நமது பண்பாட்டைக் காக்கும் நற்பணியில் பங்கேற்க ஒரு நல் வாய்ப்பு

This entry is part 1 of 43 in the series 17 ஜூன் 2012

 

சமஸ்கிருத அறிஞர் ஸ்ரீ குப்புஸ்வாமி சாஸ்த்ரியார் அவர்களால் 1927-ல் நிறுவப்பட்ட சமஸ்க்ருத ஆய்வு நூலகம் / மையம் சென்னை மயிலாப்பூர் சமஸ்க்ருதக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. என் தந்தையார்கூடச் சிறிது காலம் இந்நூலகத்தில் கெளரவ நூலகராகப் பணியாற்றியதுண்டு.
இந்த நூலகத்தை ஓர் ஆய்வு மையம் என்று சொல்வதே பொருந்தும். சமஸ்க்ருத மொழி தொடர்பாகவும் இந்தியவியல் சார்ந்தும் பல்வேறு ஆய்வு நூல்களை இது வெளியிட்டுள்ளது. தத்துவம், நியாயம், யோகம், கலைகள், இலக்கியம்  எனப் பல பிரிவுகளை உள்ளடக்கிய அரிய நூல்கள் இங்குள்ளன. இந்த ஆய்வு நூலகத்தின் குறிப்பிடத்தக்க இன்னொரு பணி ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை முதன் முதலில் மொழி பெயர்த்து வெளியிட்டதாகும்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய ஓலைச் சுவடிகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வு நூலகத்திற்கு 1995 வரை மத்திய அரசின் நிதி உதவி கிடைத்து வந்தது. நூலகத்தின் நிர்வாகத்திற்கென மத்திய அரசு நியமித்த குழு உறுப்பினரிடையே உருவான கருத்து வேறுபாடு களின் விளைவாகவோ என்னவோ மத்திய அரசின் நிதி உதவி நின்று போனது. நிதிஉதவியைத் தொடர வேண்டி ராஷ்ட்ரிய சமஸ்க்ருத ஸம்மானுக்கு ஆய்வு மையம் விடுத்த விண்ணப்பம் இன்றளவும் செயல்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. ஆகவே தனிப்பட்ட ஆர்வலர்களின் கூட்டு முயற்சியினாலேயே இந்த ஆய்வு நூலகம் தொடர்ந்து இயங்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த ஆய்வு நூலகத்தின் பயனாளிகளாக இருபத்து நான்கு மாணவர்கள் இன்று பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். பல அறிஞர்களும் தமது ஆய்வுகளுக்கு இதனை நம்பியுள்ளனர். இவர்கள் தவிர அவ்வப்பொழுது ஏற்படும் ஐயங்களைத் தெளிவித்துக் கொள்ளவும் பல துறை சார்ந்த நூலாசிரியர்கள் இங்கு வந்து குறிப்பெடுத்துக் கொள்வதுண்டு. இவர்கள் அறிவுச் செல்வம் மட்டுமே உள்ளவர்கள்.
இன்று போதிய நிதி வசதியின்மையால் இந்த ஆய்வு மையம் தொடர்ந்து இயங்குவதில் பெரும் பற்றாக்குறையினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நம்மைப் போன்ற சாமானியர்கள் புரவலராக இருந்து உதவுமாறு அது வேண்டுகிறது. ரூபா இரண்டாயிரம் மட்டும் ஒருமுறை செலுத்துவோரை ஆயுட் காலப் புரவலராக ஏற்றுத் தனது நன்றியறிதலுக்கு அடையாளமாகத்  தான் வெளியிட்டுள்ள  சமஸ்க்ருத மொழி நூல்களை அனுப்பி வைக்கவும் ஆய்வு மையம் விழைகிறது.
நமது பாரம்பரியச் செல்வங்களைப் போற்றிப் பாதுகாக்கும் அரிய பணியில் பங்கேற்கிற வாய்ப்பு நம்மைத் தேடி வந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ தாக்குதல்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் தாக்குப் பிடித்து நிற்கின்ற ஆதார பலம் நமது பண்பாட்டிற்கு உண்டு என்றாலும் அதன் கண்கூடான அடிப்படை களைப் பாதுகாத்து வரும் அமைப்புகளுக்குத் துணை நிற்க வேண்டியது நமது கடமையே அல்லவா?
சில நாட்கள் முன்பு ஏதோவொரு கட்டுரைக்குப் பின்னூட்டம் இடுகையில் ஏதோவொரு பலவீனமான மனநிலையில் எனது உடல் உபாதை குறித்துத் தெரிவித்துவிட்டேன். அதனைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு இன்றளவும் எனது மருத்துவச் செலவுக்கு உதவ விரும்புவதாகப் பலர் மின்னஞ்சல் அனுப்பி வருகிறார்கள். நன்றி யுடன் அதனை ஏற்க மறுத்து வருகிறேன் என்றாலும், இத்தகைய அன்பர்கள் இந்த ஆய்வு மையத்திற்குத் தம்மால் இயன்ற நன்கொடையை அனுப்பி உதவுவார்களேயானால் அதனை எனக்கே செய்த உதவியாகக் கொள்வேன். நன்கொடை அளிக்க விரும்புவோர்,
THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE.
Account No. 395702010007408
Union Bank of India – Mylapore Branch NEFT NO: UBIN0539571
IFSC CODE NO.600026009
என்ற வங்கிக் கணக்கில் தொகையை நேரடியாகச் செலுத்தி,
Dr. K.S.Balasubramanian , Dy.Director, Kuppuswamy Sastri Research Institute, Sanskrit College, Mylapore, Chennai – 600004.Phone- 044-24985320
Email: ksrinst@gmail.com
என்ற முகவரிக்குத் தங்களின் முகவரியுடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். டாக்டர் கே. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களின்  மேற்குறிப்பிட்ட முகவரிக்கே Kuppuswamy Sastri Research Institute என்ற பெயரில் செக் அல்லது டிடி அனுப்புவதாக இருந்தாலும் சரியே..

++++++

Series Navigationஉகுயுர் இனக் கதைகள் (சீனா)

10 Comments

  1. Avatar punai peyaril

    மம… உங்கள் உடல்நிலையின் போது நானும் உதவுவதாகச் சொன்னேன்.. கண்டிப்பாக நான் இவர்களுக்கு என்னால் இயன்றதை அனுப்புகிறேன் -ஜூலை சம்பளம் வந்தவுடன். நன்றி…

  2. உங்களுக்கு அனுப்ப முன்வரும் உதவிகளையும் ஒரு நற்காரியத்துக்கு அனுப்பச் சொல்லும் உங்கள் பேருள்ளத்தை வணங்குகிறேன். இதனைப் படித்த உடனே உதவிட முன்வருகிறேன் என்று முனைந்த புனைபெயரில் வாழ்த்துதலுக்கும் பாராட்டுக்கும் உரியவர். இதனை ஒரு அறிவிப்பாக வடக்கு வாசல் இதழில் ஜூலை மாதம் வெளியிடுகிறேன். நண்பர்களிடமும் இங்கு சொல்கிறேன். என்னாலான உதவியையும் அனுப்பி வைக்கிறேன்.

    • Avatar Kavya

      //ராஷ்ட்ரிய சமஸ்க்ருத ஸம்மானுக்கு ஆய்வு மையம் விடுத்த விண்ணப்பம் இன்றளவும் செயல்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. ஆகவே தனிப்பட்ட ஆர்வலர்களின் கூட்டு முயற்சியினாலேயே இந்த ஆய்வு நூலகம் தொடர்ந்து இயங்க வேண்டிய நிலையில் உள்ளது//

      தில்லியிலிருந்து பத்திரிக்கை நடாத்திவரும் ராகவன் ஏன் இந்த கோரிக்கை மனுவிற்கு இன்னும் அரசு பதில் போடவில்லை என்றும் அரசின் நிதிவுதவியை தரும்படியும் செய்ய லாம்.? தில்லியில்தானே வசிக்கிறார்? நமது சமசுகிருத பண்பாடுகளை தேயவிடாமல் காப்பது பெருங்கடமையுமாகும்.

      • Avatar punai peyaril

        அவரவர் அவருக்கு சரியெனும் கடமையைச் செய்கிறார்கள். ஏளனம் வேண்டாம் காவ்யா.. அது கொடிய உடனிருந்து கொல்லும் நோய்… முதுமை ஒரு நாள் உமக்கும் வரும்.

        • Avatar Bala

          காவியாவின் பின்னூட்டத்தில் ஏளனம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே!

      • என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வேன். ஒரு பிரச்னையும் இல்லை.

        ராகவன் தம்பி

  3. Avatar மலர்மன்னன்

    புனைப்பெயரில், ராகவன் தம்பி இருவருக்கும் நன்றி.
    நீண்ட காலமாக அதிகப் பயன்பாட்டில் இருந்து வருவதால் அதி விரைவாக மழுங்கிவரும் கருவியைக் கூர் செய்யச் செலவழித்துக்கொண்டிருப்பதைவிட நிரந்தரமாகப் பலருக்கும் பலவாறாகப் பயன்பட்டு வரும் ஓர் அமைப்பு தொய்வின்றி இயங்கச் செலவிடுவது மேல் அல்லவா, ராகவன் தம்பி?
    இதைப் பெரிது படுத்த வேண்டுமா?
    -மலர்மன்னன்

  4. அன்பின் திரு மலர்மன்னன்,

    வணக்கம். தங்களுடைய இந்த அரிய சேவையை எம்மால் இயன்றவரை வெளியில் தெரியப்படுத்த முயசிற்கும் பணியில் முதல் படியாக, நம்முடைய வல்லமை இணைய இதழில் பிரசுரித்திருக்கிறோம். http://www.vallamai.com/news-cat/22312/ நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  5. Avatar மலர்மன்னன்

    பவள சங்கரி, உங்களுடைய இணைய தளத்தைப் பார்த்தேன். உங்களுடைய வீச்சு எல்லை மிகவும் விசாலமானது என்று கேள்விப் பட்டேன். என்னுடைய பெயரால் வந்திருப்பதைவிட உங்கள் பெயரால் இந்த வேண்டுகோள் வந்திருப்பின் இன்னும் பெரிய தூண்டுதலாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். உங்களுடைய கடமையுணர்வுக்கு மிக்க நன்றி. செய்ய வேண்டியன நிறையவே உள்ளன. நம்மால் இயன்றதைச் செய்வோம்.
    -மலர்மன்னன்

    • http://www.vallamai.com/news-cat/22312/

      அன்பின் திரு மலர்மன்னன் ஐயா,

      தங்களுடைய மன விசாலமும், பெருந்தன்மையும் எம் போன்று சாமான்யரையும் மனமார பாராட்டும் பண்பை நல்கியுள்ளது. மிக்க நன்றி.

      தங்கள் விருப்பம் போன்று தங்கள் இடுகையின் கீழே எம் வேண்டுதலும் இணைத்துள்ளோம். ஆண்டவன் அருளால் தங்களுடைய தன்னலமற்ற பெருநோக்கம் கட்டாயம் முழுமையாக நிறைவேறும். அதற்கான பிரார்த்தனையும் செய்கிறோம். நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *