள் சகஜ வாழ்வு பாதிக்கப் பட்டு உள்ளனர். தெருவில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் மனநிலை உருவாகி வருகின்றது எல்லா விசயத்தையும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து கிளை பிரிந்தவர்கள் எல்லாருமே தீர்வு நோக்கி அறிவுத் தளத்தில் செயல்படுவதை விடுத்து உணர்வுக் கொந்தளிப்பில் ஈடுபடுவதற்கு வழிகோலுகின்றனர்.தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மலையாளியை இதற்கு பலியாக்குவதும், கேரளாவில் தமிழர்களை விரட்டியடிப்பதும், கவன ஈர்ப்புக்காக இனமானத்தோடு இளைஞர்கள் தீக்குளிப்பதும், அதற்கு ஓடிச் சென்று தலைவர்கள் மாலையணிவித்து இறந்தவன் மேலும் தன் மேலும் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொள்வதும் ஒரு நாளும் பிரச்சனைக்குரிய தீர்வாகப் போவதில்லை.
எனக்கு தெரிந்த இலங்கை நண்பர்கள் நமது கேரளாவில் தமிழர்கள் விரட்டியடிக்கப் பட்டர்கள் என்று செய்தி தெரிந்ததும் குறுந்தகவலில் விசாரித்தார்கள். ஏற்கனவே இனவாத பிரச்சனையால் பாதிக்கப் பட்டு இன்று ஏதிலிகலாக வாழ்பவர்களுக்கு தமிழனின் சொந்த நாட்டிலுமா இந்த நிலைமை என்ற கேள்வியும் பயமும் வருவது சரிதான் ஆனால் அது அதீதமான பயம். அந்த பயம் தமிழர்களிடையே நிலைபெறச் செய்ய இனமான தலைவர்கள் பாடுபடுகின்றார்கள் . ஒரு நல்ல தலைவன் தம் மக்களை அறிவு வழியில் நகர்த்த வேண்டுமே அல்லாது உணர்வு வழியில் திசை திருப்பி விடுதல் சரியில்லை. தலைவனுக்காக தீக்குளிக்க பழக்கிய பகுத்தறிவுக் கட்சிகளால் வளர்ந்த அரசியல் அபாயகரமானது.
அதேபோல், குழந்தையை காப்பகத்தில் அல்லது விடுதியில் வளர அனுமதித்த பெற்றோர்கள் சிலருக்கு குழந்தை வளர்ப்பு நம்முடைய பொறுப்பில் இல்லையே என்று எப்பவும் குற்ற உணர்வு இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அக்குழந்தை வீடு வருகின்ற நேரம் கொடுக்கின்ற கூடுதல் கவனிப்பு எல்லாவிதத்திலும் கெடுதலாகவே அமையும்
இன்றைய பொது சனமும் எல்லா நேரமும் குற்ற உணர்வுடனேயே வாழ கடமைப் பட்டுள்ளது
தப்பை சரியா செஞ்சா தப்பில்லை
50 சதவீதம் பொய் தொழிலில் தப்பில்லை
லஞ்சம் தவறு என்று தெரிந்த போதும், கெட்டிக் காரத் தனமாக வேலையை முடித்தேன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளுதல்
என எல்லா தவறுகளையும் நியாயப் படுத்தி நியாயப் படுத்தி வாழ நேர்ந்த குற்ற உணர்வை மறைக்க சமூக பொறுப்புள்ளவர்களாக காட்டியாக வேண்டிய மனோநிலைக்கு பொது சனம் தள்ளப் பட்டிருக்கின்றது.
அந்த மாதிரியான போலி சமூகப் பொறுப்புணர்வு இன்று எல்லாரிடத்தும் தலை தூக்கியுள்ளது மிகவும் ஆபத்தானது.
மூன்றாவது மீடியா எனப் படும்பத்திரிக்கை தொலைக் காட்சி கள்
முன்பெல்லாம் ஒரு தொலைக் காட்சி அதில் குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே செய்தி, வெகு சில பத்திரிக்கைகளே மக்கள் அபிமானத்தோடு உலா வந்தன
இன்று ஏகப் பட்ட தொலைக் காட்சி நிறுவனங்கள், எல்லா நேரமும் செய்தி வாசித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயங்கள் இதில் டி ஆர் பி ரேட்டிங் வெறு.
எதையாவது கொடுத்து தன் பத்திரிக்கையை வாங்கச் செய்யவேண்டிய கட்டாயத்தில் பத்திரிக்கைகள்
எல்லாருக்கும் யார் செய்திகளை முந்தித் தருவது என்ற போட்டியில் செய்திகள் பல உருவாக்கப் படுகின்றது. சில ஊதிப் பெரிதாக்கப் படுகின்றன ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டது அந்தக் காலம்.ஒன்றுமே இல்லாததை நாளெல்லாம் பேசியே பிரச்சனை இருப்பது போலத் தோற்றம் தந்து , பின்னர் பிரச்சனையாக்கி, பிறகு தான் ஓய்கின்றார்கள்
அணைஉடையப் போகின்றது என்று கேரளாவில் ஓயாது கத்திப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் மீடியாக்களும், தமிழன் தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாது அலையப் போகின்றான் இன்னொரு இலங்கை இங்கே உருவாகப் போகின்றது எனக் கதறும் தமிழ் செய்தி நிறுவனங்களும்
பாவம்,” இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்”
உணர்வு கொந்தளிப்பு , தன் முனைப் படுத்தல், போலி சமூக பொறுப்புணர்வு இவை தமிழக மக்களை மட்டுமல்ல, கேரள மக்களையும்தான் தீர்வுகளை விட்டு விரட்டி விடுகின்றது. இவையெல்லாம் மட்டுப் பட மட்டுப் பட. அறிவு பூர்வமான மக்கள் வாழ வழி செய்யும் முடிவுகள் தானே எடுக்கப் படும் . இனப் பற்று வெறியாக மாறாமலிருப்பது எல்லாருக்குமே நல்லது
- குந்தி
- தொலைந்துபோன கோடை
- கைலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12
- பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9
- சௌந்தரசுகன் 300 / 25
- எஞ்சினியரும் சித்தனும்
- துருக்கி பயணம்-1
- முள்வெளி அத்தியாயம் -8
- 6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.
- 1.பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-1)
- பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு
- அசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.
- குகைமனிதனும் கோடிரூபாயும் நூல்
- வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’
- வைதீஸ்வரன் வலைப்பூ
- வசந்தமே வருக!
- நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..
- யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.
- An evening with P.A.Krishnan
- இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்
- சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1
- வளர்ச்சி…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்
- நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளி
- தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !
- தோல்வியில் முறியும் மனங்கள்..!
- நன்றி நவிலல்
- முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?
- நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா
- வேழ விரிபூ!
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது
- ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25
- வலைத் தளத்தில்
- ”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது
- இந்நிமிடம் ..
- வெயில் விளையாடும் களம்