மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது

author
2
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012


க.சோதிதாசன்

என் நகரத்தில்

அமைதி பிரகடனபடுத்த பட்டிருக்கிறது

 

வீதிகள் அழகு படுத்த படுகிறது.

 

இடிபாடுகளில் இருந்து

புதிதாய் முளைக்கின்றன

சீமெந்து காடுகள்

 

நகர அரங்குகளில்

இரவ நிகழ்சி களைகட்டுகிறது

 

அயல் நாட்டு பாடகர்கள ்

உச்சஸ்தாயில் இசைக்கிறார்கள்

விரசம் வழியும் பாடல்களை

 

அன்னிய மொழி பெண்ணின் நடனத்திற்கு

எழுகிற சிவில் சத்தத்தில்

அதிர்கிறது காற்று

 

மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது.

 

அரசியல் தலைவர்கள் அச்சமில்லாது

மாலை ஏற்க்கிறார்கள்

 

அடையாளம் நிருபிக்கபடாமல்

என்னால் நகர முடிகிறது

 

எல்லாம் சரி தான்

என்னுடய நிலம்

இன்னொருவனுடயதாகியிருக்கிறது.

Series Navigationஅமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    எல்லாம் அழிந்த பிறகு
    மிஞ்சுவதை என்ன பெயர்
    சொல்லி வேண்டுமானாலும்
    அழைக்கலாம்,
    அமைதி என்றும் கூட!

  2. Avatar
    புனைப்பெயரில் says:

    ஆத்மாவும், அடையாளமும் அழிக்கப்பட்ட பின் நிலம் இருந்தால் என்ன ..? போனால் என்ன..? கையிலே காசிருந்தால் எங்கோ ஒரு மூலையில் நிலம் வாங்கலாம்…? சிதைந்த முகம் மறைக்க முக்காடு வேண்டாம்… உலகம் பார்க்கட்டும்… சிதைந்த நம் முகத்தில் விழிக்கட்டும்… உண்மை உரைக்கட்டும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *