பிரேன் நிசாரின் “ இஷ்டம் “

This entry is part 27 of 33 in the series 27 மே 2012

முதலில் ஒன்று சொல்லியாக வேண்டும். விமலுக்கு இந்தப் படத்தில் தொள தொள பேண்ட் இல்லை. அழுக்குச் சட்டை இல்லை. சார்லி சாப்ளின் நடை இல்லை. ஆள் மாநிறத்திலிருந்து, சிகப்புக்கு மாறி இருக்கிறார். வரவேற்கத்தக்க மாற்றம். கதாநாயகி நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின் தங்கை. வனப்பில் அக்கா என்றே சொல்லி விடலாம். அதாவது, அவரை விட இன்னமும் வாளிப்பாக இருக்கிறார். கண்கள் பெருசாக,அக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேற கட் ஆப் மார்க்கை விட கூடுதல் தகுதி இவரிடம். சந்தானம் வழக்கம் போல நாயகன் ரூம் மேட். ஆனாலும் விரசம் தவிர்த்த காமெண்டுகளில் அள்ளுகிறார். வடிவேலு பார்த்திபன் போல, விமல் சந்தானம் கூட்டணி, பல படங்களில் ஜெயிக்கலாம்.

சரவணன், சந்தியா மோதல் பின் காதல் என யூஷ¤வல் ரகக் கதை. காதலிக்கும் போதே, கலவியையும் முடிக்கும் நவ யுவ, யுவதி, திருமணத்திற்குப் பின், மனித மனத்தின் உட்கூறுகள் தெரிய வரும்போது, சண்டைபோட்டு பிரிவதும், விவாகம் ரத்தாவதும், தற்கால நடைமுறை, மென்பொருள் இளைஞர்களின் அப்பட்ட பிரதி பலிப்பு. இருவரும் இரண்டாவது திருமணத்திற்கு முனைய, வழக்கம்போல நீயில்லாமல் நான் இல்லை, நானில்லாமல் நீ இல்லை என்று மீண்டும் சேரும் சராசரிக் கதை. ஜெயகாந்தனின் ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்?’ கதையின் ஆதாரச் சுருதியை, மணிரத்தினம் தொடங்கி, எல்லோரும், அந்தந்த காலகட்டத்தில், படமாகச் செய்து, வெற்றியும் கண்டு விட்டார்கள். இது நவீனப்படுத்திய கோ எ செ வி தான். முதலில் தெலுங்கில் எடுத்ததால், யாருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் மறத்தமிழன் மறப்பானா?

விமல் நன்றாக நடிக்கிறார். நடனம் ஆடுகிறார். எல்லா மாடர்ன் உடையும் அவருக்குப் பொருந்துகிறது. வாயைத் திறந்தால்தான் போச். பாரதிராஜா இங்கிலீஷ் பேசுவது போல ஒரே “ டென்ஸன், மென்ஸன் “ தான் போங்கள். சகிக்கவில்லை. உடனடியாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ¤க்கு போதல் அவசியம். ஆனால் இப்படியும் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். இப்போதெல்லாம் மென்பொருள் நிறுவனங்களுக்கு, மேல்பள்ளிப்பட்டிலிருந்து கூட வருகிறார்கள் இளைஞர்கள். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். நிஷா பூர்ணா போல் இருக்கிறார். பூர்ணா சின்ன அசின் ( courtesy vijay) இவர் பெரிய அசின். பெரிய கண்கள் நிறைய பேசுகின்றன. ரெட் கார்ப்பெட் உண்டு.

சந்தானம் அள்ளூகிறார். சாம்பிளுக்கு இரண்டு.

விமல்: “அர்ஜெண்டாக கார் வேணும். முக்கியமா அதுல கறுப்புக் கண்ணாடி இருக்கணும்.”
சந்தானம்: “அது என்னா கண் ஆபரேஷனா பண்ணியிருக்கு.. கறுப்புக் கண்ணாடி போட”
0
விமல் சந்தானத்தின் கடன் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்து, அதைச் சந்தானத்திடமே செலவுக்குக் கொடுக்க, விவரம் அறியும் அவர் சொல்கிறார்:
“ பத்து ரூபாய்க்கு itch guard வாங்காம, சீப்பிலேயே சொறிஞ்சிக்கறவன் நீ.. உனக்கு எப்படி இந்தக் கார்டுன்னு யோசிச்சேன். “

படம் துல்லியமான ஒளிப்பதிவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தமுறை தமினின் இசை ஈர்க்கவில்லை. தெலுங்கு படத்தின் தலைப்பு: ஏமாயிந்தி இ வேளா! தமிழ்ப்படுத்தினால் என்னாச்சு இந்த நேரம். அதையே போட்டிருக்கலாம் தமிழ் தலைப்பாக அல்லது என்ன மாயம் செய்தாய் என்கிற இன்னொரு தெலுங்கு பட தலைப்பை வைத்திருக் கலாம். தலைப்பு வாயில் நுழைய வேண்டும் என்பதற்காக வைத்திருப்பார்களோ? அப்படியென்றால் ப்ரஷ்(Brush) என்பது கூட புதுமையாக இருந்திருக்கும். அதுவும் வாயில் நுழைவது தான். ஆனால் அதற்கு ரெண்டு அர்த்தம் உண்டு.

படம் 150 நிமிடம். 30 நிமிடம் கத்தரி போட்டிருந்தால் படம் இன்னமும் விறு விறு. அடுத்த படத்துக்கு ப்ரேம் நிசார் ஜேகேயின் ‘பாரீஸ¤க்கு போ’ படிக்கலாம். தெலுங்கில் எடுத்து ( ஏமாயிந்தோ எய்·பிலுக்கோ ) தமிழில் டப்பலாம். ஏனென்றால் அது ஹிட் மெட்டீரியல்.

#

விருகம்பாக்கம் தேவி கருமாரியில் 6.45 க்கு படம். போரூரில் 40 நிமிடம், வடபழனி பேருந்து கிடைக்காமல் 7.15 க்கு போனேன். பெரிய நஷ்டம் ஏதுமில்லை. படம் இடைவேளை வரை நகரவேயில்லை. இந்த அரங்கிற்கு போக விரும்பும் சைவர்கள் கையில் காரக் கடலையோ, மூக்குக் கடலையோ எடுத்துப்போவது நலம். காண்டீனின் 20 ரூபாய்க்கு முட்டை ப·ப் தருகிறார்கள். சைவம் இல்லை. 10 ரூபாய் கோன் ஐஸ் பார்க்கும்போதே உருகி விடுகிறது. அடியில் கப் வைத்துக் கொள்வது நலம். அப்படியே உறிஞ்சலாம். எம்ப்டி கோனில் போட்டுக்கொள்ளலாம் காரக்கடலை!

#

Series Navigationகொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்குஇரண்டு குறும்படங்கள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *