டிவிஆர் ஷெனாய் ஒரு அரசனக்கு தனது செல்ல பிராணியாக இருந்த குரங்கு மீது மிகவும் பிரியம். அந்த செல்ல குரங்கை தனக்கு மெய்க்காப்பாளனாக நியமித்தான். ஒரு நாள் அரசன் தூங்கிகொண்டிருக்கும்போது ஒரு ஈ அரசனை சுற்றி பறந்துகொண்டிருந்தது. குரங்கால் அந்த ஈயை அடித்து விரட்ட முடியவில்லை. ஆகவே அந்த குரங்கு அருகிலிருந்த வாளை எடுத்து பளேர் பளேரென்று ஈயை அடித்து துரத்தியது. ஈ தப்பிவிட்டது. தூங்கும் அரசன் தப்பவில்லை. விஷ்ணுசர்மன் ந்ரிபசேவகவானரா- கதையை இவ்வாறு முடிக்கிறார். “நீண்டநாள் […]
மு.வெங்கடசுப்ரமணியன் மணி மாலை 6.30யைத் தாண்டிக்கொண்டிருந்தது. 28வது எண் பேருந்தில் இருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதர் கையில் ஒரு பையோடு இறங்கினார். நெரிசலிலிருந்து இறங்கிய அவர் வெளியே வந்த நிம்மதியில் சுதந்திர காற்றை இரண்டு மூன்று முறை சாவகாசமாக இழுத்துவிட்டு தன்னுடலை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தார். பிறகு, சாலையை கடந்து முக்கியத் தொடர்வண்டி நிலையத்திற்குள் மெல்ல நடந்துவந்தார். அந்த எழும்பூர் நிலையத்தின் தெற்கு நோக்கிச் செல்லும் சில வண்டிகள் அடுத்தடுத்து இருப்பதால் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் […]
அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் மார்ச்-29 நேற்றே கப்படோஸ¤க்குக் வந்திருந்தபோதும், இன்றுதான் கப்படோஸை உண்மையாக தரிசித்தோம். பயணத்தில் கப்படோஸில் கழித்த இரண்டு நாட்களும் உன்னதமானவை. ஒவ்வொரு தருணமும் பல்வேறு காட்சிகளை ஓயாமல் அடுகடுக்காய் அறிமுகப்படுத்திற்று எனலாம். இவற்றை ஏற்கனவே இன்னொரு நாட்டில் வேறொரு பிரதேசத்தில் கண்டிருக்கிறேனென ஒப்புமைபடுத்தவியலாத காட்சிகள். கப்படோஸ் பிரதேசத்திலிருந்த மூன்று நாட்களும் உக்ருப் (Ugrup) என்ற நகருக்கருகே தங்கினோம். காலையில் எங்களுடன் நட்பு பாராட்டிய டாக்டர் தம்பதியருள் பெண்மணிக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவ […]
ஜே கோபிகிருஷ்ணன் கேரளாவில் பிறந்து கேரளாவிலேயே கடந்த 37வருடங்களாக வாழ்ந்து வரும் எனக்கு, கேரளாவை யாரேனும் “கடவுளின் சொந்த நாடு” என்று சொன்னால், சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்பத்த்தான் விளம்பர வார்த்தைகள் நம் மனதுக்குள் ஊடுருவி, ஆக்கிரமித்து, ஆள ஆரம்பித்துவிடுகின்றன. இந்த விளம்பர வாசகம், கேரளா சுற்றுலாத்துறையின் விளம்பர வாசகமாக 15 வருடங்களுக்கு முன்னால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை உருவாக்கியவர் கேரளா கேடரைச் சேர்ந்த உத்தரபிரதேச ஐஏஎஸ் ஆபீஸர். அவரது பெயர் அமிதாப்காந்த். மலையாளிகளான நாங்கள், எங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு […]
31. கார்த்திகைமாதம். காலை நேரம். சாம்பல் நிற வானம் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வடகிழக்குப் பருவக்காற்று சந்திராயன் துர்க்கத்தினாலோ அல்லது அடர்ந்திருந்த தோப்புகளாலோ பாதிக்கப்படாததுபோல கோட்டைச் சுவரில் திறந்த பகுதிகளில், காவலர்க்கோ அரசாங்கத்தின் உத்தரவுக்கோ காத்திராமல் பிரவேசித்து எதிர்த் திசையில் வெளியேறியது. அவ்வாறு வெளியேறுகிறபோது நகரெங்கும் மெல்லிய குழலோசை மெல்லிய புகை மூட்டம்போல எழும்புவதும் படர்வதுமாக இருந்தது. கிருஷ்ணபுரவாசிகள் உட்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேணுகோபாலசாமியே குழலெடுத்து தங்களைப் பரவசப்படுத்துவதாக நம்பினார்கள். பின்னிரவில் ஆரம்பித்திருந்த மழை அதிகாலையில்தான […]
(கட்டுரை : 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவைச் சுற்றும் சந்திரயான் உளவிச் சென்று நாசா வோடு வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று ஆராயப் போகுது பாரதமும் நாசாவும் ஒன்றாக ! சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் பந்தய மில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாவது சந்திராயன் […]
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை என்ன அய்யரே உக்காந்திட்டு இருக்கும்போதே கண்ணு அசந்திட்டியா? நம்ம கேசு தான் போல இருக்கு அங்கேயும். எதிர்பாராத சந்தோஷம் கிடைத்த திருப்தியோடு சிரித்தபடி நாயுடு கயிற்றுக் கட்டிலில் உட்காந்தான். இவன் கிட்டே எப்படிச் சொல்ல? பக்கத்திலே யாரும் இருக்காளாடா? பேசின மாதிரி இருந்தது. அவன் எங்கே என்று இலக்கு இல்லாமல் கை காட்டிக் கேட்டான். குரல் கேட்குதா? கேக்கும் […]
சுற்றுச்சூழலால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம் An Ancient Civilization, Upended by Climate Change By RACHEL NUWER ரேச்சல் நுவெர் இந்து சமவெளி நாகரிகம்(indus civilization) என்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்ட இடத்தில் இன்றும் நிலவியலாய்வாளர்களும், அகழாராய்வாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள். வேதங்கள் என்னும் புராதன புத்தகங்கள் இங்கேயே 3000 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக கூறினர். இந்த வேதங்கள் சரஸ்வதி என்னும் மாபெரும் நதி இங்கே பாய்ந்து சென்றதாக கூறுகின்றன. இந்த […]
உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின் சுவடுகளைப் பின்னோக்கித் தேடிப் பயணிக்க வேண்டும். – எனக்கு எதிரே சிகப்பு நிறத்தில் கண்ணாடிகள் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வட்டமான அறை. அந்தக் கண்ணாடி அறையில் என் கைகளைத் தட்டி நான் களித்து விளையாடுவதை என் மனக்கண்களால் காண்கிறேன். அந்தக் கண்ணாடி அறையானது நான் சில மாதங்கள் வாசம் செய்த என் அம்மாவின் கருவறை. இன்று […]
குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில் காலத்தின் இருப்பில் கவனம் கூடிப் போவதுவும் இதுவும் கடந்து போகுமென இதயம் கிடந்து துடித்தாலும் காலத்தின் கடப்பில் பிடி நழுவிப் போவதுவும் இதோ இந்த நொடியில் தீர்ந்துவிடப் போகிறது அடுத்தது நாம்தான் என்கிற அனுமானங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில் சுமையேற்றி வதைப்பதுவும் என நிகழ்காலம் நிழல்போலத் தெளிவின்றிப் போனதால் சுவாசிக்கக்கூட பிரயாசைப் […]