இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்

This entry is part 28 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

இராம. வயிரவன் (25-Aug-2012) உருளைக்கிழங்கையும் கேரட்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வானலியில் ஒரு கறண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கி வைத்திருக்கிற உருளைக்கிழங்கு மற்றும் கேரட் துண்டுகளை அதிலே போட்டு சிறிது உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி போட்டுக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொள்ளலாம். உருளைக்கிழங்கும் கேரட்டும் நன்கு வெந்துவிடும். சற்று நேரத்தில் இறக்கி வைத்து விட்டால் உருளைக்கிழங்கு கேரட் பொறியல் தயார். ‘என்ன இது கட்டுரை வேறு மாதிரியாகப் போகிறதே..’ […]

பூனைகளின் மரணம்

This entry is part 27 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– பத்மநாபபுரம் அரவிந்தன் – யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் இயற்கையான மரணத்தை? வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் தவறிக் கிணற்றுள் விழுந்தோ .. விபத்து சார்ந்த மரணங்களையன்றி பூனைகளின் இயற்கையான மரணம் மனித மனதைப் போல பெரும் புதிர்… குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் உயர இடத்தில் பரபரக்க ஏறும் … எப்படித் துக்கிப் போட்டாலும் கால்கள் ஊன்றித் தரையிறங்கும் புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் நாக்கால் நக்கியே தூய்மையாகும் விரட்டி […]

பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “

This entry is part 26 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சிறகு இரவிச்சந்திரன். விளையாட்டைப் பற்றிப் பல படங்கள் வந்ததுண்டு. இது ‘விளையாட்டு ‘ப் பையனை பற்றிய படம். நாமும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். மரத்தடியில், பஸ் ஸ்டாப்பில், ஒத்த வயது நண்பர்கள் இயல்பாகப் பேசிக் கொள்வது போலவே, படம் எடுப்பது, இப்போதைய டிரெண்ட். அதற்கு முதல் வித்து வெங்கட்பிரபு. ரஞ்சித் அவரது சிஷ்யன். பின் படம் வேறு எப்படி இருக்கும்? தினகரன் (எ) தீனா ( தினேஷ் ) +2 அரியர்ஸ் மாணவன். பூர்ணிமா […]

அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்

This entry is part 25 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சினிமா தியேட்டருக்குப் போவது கடும் அலர்ஜி தரும் அனுபவமாக எனக்கு முதன் முதலில் ஆனது அன்றைய ஜகன்மோகினி படத்தைப் பார்க்கப்போனபோது. மந்திரவாத மாஜிக் படம் என்று சிறுவர்கள், பெண்கள் பக்கம் கூட்டம் ஒருபக்கம் என்றால், ஜெயமாலினி தரிசனத்திற்காக ஆண்கள் வரிசையில் கைலியை மடித்துக்கட்டி மல்லுக்கட்டும் இளைஞர் கும்பல் இன்னொரு பக்கம் என்று கூட்டம் அலைமோதியது. படம் தொடங்க மணியடிக்கப்போகிறார்கள்,  டிக்கெட் இல்லை என்று சொல்லி விடுவார்கள் என்றெல்லாம் பேச்சு பரவ ஆரம்பித்தது. அப்போதுதான் அது  நிகழ்ந்தது.   […]

“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-

This entry is part 24 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

கதை சொல்லி” விருதுகள்                                     மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/- ‘கனவு’ பள்ளி மாணவ – மாணவியருக்கான ‘கதை சொல்லி’ நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும்,மீட்டெடுக்கவுமான முயற்சியாக மாணவ – மாணவியர் இதில் பங்கு பெற்று வருகின்றனர். Iஇதன் தொடர்ச்சியாக கதை எழுதும் போட்டியையும் நடத்தி வருகிறது. சிறுவர் கதைகள் எளிய நடையில் மூன்று முதல் ஜந்து பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். எந்த மையத்தையும், தலைப்பையும் கொண்டிருக்கலாம். சுயமான […]

மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)

This entry is part 23 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சித்ரா சிவகுமார், ஹாங்காங் வெகு காலத்திற்கு முன்பு, கொரிய நாட்டின் கும்காங் மலையடிவாரத்தில், ஒரு ஏழை விறகுவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தாயுடன் தனியே வாழ்ந்தான். மணம் ஆகியிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும், மலைக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று, தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு முன்பனி காலத்தில், சிவப்பு மேபில் மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லாப்பகுதியும் தகதகவென்று ஒளிர்ந்து கொண்டு இருந்த போது, எப்போதும் போல், காட்டில் மரம் வெட்டச் சென்றான். கடினமாக மரத்தை […]

பழமொழிகளில் ‘புறங்கூறுதல்’

This entry is part 22 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பிறவிகளில் உயர்ந்த பிறவி மனிதப் பிறவியாகும். புல்லாகிப் பூடாகி புழுவாகி, மரமாகி பல்மிருகமாகி, பேயாகி, கணங்களாகி மனிதராகப் பிறந்திருக்கும் பிறப்பே உயர்வானது. இம்மனிதப் பிறவியில் செய்யும் செயல்களைப் பொறுத்தே அடுத்த பிறவி என்பது அமைகிறது. நல்லது செய்கின்றபோது பிறவி முடிந்து இறைவனோடுமனிதன் இணைந்து விடுகின்றான். தீயது செய்கின்றபோது அவனது பிறவிப்பிணி முடியாது மீளவும் தொடர்கிறது. அதனால்தான் ஔவையார், ‘‘அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது’’ […]

சாமி போட்ட முடிச்சு

This entry is part 21 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை பிரமிப்புடன் பார்த்தபடியே படுத்துக் கிடந்த சாமியாடிக்கு தெக்காலத் தோப்புப் பக்கமிருந்து வந்த நாய்க் குரைப்புச் சத்தம் சற்று உறுத்தலாகவே இருந்தது. “இதென்ன கருமமோ தெரியல இன்னிக்கு நாய்க இந்தக் கூப்பாடு போடுதுக…ஒருவேளை வெள்ளானப்பட்டியில் ப+ந்த மாதிரி…நம்மூர்ப்பக்கமும் முகமூடித் திருடனுக ப+ந்துட்டானுகளோ?” யோசனையுடன் எழுந்து கொய்யா மரத்தருகே சென்று தெக்காலத் தோப்புப்பக்கமாய்ப் பார்வையைச் செலுத்தினார். தூரத்தில் நேர்கோடாய்ப் படுத்துக் கிடந்த ரயில் தண்டவாளத்தின் மீது […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40

This entry is part 20 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 49. நீண்ட விஸில் சப்தம். பேருந்து குலுங்கி நின்றது. ஒரு பெருங்கூட்டமே இறங்குவதுபோலிருந்தது. இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளுடன் ஓர் இளைஞனும், கைக்குழந்தையுடன் பெண்ணொருத்தியும் இறங்கினார்கள். அவர்களைத்தொடர்ந்து இறங்கினேன். வேகமாக வந்த சைக்கிளொன்று என்மீது இலேசாக இடித்து நின்றது. நிலை தடுமாறி விழ இருந்தவள் சமாளித்து நின்றேன். சைக்கிளில் பத்துபன்னிரண்டு வயது சிறுவன். சட்டென்று பிரேக் அடித்து பாரில் இறங்கி காலை ஊன்றினான். ‘கோவிச்சுக்காதீங்க அக்கா, பெல்லடித்துக்கொண்டுதான் வந்தேன். நீங்க கவனிக்கலை’, […]

முள்வெளி – அத்தியாயம் -23

This entry is part 19 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் மீது அடிக்கப்பட்ட ஆணியில் ஒயர் சுற்றப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. ஈசல்களும் கருப்பு நிற சின்னஞ்சிறு பூச்சிகளும் அந்த பல்பை மொய்த்து சிலரின் சட்டை மற்றும் தலை மீது […]