கதையே கவிதையாய்! (2)

This entry is part 10 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

இரு பாதுகாவல் தேவதைகள்

ஒரு பொன்மாலைப் பொழுதில் நகர எல்லையில் இரு பாதுகாவல் தேவதைகள் சந்தித்து, ஒருவரை ஒருவர் வாழ்த்தியவாறு உரையாடலானார்கள்.

ஒரு தேவதை, “தற்போது என்ன செய்கிறாய், உனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்ன?” என்றது.

மற்றொரு தேவதை, “பள்ளத்தாக்கின் அடியில் வாழும் மிக மோசமாக மதிப்பிழந்த, பெரும் பாவியான, வீழ்ச்சியடைந்த ஒரு மனிதனின் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி அது என்பது உறுதி” என்று பகன்றது.

முதலாம் தேவதை, “அது எளிதான பணிதானே. நான் பாவிகளை நன்கு அறிந்திருக்கிறேன். மேலும் பலமுறை அவர்களுடைய பாதுகாவலராகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இம்முறை அதோ அங்கிருக்கும் மரங்களின் நிழலில் வாழுகின்ற நற்துறவி ஒருவரின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதுவும் மிகச்சிரமமான மற்றும் அதிசூட்சுமமான பணி என்பதும் திண்ணம்.”. என்றது.

முதல் தேவதையோ, “ஒரு பாவியை பராமரிப்பதை விட ஒரு துறவியை பராமரிப்பது எங்கனம் சிரமமாக இருக்கும்?, இது உம்முடைய ஒரு ஊகம் மட்டுமே” என்றது.

மறறைய தேவதையோ, “ எம்மை ஊகிப்பவன் என்று கூறும் அளவிற்கு, என்ன ஒரு துடுக்குத்தனம் உமக்கு, ஆயினும் யான் விளம்பியது உண்மையே. நீர்தான் ஊகிப்பவர் என்றே யாம் எண்ணுகிறோம்!”

பிறகு அந்த இரு தேவதைகளுக்கும், வாய்ளவில் ஆரம்பித்த சண்டை, பின்னர் முட்டி மற்றும் சிறகுகளுடனான சச்சரவாய் ஆனது.

அவர்கள் சண்டையிடும் வேளையில் ஒரு தலைமைத் தேவ தூதர் அவ்விடம் வந்தார்.. அவர்களின் சண்டையை விலக்கியவர், “ஏன் சண்டையிடுகிறீர்கள்? ஈதனைத்தும் எதற்காக? நகர வாயிலில் இவ்வாறு சண்டையிடுவது பாதுகாவல் தேவதைகளான உங்களின் தகுதிக்கு சற்றும் ஏற்புடையதாக இராது என்பதைக்கூட அறியாதவர்களா நீங்கள்?. சொல்லுங்கள் அப்படி என்னதான் கருத்து வேறுபாடு உங்களுக்குள் என்று.?

இரு தேவதைகளும், . ”தனக்கு அளிக்கப்பட்ட பணியே சிரமமானதாக இருப்பதால், தாமே அதிகப்படியான அங்கீகாரம் பெற தகுதியானவர் என்று உடன் மொழியலானார்கள்.

தலைமை தேவதூதர் தலையை அசைத்துக்கொண்டே அவனை நினைவில் கொண்டு வந்தார்.

பின்னர் அவர், “என் நண்பர்களே, உங்களில் எவர் மதிப்பிற்குரிய பெரும் பணிகொண்டவரும், அதற்கான பரிசு பெறக்கூடியவர் என்பதையும் தற்போது என்னால் சொல்ல இயலாது. ஆயினும் இது என் சக்திக்கு உட்பட்டதாக இருப்பதால், அமைதி ஏற்படுவதற்காகவும், பாதுகாப்புப் பணி செம்மையாக நடைபெறுவதற்காகவும், இருவரும் அடுத்தவர் பணியே எளிது என்று உறுதியாக எண்ணுவதால் உங்கள் இருவருக்கும் அடுத்தவரின் தொழிலைக் மாற்றிக் கொடுக்கிறேன். இப்போது சென்று உங்கள் பணியை மகிழ்ச்சியாக நிறைவேற்றுங்கள்” என்றார்.

இவ்வாறு முறைமைப்படுத்தப்பட்டவுடன் இருவரும் அவரவர் வழியில் செல்லலானார்கள். ஆனால் இருவரும் அந்தத் தலைமைத் தூதரை பெருங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தனர். “ஓ.. அன்றாடம் தேவதைகளாகிய நம் வாழ்க்கையை மென்மேலும் சிரமத்திற்குள்ளாக்குகிறார்களே இந்த தலமைத் தேவதூதர்கள்!” என்று மனதிற்குள்ளேயே கருவிக் கொண்டனர்.

ஆனால் அந்த தலைமை தேவதூதரோ அங்கேயே நின்றுகொண்டு மீண்டும் ஒருமுறை அவனை நினைவிற்கொணர்ந்து, “ உண்மையாகவே நாம் விழிப்புடன் இருந்து நம் பாதுகாவல் தேவதைகளைக் காக்க வேண்டும்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

THE TWO GUARDIAN ANGELS

On an evening two angels met at the city gate, and they greeted one another, and they conversed.

The one angel said, “What are you doing these days, and what work is given you?”

And the other answered, “It was been assigned me to be the guardian of a fallen man who lives down in the valley, a great sinner, most degraded. Let me assure you it is an important task, and I work hard.”

The first fallen angel said, “That is an easy commission. I have often known sinners, and have been their guardian many a time. But it has now been assigned me to be the guardian of the good saint who lives in a bower out yonder. And I assure you that is an exceedingly difficult work, and most subtle.”

Said the first angel, “This is but assumption. How can guarding a saint be harder than guarding a sinner?”

And the other answered, “What impertinence, to call me assumptious! I have stated but the truth. Methinks it is you who are assumptious!”

Then the angels wrangled and fought, first with words and then with fists and wings.

While they were fighting an archangel came by. And he stopped them, and said, “Why do you fight? And what is it all about? Know you not that it is most unbecoming for guardian angels to fight at the city gate? Tell me, what is your disagreement?”

Then both angels spoke at once, each claiming that the work given him was the harder, and that he deserved the greater recognition.

The archangel shook his head and bethought him.

Then he said, “My friends, I cannot say now which one of you has the greater claim upon honour and reward. But since the power is bestowed in me, therefore for peace’ sake and for good guardianship, I give each of you the other’s occupation, since each of you insists that the other’s task is the easier one. Now go hence and be happy at your work.”

The angels thus ordered went their ways. But each one looked backward with greater anger at the archangel. And in his heart each was saying, “Oh, these archangels! Every day they make life harder and still harder for us angels!”

But the archangel stood there, and once more he bethought him. And he said in his heart, “We have indeed, to be watchful and to keep guard over our guardian angels.”

Series Navigationகடிதம்இது…இது… இதானே அரசியல்!
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு டாக்டர் ஜான்சன்,

      தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *