இன்று உலகில் தங்கத்தின் மதிப்பு உயர உயர, அதைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. தங்கக் குழுமங்கள் பல நாடுகள் உருப்பெற்று, தங்கச் சந்தையின் நிலவரத்தை உடனுக்குடன் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, கணினி மூலம், தங்க விலை நிலவரம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்;டுள்ளது. பல நாட்டு வர்த்தகர்கள் சேர்ந்து ஒரு பொதுக் குழுமத்தை 1987இல் உருவாக்கினர். அது தான் இயன் டெல்பெர்ரைத் தலைவராகக் கொண்ட உலகத் தங்கக் குழுமம். தங்கச் சந்தையின் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் அது ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் தங்கத் துறை வளர்ச்சிகளையும் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து, மக்களுக்கு விவரங்களைச் சரிவரத் தருவது இதன் கொள்கை. தங்கத் துறையின் தொழில்நுட்பத்தை மேலும் மேலும் உயர்த்த, பல்வேறு நிறுவனத்தாருடன் கை கோர்த்து, ஆய்வுகளில் பங்கெடுத்து, உரிய முறைகளை புகுத்தி, தங்க வர்த்தகத்தை அதிகரிக்கச் செய்வது அதன் மற்றொரு கொள்கை.
இலண்டன் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அக்குழுமத்தின் கிளைகள் அமெரிக்க, தூரக் கிழக்கு நாடு, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் மும்மையிலும், சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையிலும் உள்ளன. இந்திய நிலவரங்கைள இவ்விரு கிளைகளும் தருகின்றன.
உலகத் தங்கக் குழும இணையதளம், பல்வேறு விவரங்களைத் தருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காலாண்டு அறிக்கையில், பல்வேறு நாட்டு தங்க நிலவரங்களையம், செய்யும் ஆய்வுகளின் முடிவுகளையும் வெளியிடுகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் மேலிருக்கும் மோகம் அதிகரித்து வரும் இந்தக் கால கட்டத்தில் இத்தகைய விவரங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இவர்களது அறிக்கைகள் பல துறை வல்லுநர்களால் தரப்படுவதால், நம்பகத்தன்தை மிக்கதாவும் உள்ளது. அரசாங்கம், வங்கிகள், மூதலீட்டு நிறுவனங்கள், சுரங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதால், முழுமையான அறிக்கைகளை இது தரவல்லது. பல்வேறு நாட்டின் தங்க இருப்புகளைப் பற்றி சரியான புள்ளிவிவரங்களைத் தருகிறது. இதன் 22 உறுப்பினர்கள், உலகின் 60 சதவீத தங்கச் சந்தையை கட்டுப்படுத்துபவர்கள்.
தொழில் துறை, மருத்துவம், விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி, நேனோ தொழில்நுட்பம் என்று பல துறைகளில், பல நிறுவனத்தாருடன் கை கோர்த்து, ஆய்வுத் துறையில் கவனம் செலுத்துவதால், இனி வரும் ஆண்டுகளில் இக்குழுமத்தின் பணி மிகச் சிறந்ததாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும்.
தங்கத்தின் நிறம் தகதகக்கும் மஞ்சள் நிறம். ஆனால் இன்று தங்கம் வௌ;வேறு நிறங்களில் உருமாறியுள்ளது. தங்கத்தை விதவிதமான உலோகத்துடன் கலவையாகச் சேர்க்கும் போது பல நிறங்களில் தங்கம் மாறுகிறது. தங்க ஆபரணங்களே இப்போது வண்ண வண்ண நிறத்தில் கிடைப்பதன் காரணம் அது தான். பிளாடினம், பேலாடியம் அல்லது வெள்ளியைக் கலக்கும் போது வெள்ளைத் தங்கம் கிடைக்கிறது. தங்கத்துடன் செம்பு கலக்கப்படும் போது ரோஸ் நிற தங்கம் கிடைக்கிறது. பச்சை, ஊதா இன்னும் கருப்பு நிறத்திலும் தங்கம் செய்யலாம்.
வெள்ளைத் தங்க மோதிரம் ரோஸ் தங்க மோதிரம் பச்சை தங்க மோதிரம் ஊதா தங்க மோதிரம்
ரோடியம் நகைகள் என்று கேள்விபட்டிருப்பீர்கள்? அது என்ன? இது வெள்ளை தங்கத்தில் பளபளப்பிற்காகவும் நீடித்துழைக்கவும் வேண்டி, ரோடியத்தால் முலாம் பூசப்படுகிறது. அதைத் தான் ரோடிய நகைகள் என்று சொல்லி விற்கிறார்கள்.
இப்படித் தங்கக் கலவைகள் இருப்பதைக் குறிக்கவே கேரட் என்ற அளவுகோல் சொல்லப்படுகிறது. எந்த அளவு கலவை கலக்கப்டுகிறதோ அதற்கேற்ப கேரட் அளவுபோல் மாறும். கீழ்கண்ட பட்டியல் கேரட் அளவுகோலை விளக்கும்.
கேரட் மென்மை (1000க்கு) தங்கம் அளவு விளக்கம்
24 999 99.9% சொக்கத் தங்கம்
24 990 99.0% சீனாவில் பிரபலமானது
22 916 91.6% இந்தியாவில் பிரபலம்
21 875 87.5% மத்திய கிழக்கில் பிரபலம்
19.2 800 80.0% போர்ச்சுகல் நாட்டின் தரம்
18 750 75.0% சர்வதேச தரம்
14 585 58.5% அமெரிக்காவில்
99.999மூ தங்கம் தற்போது ஆபரணங்களில் அல்லாது இதர தொழில் நுட்பத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
தங்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் மிக்கவர்கள், நேரம் இருந்தால், இணையதளத்தில் தேடுங்கள். மேலும் பல்வேறு சுவையான விசயங்கள் அகப்படும்.

- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
- முள்வெளி அத்தியாயம் -11
- தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
- தடயம்
- நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..
- காத்திருப்பு
- சந்தோஷ்சிவனின் “ உருமி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15
- தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- நான் செத்தான்
- நச்சுச் சொல்
- மாறியது நெஞ்சம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)
- ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
- எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
- பஞ்சதந்திரம் தொடர் 46
- காத்திருப்பு
- இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
- சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
- 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
- கேரளாவின் வன்முறை அரசியல்
- துருக்கி பயணம்-4
- அத்திப்பழம்
- கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?