கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது.
அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும் அறிவுடையதாகவும் இருக்கலாம். – உம்மால் பறக்க இயலாது என்பது பரிதாபத்திற்குரியது” என்று பதிலிறுத்தது.
மேலும் இதெல்லாம் ஏதும் செவியில் விழாதது போல, அந்த அரவம், “உம்மால் ஆழமான இரகசியங்களைக் காணவும் இயலாது, மறைந்த ராச்சியங்களின் பொக்கிசங்களினூடே ஊர்ந்து செல்லவும் இயலாது. ஆனால் நேற்று, யான் மாணிக்கக் குகையினுள் இருந்தேன். அது செம்மையாக பழுத்த மாதுளையின் இருதயம் போன்று இருந்தது, மற்றும் மெல்லிய ஒளிக்கிரணம் அதனை தீச்சுவாலை ரோசாவாக ஒளிரச் செய்கிறது. எம்மைத் தவிர எவரால் இது போன்ற அற்புதங்களையெல்லாம் கண்டு களிக்க இயலும்?” என்றது.
அதற்கு அந்த வானம்பாடி, “எவருமில்லை, எவருமில்லைதான் என்றாலும் நீவிர் அந்த சுழற்சிகளின் படிக நினைவுகளுடன் இருந்தாலும் பாவம் உம்மால் இசை பாட இயலாதே” என்றது.
மேலும் அந்த அரவ்மோ, “பூமியின் உட்பாகத்தை ஊடுறுவிச் செல்லும் வேருடனான ஒரு செடியை அறிவேன் யான், மேலும் அந்த வேரை உண்பவர்கள் ஆசுடார்ட் என்கிற பெண் தெய்வத்தைவிடவும் மேலும் அழகாக மாறிவிடுவார்களாம்” என்றது.
அதற்கு வானம்பாடியோ, “எவருமில்லை, எவருமில்லைதான் என்றாலும் நீவிர் பூமியின் மாயச் சிந்தைகளை திறக்க வல்லவராயினும், பாவம் உம்மால் பறக்க இயலாதே” என்றது.
மேலும் அந்த அரவமோ, “ஒரு மலையின் அடியில் கருஞ்சிவப்பு வண்ண நீரோடை ஒன்று ஓடிக்கொண்டுள்ளது. எவர் ஒருவர் அதனை பருகுகிறாரோ, அவர் என்றும் அழிவற்ற தெய்வத்தன்மையைப் பெறுவர். நிச்சயமாக, எந்தப் பறவையாலோ அல்லது மிருகத்தினாலோ அந்த கருஞ்சிவப்பு வண்ண நீரோடையைக் கண்டுபிடிக்க இயலாது.” என்றது.
மேலும் அந்த வானம்பாடியோ, “நீவிர் சூது நிறைந்தவராகவும் இருக்கலாம், கடவுளைப் போன்று இறப்பற்றவராகவும் இருக்கலாம். ஆயினும் பாவம் உம்மால் பாட இயலாதே” என்று பதிலளித்தது.
மேலும் அந்த அரவமோ, “யான் ஒரு முறை நிலவு வருகையில் கண்டதொரு புதையுண்ட ஆலயத்தை அறிவேன்: அது மறந்துபோன ஒரு இராட்சத இனத்தினால் கட்டப்பட்டது. அதன் சுவர்களிலெல்லாம் காலம் மற்றும் அண்டவெளி பற்றிய இரகசியங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் அதனை வாசிப்பவர் தம்மைக் கடக்கும் புரிதல்கள் அனைத்தையும் விளங்கிக் கொள்வர்” என்றது.
அந்த வானம்பாடியோ, “அவ்வாறு நீவிர் விரும்பினால் உம்முடைய நெகிழ்வான உடல் கொண்டு காலம் மற்றும் அண்டவெளியின் அனைத்து அறிவுகளையும் உம்மால் சுற்றி வளைத்துக் கொள்ள முடியுமாயினும் – பாவம் உம்மால் பறக்க இயலாதே” என்றது.
பிறகு வெறுப்படைந்த அந்த அரவம், திரும்பி தம் வங்கிற்குள்ளேயே நுழையும் போது, “மரமண்டைப் பாடகன்!” என்று முணுமுணுத்தது.
மேலும் அந்த வானம்பாடியோ, “பாவம் உம்மால் பாட இயலாது. பரிதாபம், பரிதாபத்திற்குரிய எம் அறிவாளியே உம்மால் பறக்க இயலாதே”, என்று பாடிக்கொண்டே பறந்து சென்றது.

THE SCHOLAR AND THE POET

Said the serpent to the lark, “Thou flyest, yet thou canst not visit the recesses of the earth where the sap of life moveth in perfect silence.”
And the lark answered, “Aye, thou knowest over much, nay thou art wiser then all things wise — pity thou canst not fly.”
And as if he did not hear, the serpent said, “Thou canst not see the secrets of the deep, nor move among the treasures of the hidden empire. It was but yesterday I lay in a cave of rubies. It is like the heart of a ripe pomegranate, and the faintest ray of light turns into a flame-rose. Who but me can behold such marvels?”
And the lark said, “None, none but thee can lie among the crystal memories of the cycles — pity thou canst not sing.”
And the serpent said, “I know a plant whose root descends to the bowels of the earth, and he who eats of that root becomes fairer than Ashtarte.”
And the lark said, “No one, no one but thee could unveil the magic thought of the earth — pity thou canst not fly.”
And the serpent said, “There is a purple stream that runneth under a mountain, and he who drinketh of it shall become immortal even as the gods. Surely no bird or beast can discover that purple stream.”
And the lark answered, “If thou willest thou canst become deathless even as the gods — pity thou canst not sing.”
And the serpent said, “I know a buried temple, which I visit once a moon. It was built by a forgotten race of giants, and upon its walls are graven the secrets of time and space, and he who reads them shall understand that which passeth all understanding.”
And the lark said, “Verily, if thou so desirest thou canst encircle with thy pliant body all knowledge of time and space — pity thou canst not fly.”
Then the serpent was disgusted, and as he turned and entered into his hole he muttered, “Empty-headed songster!”
And the lark flew away singing, “Pity thou canst not sing. Pity, pity, my wise one, thou canst not fly.”

author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *