நான் மணல் குவித்து வைத்திருந்தேன்.
நேற்று அந்த மெரீனா பீச்சில்.
பூநுரைகள்
அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று.
அதைதேடி என்கால்கள் என்னை
அங்கே இழுத்துச்சென்றன.
அது அங்கேயே இருக்குமா?
இல்லை கரைந்திருக்குமா?
வெகு நேரம் வரை தேடினேன்.
அக்கினிக்குஞ்சு ஒன்றை
ஆங்கொரு பொந்திடை வைத்து
தேடியது போல் தேடினேன்.
கடல் என்ன பஞ்சுக்காடா
பற்றிக்கொள்வதற்கு.
மணல் குவித்து வைத்தது மட்டும்
மூளும் என் மனத்தீ தான்.
குமிழிகள் மோதி மோதி தின்றிருக்கலாம்.
உடைந்த கிளஞ்சல்கள்.
கடல் பாசிகள்.
வெறும் நண்டுக்கூடுகள்
கடல் குச்சிகள்.
வரிவரியாய் “டி.ஷர்ட்” போட்டுக்கொண்டு
சின்ன சின்ன சங்குபூச்சிக்கூடுகள்..
அது கடற்கரையின் ஆல்பம்.
அதை புரட்டிக்கொண்டே
என் கால்சுவடுகளால்
கையெழுத்துபோட்டுக்கொண்டே
நடந்தேன்.
நடந்ததும்
குறும்புக்கார சிறுவனாய்
அதை வந்து வந்து அழிக்கும்
பிஞ்சு அலைகள்..
அலைகளில் கூட
ஆண் அலை பெண் அலை என்கிறார்களே.
அப்படி யென்றால்
ஆதம் ஏவாளின்
ஆதி கால பிரம்மாண்ட ஈடனின்
திரவ வடிவமா இது?
அழுது கொண்டே பிறந்தகடலின்
அழுகையும் ஓயவில்லை
உப்புக்கரிக்கும் கண்ணீரும் மாறவில்லை.
ஆண் அலைகளும் பெண் அலைகளும்
எதற்கு அழுகின்றன?
ஏதோ ஒரு வங்காளத்திரைப்படத்தில்
பார்த்தேன்.
அவனைப்பார்த்து
அவள் அழுதாள்.
கண்ணீர் முட்டிக்கொண்டு
வார்த்தைகளை
ஆழத்தில் புதைத்துக்கொண்டு.
அது முதல் சந்திப்பு.
அவர்கள் காதலர்கள்.
அழுவது கூட
ரகசியமாய் சிரிக்கும் இனிப்பின்
மொழிப்பெயர்ப்பா? தெரியவில்லை.
கடல் பூராவுமே
மொத்தம் முகம் காட்டி
அப்படித்தான் அழுதது.
என் மணல் குவியலை அங்கு
இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.
===================================================ருத்ரா
- தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 14
- தொல்கலைகளை மீட்டெடுக்க
- பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’
- மொலோனி மிக்ஸர்: சென்னைவாசிகளின் விசித்திர குடிநீர்!
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-3)
- முள்வெளி அத்தியாயம் -10
- கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்
- என்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்
- திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- மே 17 விடுதலை வேட்கை தீ
- உட்சுவரின் மௌன நிழல்…
- என் மணல் குவியல்…
- மறுபடியும்
- ஞான ஒளி (கலீல் கிப்ரான்)
- மகளிர் விழா அழைப்பிதழ்
- இரு கவிதைகள்
- யாதுமாகி …
- தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 21)
- பஞ்சதந்திரம் தொடர் 45
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று
- ஆவணப்படம்: முதுமையில் தனிமை
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27
- கொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு
- பிரேன் நிசாரின் “ இஷ்டம் “
- இரண்டு குறும்படங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.
- ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழா
- துருக்கி பயணம்-3
- அறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு
- கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா