(கே.எஸ்.செண்பகவள்ளி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியக் கருத்தரங்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரனின் அரிய முயற்சியில் இந்தியாவிலே மிகவும் தொன்மை வாய்ந்த நகரமும், முதலாவது தலைநகரமுமான கொல்கத்தாவில் மிகவும் சிறப்பாக நடந்தது. இவ்வாண்டு மார்ச் 8-9 தேதிகளில் இந்தக்கருத்தரங்கம் நடந்தேறியது.
கொல்கத்தாவைப் பற்றி சிறிது சொல்லித்தான் ஆக வேண்டும். காரணம் இந்தியாவில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாநிலமாகும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இராமகிருஷ்ண பரஹம்சர், விவேகானந்தர், அன்னை சாரதா தேவி போன்ற தியாகிகள், மகான்கள் அவதரித்த புண்ணியபூமி. மேலும் ஆஸ்ட்ரியாவிலிருந்து சேவைக்காகவே புலம் பெயர்ந்து வந்த அன்னை திரேசா வாழ்ந்ததும் இம்மண்ணில்தான்.
இம்மாநிலம் மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகர் “ஊக்லி” எனப்படும் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், பிற இந்திய நகரங்களை நோக்குங்கால் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடாகக் காணமுடிகிறது.
மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு
கொல்கத்தா தமிழ் மன்றத்தின் 59ஆம் ஆண்டு விழா ஐந்து நாள் நிகழ்வாக நடந்தது. இந்த ஆண்டு விழாவில் மலேசியாவிலிருந்து 46 பேர் கலந்துகொண்டனர். இந்தப் பயணக்குழுவில் திரு.ஆதி.இராஜகுமாரன், திரு.ஆர்.தியாகராஜன், இயக்குனர் திரு.விஜயசிங்கம், திரு.அசன்கனி, திரு.சோ.பரஞ்சோதி, திரு.ஞானசைமன், திரு.இரா.மாணிக்கம் தம்பதியினர், திரு.ரெ.கோ.ராசு தம்பதியினர், முன்னாள் தலைமையாசிரியைகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மலேசிய நண்பன் நிருபர் திரு.ஐ.எஸ்.சத்தியசீலன், நயனம் திருமதி நயனதாரா எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முனைவர் உதயசூரியன், கவிப்பேரரசு வைரமுத்துவின் வெற்றிப் பேரவையின் செயலாளர் திரு.குமார், முன்னாள் மேகா டிவியின் நிருபர் திரு.வினோத் குமார் ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ்மன்றத்தினரின் வெகுவிமரிசையான வரவேற்பு நல்கப்பட்டது. பயணக்குழுவினர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தனர். பயணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்குத் தலையில் சூடிக்கொள்ள மல்லிகைச் சரம் தந்தது, நமது கலாச்சார பிரதிபலிப்பை மென்மேலும் மெருகூட்டியது. கொல்கத்தா தமிழ் மன்றத்தினரில் பெரும்பாலோர் அரசாங்க உயர் பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆளுமைகள் சிறப்புகள் இருந்தன. ஜவஹர்லால் நேருவிற்கு திருக்குறள் சொல்லிக்கொடுத்த திரு. நேரு நாராயணன் என்று அழைக்கப்பட்ட எண்பத்து மூன்று வயது பெரியவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
தமிழ்மன்றத்தின் துணைத்தலைவர் திரு.வரதராஜன் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். பயணத்தின் ஆரம்பக்கட்டங்களிலிருந்தே மிகவும் உறுதுணையாக இருந்தவர். வெளிநாடுகளுக்குத் தோலினால் செய்யப்பட்ட பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழிலதிபராக இருந்தாலும், மிகவும் எளிமையாகவும், பணிவாகவும் காணப்பட்டார். அவரின் மறுபக்கம் நல்ல தமிழ் வளம். அவரின் பேச்சில் மிகவும் அழகாக தமிழ்க்கவிதைகள் இழைந்தோடின.
“மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு” என்ற அங்கம் முதல் நாள் பிரத்தியேகமாக மலேசிய இலக்கிய ஆர்வலர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அந்த அமர்வில் நம் எழுவர் கட்டுரை படைத்தனர். முதன் முறையாக இளைய தலைமுறையினருக்குக் கட்டுரைப் படைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன். இளைய தலைமுறையினர் தங்களை வளர்த்துக்கொள்ள இது ஓர் அடித்தளமாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கே.எஸ்.செண்பகவள்ளி, பொன்.கோகிலம் ஆகிய இருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் முதல் படைப்பாளராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு.ஆகுணநாதன் “மலேசியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் கட்டுரை சமர்பித்தார். தமிழ்க் கல்வியின் வரலாறு, இன்றைய நிலை, வளர்ச்சி, தொய்வு என பல கருத்துகள் அவர் கட்டுரையில் அடங்கியிருந்தன.
அவரைத் தொடர்ந்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் வே.சபாபதி அவர்கள் “அண்மைய மலேசியத் தமிழ் நாவல்கள்” என்ற தலைப்பில் பேசினார். தமிழ் நாவல்களின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை, மலேசியத் தமிழ் நாவல்களின் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி எவ்வாறெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன என்பதை மிகத் துல்லியமாகத் தம் கட்டுரையில் தொகுத்திருந்தார்.
மூன்றாவது படைப்பாளராக ஆசிரியரும், புதுக்கவிதை ஆய்வாளருமான திருமதி இராஜம் இராஜேந்திரன் “மலேசியாவில் புதுக்கவிதைகளும் பெண் படைப்பாளர்களும்” என்ற தலைப்பில் பேசினார். நமது நாட்டின் பெண் கவிஞர்களின் ஆளுமைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கவிதை வாயிலாக பிரதிபலிக்கும் பெண்களின் பிரச்சனைகள், சிந்தனைகள், புதுக்கவிதை கூறுகள் ஆகியவற்றை தம் கட்டுரை வாயிலாகப் பதிவுச் செய்தார்.
அவரைத் தொடர்ந்து “மலேசியப் புதுக்கவிதைகளில் நவீனச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் முன்னாள் தலைமையாசிரியர் திரு.கோ.புண்ணியவான் பேசினார். இன்றையச் சூழலில், நவீனச் சிந்தனையில் புதுக்கவிதைகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்று தமது கட்டுரையில் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்திருந்தார்.
அடுத்தப் படைப்பாளராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளரும், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தின் அதிகாரியும், ஆய்வாளருமான கே.எஸ்.செண்பகவள்ளி “மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக்காப்பகம்: ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் கட்டுரையைச் சமர்ப்பித்தார். மலேசியாவின் வரலாறு எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது, குறிப்பாக தமிழ் ஆவணங்கள், இந்தியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நினைவகம் அமைத்தல் போன்ற பல ஆய்வியல் கூறுகளை தம் கட்டுரையில் துல்லியமாக விவரித்திருந்தார்.
மலேசிய வானொலி, மின்னல் பண்பலையின் அறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான திருமதி பொன்.கோகிலம் “மலேசிய வானொலியின் தமிழின் வளமும் பயன் தரும் நிகழ்ச்சிகளும்” என்ற தலைப்பில் பேசினர். வானொலியில் தமிழ் மொழியின் பயன்பாடு, கலைச்சொற்களின் ஆதிக்கம், பிரபலமான தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றி தம் கட்டுரையில் விவரித்தார்.
இறுதியாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருமான திரு. பெ.இராஜேந்திரன் “1980ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப்பத்திரிகைகள்” என்ற தலைப்பில் பேசினார். மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாறு, 1980ஆம் ஆண்டிற்குப் பின் தமிழ்ப்பத்திரிகை துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளியான மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை மிகவும் தெளிவாக விவரித்தார்.
மலேசிய இலக்கிய ஆர்வலர்களின் தமிழ்ச் சொல்லாடலில் கொல்கத்தா மன்றத்தினர் மெய்மறந்து வியப்புக்குள்ளாகினர். கட்டுரையாளர்களை மனதாரப் பாராட்டினர். கொல்கத்தா மண்ணில் தமிழ் மணம் மணக்கச் செய்துவிட்ட பெருமை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தையே சாரும். “இந்த உறவு இறுதியாக இல்லாமல், இரு இலக்கிய அமைப்புகளுக்கும் தொடக்கப் பாலமாக அமைய வேண்டும்” என்று தலைவர் கேட்டுக் கொண்டார்.
“மலேசியத் தமிழ் இலக்கியம் அறிமுகக் கருத்தரங்கு” என்னும் தலைப்பில் தொகுத்திருந்த நூலை திரு.பாலச்சந்திரன், ஐ.ஏ.எஸ். வெளியிட்டார். கொல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் மேனாள் செயலாளர் நக்கீரன் அதிகாரப்பூர்வமாக அந்நூலைப் பெற்றுக் கொண்டார். அந்நூலில் பயணத்தில் இடம் பெற்ற 46 பங்கேற்பாளர்களின் குறிப்புகள், கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருந்தன. இந்த இலக்கியப் பயணம் நல்ல பல அனுபவங்களைத் தந்ததுடன் தமிழ் மன்றத்தினருடன் நல்லதொரு நட்புப் பாலத்தையும் இணைக்க வழிவகுத்தது எனலாம்.
- தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 14
- தொல்கலைகளை மீட்டெடுக்க
- பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’
- மொலோனி மிக்ஸர்: சென்னைவாசிகளின் விசித்திர குடிநீர்!
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-3)
- முள்வெளி அத்தியாயம் -10
- கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்
- என்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்
- திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- மே 17 விடுதலை வேட்கை தீ
- உட்சுவரின் மௌன நிழல்…
- என் மணல் குவியல்…
- மறுபடியும்
- ஞான ஒளி (கலீல் கிப்ரான்)
- மகளிர் விழா அழைப்பிதழ்
- இரு கவிதைகள்
- யாதுமாகி …
- தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 21)
- பஞ்சதந்திரம் தொடர் 45
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று
- ஆவணப்படம்: முதுமையில் தனிமை
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27
- கொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு
- பிரேன் நிசாரின் “ இஷ்டம் “
- இரண்டு குறும்படங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.
- ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழா
- துருக்கி பயணம்-3
- அறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு
- கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா