கருப்பு விலைமகளொருத்தி

This entry is part 11 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 

வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில்

நான் சந்தித்த விலைமகள்

மிகவும் அகங்காரத்துடனும்

அழகுடனும்

கருப்பாகவுமிருந்தாள்

 

காலையில் நாம் உணவுக்காகச் செல்லும்

உணவகத்தின் இன்னுமொரு மூலையில்

பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள்

அவளது வயிறு மேடிட்டிருப்பதை

கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன்

கருவுற்றிருந்தாள்

பசியகன்றதும்

மரத்தடிக்குச் சென்றாள்

 

நாள்தோறும் சந்திக்க நேரும்

அவ் வதனத்தை

எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும்

வங்கி முன்னாலிருக்கும்

ஒரேயொரு சிறு நிழல் மரம்

அவளது இருப்பிடம்

ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான

அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பாள்

இன்னும் சிறு குழந்தைகள் இருக்கக் கூடும்

 

இறுதி நாளில்

நான் விசாரித்தேன்

உணவக முகாமையாளரிடமிருந்து

சில தகவல்கள் கிடைத்தன

‘ஆம். அவள் கருவை அழித்துக் கொண்டாள்

இப் பக்கத்து ஆட்களல்ல.’

 

கவலையோடு சேர்த்து கோபமும் எழுந்ததன்

காரணம் எனக்குத் தெரியும்

என்னால் அப் பெண்ணின் உள்ளத்தை

புரிந்துகொள்ள இயலாது

வயிறு நிறையச் சாப்பிட்டு

செய்வதறியாது

எழுந்து நடந்தேன்

 

குமாரி பெர்னாந்து

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigation6 ஆகஸ்ட் 2012ஆற்றங்கரைப் பிள்ளையார்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *