எழுதியவர் : ‘கோமதி’
பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் தேடறது?’’ என்று கவலைப்பட்டாள்.
”மல்லேச்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் கூட்டிக்கொண்டுபோயிருப்பார்கள் ” என்றுசொன்ன பையன் விளையாட ஓடிவிட்டான். மணி மாலை நாளுக்கு மேலாகிவிட்டது.
மாடியில் தெரிந்தவர்கள் குடியிருந்தார்கள். அவர்களிடம் சென்று உதவும்படி பாகி கேட்டாள். “ஹோசூர்லேருந்து எங்க வீட்டுக்காரர் வருவதற்குள் நேரமாகிவிடும். நீங்கள் முதலில் உங்கள் கணவருக்கு போன் செய்து விவரத்தைச் சொல்லுங்கள்” என்று அந்த வீட்டவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
பாகீரதியின் கணவன் வைத்தி. அவன் கிராமத்துக்கு போயிருந்தான். வரும்போது
பஞ்சுவை பெங்களூர் சுத்திப்பார்க்க அழைத்து வந்தான். தினமும் ஹோசூருக்கு வேலைக்கு போகிறான் வைத்தி. சனி, ஞாயிறில் பஞ்சுவை வெளியே அழைத்துச்சென்று சிலஇடங்களை சுத்திக் காட்டினான். இன்று திங்கட்கிழமை ஆபீஸ் புறப்படும்போது பஞ்சுவையும் கூட அழைத்துப்போனான். வைத்தி பஸ் ஏறியவுடன் பஞ்சு வீட்டுக்குவந்துவிடுவதாகத்தான் சொல்லி காபி மாத்திரம் குடித்து கிளம்பினான்.
திரும்பி வராததால் வைத்தி தன்னுடன் ஹோசூர் அழைத்துப் போயிருப்பாரென்று
பாகியும் பேசாமலிருந்தாள். போலீஸ் அவனை எதற்கு பிடித்தது? எங்கே
வைத்திருக்கிறார்கள்? பாகிக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை.
அதற்குள் மாடிவீட்டு நாயர் தான் நேராக போலீஸ் ஸ்டேஷன் வருவதாகவும் பாகியை அங்கே வரச்சொல்லி போன் செய்தார். பாகி உடனே புறப்பட்டுப் போனாள். ராயர் போலீஸாரிடம்,“பாவம்! கிராமத்து பையன் பெங்களூர் பார்க்க வந்தவன். கன்னடமோ, இங்கிலீஸோ தெரியவில்லை. அதற்காக போலீஸில் பிடித்து வைத்து விட்டீர்களா? ”, என்று கேட்டார்.
“இல்லை, ஸார். என்ன கேட்டாலும் திரு திரு என்று விழிக்கிறான். அட்ரஸ்கூட சொல்லத் தெரியவில்லை. நேற்று போதைப் பொருள் கடத்தும் கும்பலைப் பிடித்தோம்.அதில் இரண்டு, மூன்று பேர் தப்பிவிட்டார்கள். அவர்களும் இப்படித்தான் வெகுளிபோல நடிப்பார்கள். அதனால் சந்தேகப்பட்டுதான் பிடித்தோம். யாரும் தேடிவரவில்லையே என்றுதான் பார்த்தோம். சாப்பாடு, காபி கொடுத்தாலும் வேண்டாமென்று விட்டான். வைத்தி வைத்தி என்றுதான் சொன்னான்.’’
“ஆமாம். அவன் வைத்தி என்பவருடன் அவர் வீட்டில்தான் தங்கி இருக்கிறான்’’ இது வைத்தியின் மனைவி”என்று நாயர் சொன்னார்.
பாகியும் “நல்ல பையன். கிராமத்தை விட்டு வெளியில் வந்ததில்லை-. ஆயிரம் தேங்காயைக் குவித்தாலும் உறித்து தள்ளிவிடுவான். தென்னை மட்டைகளை கீத்துமுடைந்து அடுக்கிவிடுவான். சைக்கிளில் கட்டியே மூட்டை மூட்டையாக எடுத்துப்போய் நெல்லை அரிசியாக்கி வந்து அடுக்கிவிடுவான். நல்ல உழைப்பாளி. எங்க வீட்டுக்காரரின் நண்பர்” என்று அவர்கள் கிராமத்தைப் பற்றியும் சொன்னாள்.
”ஒரு காரணமுமில்லாமஒரு நாஷீமீ பூரா சோறு தண்ணி இல்லாம ஜெயில்ல இருக்கவா பெங்களூர் வந்தா?என்று கேட்டு வைத்தியும் வந்துவிட்டான்.
”ராமதாசர் எறும்பைப் பிடித்து வீட்டில்பூச்சியைப் பிடித்து விளையாடி ஜெயிலிலிருந்ததாக கதை சொல்வார்கள். நான் என்ன குற்றம் செய்து எந்த ஜீவனை வருத்தினேனோ? எனக்கும் ஜெயில்வாசம் விதித்திருந்தது. என் நினைவு தெரிந்து எந்த ஜீவனையும் வருத்தவில்லை. நான் பிடிபட்டது உங்களுக்கு தெரிந்ததால்தானே இப்போது விடுதலை கிடைத்தது. நான் ஊருக்குப் போயிருப் பேன் என்ற பேசாமலிருந்திருந்தால் நானும் சிறையில்தானே கிடக்கவேண்டும். முருகன் அருள்தான்”, என்றான் பஞ்சு.
“ஆமாம். கணேசன் என்ற கோடி வீட்டுப் பையன் சொன்னதால்தான் விஷயமே தெரிந்தது. போகும்போது பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைக்கிறேன்”, என்றாள் பாகி.
வைத்தியும், “ நீ ஏன் பயப்படவேண்டும். படபடவென்று உண்மை விவரத்தை தமிழிலேயே சொல்லிவிட்டால் அவர்கள் ஓரளவு புரிந்துகொண்டு குற்றவாளி இல்லை என்ற நினைக்கலாமில்லையா? என்றான்.
”நான் சட்டென்று போலீஸ் பிடித்ததில் பயந்து விட்டேன். என் ஊரில் நான் ராஜா.
எல்லாருக்கும் தெரிந்தவன். வைத்தி. என்னை என் ஊருக்கே அனுப்பிவிடு. பெங்களூரெல்லாம் எனக்கு பார்க்கவே பிடிக்கவில்லை’’ என்று பரிதாபமாக பஞ்சு
சொன்னான்.
வைத்தி தானே அழைத்துப்போய் பஞ்சுவை அவனுடைய கிராமத்தில் விட்டு வந்தான்.
0
- புதிய அனுபவம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(நிறைவுப் பகுதி)
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி
- காலமும் தூரமும்
- நல்லதோர் வீணை..!
- இடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்
- நேர்மையின்குரல்
- குரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு
- சிவாஜி ஒரு சகாப்தம்
- 6 ஆகஸ்ட் 2012
- கருப்பு விலைமகளொருத்தி
- ஆற்றங்கரைப் பிள்ளையார்
- கவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா
- 2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்
- ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்! கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012)
- காலம்….!
- கதையே கவிதையாய்! (3)
- அது ஒரு வரம்
- உயர்வென்ன கண்டீர்?
- காலத்தின் விதி
- சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41
- உரஷிமா தாரோ (ஜப்பான்)
- ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!
- இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10
- என்ன செய்வார்….இனி..!
- இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு
- தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்
- முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)
- பழமொழிகளில் கனவும் நினைத்தலும்
- பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “
- தொலைந்த உறவுகள் – சிறுகதை
- வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு