ஒரு விறகு வெட்டி ஒரு நாள் காலை, விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான். விறகை வெட்டி கட்டுக் கட்டாகக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வந்தான். தன் பட்டறையில் பெரிய விறகுகளை சிறிதாக வெட்டிச் சந்தைக்கு விற்கச் சென்றான். மதியம் மறுபடியும் சந்தைச் சென்று மேலும் விறகுகளை விற்கச் செல்லலாம் என்று எண்ணி கோடாலியைத் தேடினான். அதிர்ச்சிக்குள்ளானான். விறகுகளை வெட்ட இருந்த ஒரு கோடாலி எங்கே சென்றது என்று பதறிப்போய் வீடு முழுக்கத் தேடினான். வீட்டைச் சுற்றிலும் தேடினான். எங்கும் இல்லை.
கோடாலியைத் தேடித் தேடி, அவனுக்கு அதிகமான பதற்றம் ஏற்பட்டது. ஒன்றும் புரியவில்லை. அப்போது அவனது கண்களுக்கு வீட்டைத் தாண்டி நின்றிருந்த பக்கத்து வீட்டுச் சிறுவன் கண்களில் அகப்பட்டான். விறகு வெட்டி அவனைக் கூர்ந்து நோக்கினான். “அவன் நம் பட்டறைக்கு பக்கத்தில் நிற்பதைப் பார்த்தால், அவன் கால் மாற்றி நிற்பதைப் பார்த்தால், இறுமாப்புடன் கைகளைச் சட்டைப் பையில் விட்டு கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தால், அவன் தான் என் கோடாலியை எடுத்திருப்பானோ? அதை நான் எப்படிக் கண்டு பிடிப்பது?” என்று எண்ணினான்.
விறகுவெட்டிக்கு அச்சிறுவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. “இந்தத் தவறுக்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று மனத்திற்குள் கருவினான்.
அடுத்த நாள், அவன் முன்பே வெட்டிய விறகுகளை விற்க எடுக்கும் போது, அதற்கிடையே கோடாலி இருப்பதைக் கண்டான். “அடடா.. இப்போது ஞாபகம் வருகிறது. விறகுகளை வெட்டிய பின், கட்டிற்கு பக்கத்தில் வைத்து விட்டு எங்கெல்லாமோ தேடியிருக்கேன்!” என்று நினைவு கூர்ந்தான்.
அன்று அவன் அந்தப் பக்கத்து வீட்டுச் சிறுவனைக் கண்ட போது, அவனைக் கூர்ந்து கவனித்தான். அவனைத் தலை முதல் கால் வரைப் பார்த்தான். “சே.. என்ன விசித்திரம்.. நேற்றைக்கும் இன்றைக்கும் இச்சிறுவனிடம் எத்தனை வித்தியாசம்.. இன்று குற்றமற்ற முகமாகத் தெரிகிறதே..” என்று தன் தவறுக்காக வருந்தினான்.
- முள்ளாகும் உறவுகள்
- சங்கர் தயாளின் “ சகுனி “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
- உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்
- நினைவுகளின் சுவட்டில் – 90
- சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
- எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)
- மனநல மருத்துவர்
- முள்வெளி அத்தியாயம் -14
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
- கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
- பழையபடி மரங்கள் பூக்கும்
- திருக்குறள் விளம்பரக்கட்டுரை
- திருடுப் போன கோடாலி
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்
- தப்பித்து வந்தவனின் மரணம்.
- துருக்கி பயணம்-7
- தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
- மஞ்சள் கயிறு…….!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
- நினைவுகள் மிதந்து வழிவதானது
- காசி
- இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
- குரோதம்
- நினைவு
- “காலம் தீண்டாத கவிஞன்…….கண்ணதாசன்”
- “செய்வினை, செயப்பாட்டு வினை“
- பஞ்சதந்திரம் தொடர் 49
- நான் ‘அந்த நான்’ இல்லை
- நீட்சி சிறுகதைகள் – பாரவி
- நிதர்சனம் – ஒரு மாயை?
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து
- இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்
- அவனுடைய காதலி
- எனது வலைத்தளம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58
- கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )
- எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2