ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.

author
2
0 minutes, 1 second Read
This entry is part 7 of 31 in the series 16 செப்டம்பர் 2012

க.சோதிதாசன்.

 

உயிரெங்கும் இனிய நினைவுகளால்

நிறைகிறாய்.

நிஜம் தேடி

பிரபஞசம் எங்கும்

அலைகிறது மனசு

காற்றின் இடைவெளிகளிலும்

முகம் தேடும் கண்.

காதல் நினைவுகளில்

கானல் நிறைத்து

சென்று விழுகிறது பொழுது

சில நாட்களில்

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும்

எழுதியிருக்கிறது காலம்.

 

 

க.சோதிதாசன்.

 

 

யாழ்ப்பாணம்

Series Navigationவிவசாயிஅக்னிப்பிரவேசம் -1
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    K A V Y A says:

    தற்போது திண்ணையில் நான் படித்த கவிதைகளுள் இக்கவிதையை நம்பர் ஒன் என்று சொல்வேன்.

    காதல் அஃதொரு மாயை; ஒரு கானல் நீர். இருப்பதாகத் தோன்றும் ஆனால் இல்லை என்று இக்கவிதை சொல்வதாகத்தான் படுகிறது.

    நினைவுகள். அதன் நிஜத்தைத் தேடுகிறார் எல்லாவிடங்களிலும் (பிரபஞ்சம்) இப்படி பலநாட்கள், அல்லது பலவாண்டுகள் போயின. நிஜம் மட்டும் கிடைக்கவில்லை. ஆக, நிஜம் ஒன்று நிஜமாகவே உண்டென்றால், கவிஞரின் அனுபவத்தில் இல்லையென்று வருகிறது.

    சரி என்னதான் கடைசியில் கிடைத்தது? கானல்! பின், வெறும் ஏக்கங்கள் ஏமாற்றங்கள்தான். இதை ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என்று சொல்வதைவிட உண்மைகள், பேருண்மைகள் என்று சொல்லலாம்.

    இஃதேன் நம்பர் ஒன் கவிதை? இது ஒரு யுனிவர்சல் ட்ரூத்தை சொல்வதால்.

    யுனிவர்சல் ட்ரூத்தென்றால், பள்ளிக்கூடத்தில் கதிரவன் காலையில் தோன்றி மாலையில் மறைவான் என்பதே என்பார்கள். இங்கு ஒருவர் எனக்குச் சொல்லி நினைவுபடுத்தினார். பள்ளிக்கூடத்தைப்பாடத்தை விட்டு வேறொன்றையும் படிக்காமல் வளர்ந்து விட்ட பெரிசுகளோடு சில வேளைகளில் நாம் போராடுவது வாழ்க்கை சுகங்களுள் ஒன்று !.

    ஆனால், மனித உறவுகளும், மனிதனின் ஆசாபாசங்களும் (காதல், காமம், அன்பு, பாசம், துரோஹம் போன்ற உணர்வுகளால் தூண்டப்பட்டு மனிதர்கள் செய்யும் செயல்கள்) எக்காலமும் அதே. ஆதிகாலமுதல் காதலுண்டு. அதை சரியாக அனுபவிக்கத்தெரியாமல் சொதப்பல் பண்ணி மனிதர்கள் மாய்வதுமுண்டு. சில சமயம் ஒருத்திக்காக பலர் அடித்துக்கொண்டு சாவதுண்டு. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ்த்திரப்படத்தின் இறுதிகாட்சி இதுவே (சுந்தர பாண்டியன்). நூறாண்டுக்குப்பின்னரும் ஒரு கதையிருந்தால் அங்கு பலர் ஒருத்திக்காக மாய்வாரகள். வாழ்க்கையில் எதுவுமே புதியன்று. History repeats itself.

    இவையெல்லாம் யுனிவர்சல் ட்ரூத்ஸ். அவைபற்றி பாடுவது கவிஞன். கதிரவன் காலையில் தோன்றுகிறான் எனபவன் விஞ்ஞானி. கதிரவன் தோன்றவேயில்லை என் வாழ்வில் எனக்கதிரவனைத் திட்டுபவன் கவிஞன். யுனிவர்சல் ட்ரூத்ஸ் from different perspectives, Both r true. But the latter is alive and a beautiful truth. Former is a mere truth, hence boring and dull.

    நம் கவிஞர் நமக்கெல்லாம் ஒரு நல்ல ட்ரூத்தைக் காட்டுகிறார். காதல் நிஜமன்று. அதைத்தேடாதீர். என்பதே although said by so many already.

    இதைச் சென்னையில் போனவாரம் ஒரு பெண்ணை ஓடஓட விரட்டிக்கொன்ற இளைஞன் உணர்ந்திருந்தால், அவனும் அவளும் இன்று ஒரு நல்ல சென்னப்பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருப்பர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *