அம்மா

This entry is part 9 of 31 in the series 16 செப்டம்பர் 2012

 

(1)

 

அம்மா

இனியில்லை.

 

வெயிலில்

வெறிச்சோடிக் கிடக்கும்

ஒற்றையடிப்  பாதையாய்

மனம்

ஒடிந்து கிடக்கும்.

 

வேலைக்குப் போய்

அம்மாவுக்கு

வாங்கித் தந்தது

ஒரே ஒரு சேலை.

 

அழுவேன்

நான்.

 

ஆண்டுகள் பல

அம்மாவிடம் பேசாத அப்பா

நாற்காலியில் கிடத்தப்பட்டிருக்கும்

’அம்மாவின்’ தலைக்கு

எண்ணெய் வைப்பார்.

 

அது

இது வரை

என் விவரம் தெரிந்த வரை

அம்மாவுக்கு

அப்பா செய்த

ஒரே ஒரு சேவகம்.

 

அழுவார்

அப்பா.

 

இருந்து

அம்மா

இன்னல்களில்

அழுது நான் பார்த்ததில்லை.

 

அழுவேன் நான்

அம்மா

இல்லாததற்கும்.

இருந்து

அழாததற்கும்.

 

(2)

 

இருமி

இருமி

இளைப்பாயிருக்கும்.

 

முழங்கால்கள்

நெஞ்சோடு சேர்த்து

களைப்பாயிருக்கும்.

 

”அம்மா” என்று

அடி மனம்

கரையும்.

 

‘அம்மாவின்’ வயிற்றில்

மீண்டும்

கர்ப்பித்து

உறக்கம் கொள்வதாய்

இருக்கும்.

’அம்மா’

எப்போதும்

இல்லாமலில்லை.

 

மண்குடம்

என்னுள்

வெளி அவள்.

 

 

கு.அழகர்சாமி

Series Navigationஅக்னிப்பிரவேசம் -1மணிபர்ஸ்
author

கு.அழகர்சாமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    K A V Y A says:

    தமிழ் எழுத்துலகில் மிகவும் சிறப்பான இடத்தைப்பிடித்திருக்கும் கு.அழகிரிசாமியின் பெயரைக்கொண்டிருக்கும் இக்கவிஞர் அந்த எழுத்தாளரை சில வரிகளில் நினைவுபடித்தினாலும், அவர் எதையும் மறைவாகச் சொல்ல, இவர் பலவிடங்களில் ‘அழுது விடுகிறார்’ ! கு.அழகிரிசாமி நம்மைத்தான் அழ வைப்பார். அவர் விலகிநின்று வேடிக்கை பார்ப்பார்.

    எத்தனை ‘அழுகைகள்’ ஒரு சிலவரி கவிதையில்! போகட்டும். ஆரெல்லாம் அழுகிறார்கள் என்று பார்ப்போம். தந்தை, தாய், மற்றும் மகன். தந்தை கவிஞரின் தாயின் கணவனாக அழுகிறார். தாயோ இருக்கும்போது அழதார். மகனோ தாய் இருந்த போது அழவில்லையே என்று இறந்த போது அழுகிறார். Prima facie, strange mourning. But, indeed, they r common with sensitive humans!
    மகனின் பிரச்சினை நம்மெல்லாரிடமும் அனேகமாக இருக்கும் ஆண்களென்றால்.

    உணர்ச்சிகள் வெளிக்காட்டப்படவேண்டும். ஆண்கள் காட்டுவதில்லை. காட்டியிருக்கலாமே என நம் நபர் – தாயோ, தந்தையோ, மனைவியோ, தமக்கையோ, தங்கையோ, அண்ணியோ – போனபின், உள்ளுக்குள்ளே குமைந்து அழுவது இவர்கள் பழக்கம். எனவே மகன் இங்கு அழுவது நான் கண்ட காட்சி. The men fear that if their sad emotions r demonstrated, their manliness will b questioned. A woman does not have such psychological pressure to bottle up her emotions of all kind although to laugh aloud is considered to be bad manners in many cultures.

    போகட்டும், தந்தை இவரின் தாயின் மரணத்தில் போது அழுவது கொஞ்சம் சிக்கலைத் தருகிறது. தன் மனைவியோடு பல்லாண்டுகளாக இவர் பேசவில்லை. மரணிக்கும்தருவாயில் தன் மன திருப்திக்காக இவர் ஊற்றுகிறார்; அல்லது எண்ணை தேய்க்கிறார். ஒருவேளை, அவர் மனைவியே அதைக்கேட்டிருந்தால், இவர் கட்சி இன்னும் சக்தியையிழக்கிறத். இருவருக்குமிடையில் ஏன் பல்லாண்டுகளாகப் பிளவு? அனேக நேரங்களில் இரண்டாவது பெண்ணால் ஏற்படும். அப்படியிருந்தால், அவர் கடைசி மணித்துளிகள் வந்தாலும் அவள் மன்னிப்பு என்று மனதார செய்வது கடினம். இரண்டாவது பெண்ணைவிட ஒரு மனைவிக்கு மனவேதனையில்லை என்பது என் அனுபவம்.
    அப்பா அழுதார் என்பது எனக்கு நம்பும்படியில்லை. அப்படியே இருந்தாலும் கவிஞர் ஓரிரு சொற்கள் சொல்லி ஏன் என்று நம்மை நினைக்க வைத்திருக்கலாம்.

    கவிதையின் முடிவு வரவேற்கத்தக்கது. “மீண்டும் உனக்கே மகனாகப் பிறக்கவேண்டும். அம்மா இறக்கவில்லை. என்னுடன் உறைகிறாள் எப்போதும்” ஒரு பாசிட்டிவ் தின்கிங்க்.

    அம்மா ஃபிக்சேஷன் என்பது வெகு சாதாரணம். மனைவிக்குப் பிடிக்காது. கவிஞர் எப்படி சமாளிக்கிறார் எனபது ஒரு நகைச்சுவை. ஒரு அவலச்சுவைக்கவிதை ஒரு நகைச்சுவை முடிப்பதற்காக அவரைச் சீண்டியிருக்கிறேன். Take it easy.
    தாய்க்குப் பின் தாரம். ஆனால் தாய் போன தாரமே சரணம்.

    I always feel that men underrate their wives and overrate their mothers. But being a woman the wife bears the barb. To bear is her lot in married life. To aim is his sadism. The impact of mothers on their sons is said. But I am yet to read about the impact of wife on her husband in a poem. Perhaps, the husband will write a poem after she has gone for ever! Generally it does not happen as he goes for a second marriage.

  2. Avatar
    punaipeyaril says:

    அம்மாவினும் உயர்ந்தது தாரத்துடனான உறவு. மனைவிக்கு என்ன நிர்பந்தம்… நம்மை சகிக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *