அறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு

author
0 minutes, 57 seconds Read
This entry is part 32 of 33 in the series 27 மே 2012
அறிவிப்பு:   எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.
சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது
வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.
i) ஞாயிறு – ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் – ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்
ii) வியாழன் – ஜூன் 7 மாலை 7 மணியளவில் – பாஸ்டன்
iii) சனி – ஜூன் 9 மாலை – வாஷிங்டன் DC நகரம் அருகில்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு முகவரி – bsubra@gmail.com
தொலைபேசி –   (978) 710-9160
அனைவரும் வருக.
நாஞ்சில் நாடன் குறித்து மேலும் அறிய:
-பாஸ்டன் பாலாஜி
Series Navigationதுருக்கி பயணம்-3கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *