தாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !

This entry is part 19 of 36 in the series 30 செப்டம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பயணத் துக்கு அவர்
புறப்பட்டு விட்டார்  என்று
புரிந்து கொண்டேன்.
எனக்குத் தெரிந்து விட்டது அது.
கால்நடைப் பயணியின்
அந்த அறிவுரை
ஆலய மணி போல்
அடித்திடும் என் நெஞ்சினில் !
எங்கே வந்துள்ளார்  அவர் ?
எப்போது  அவர் வருவது
கடற் கரை மேல்
கான கத்தின் முடிவு எல்லையில் ?
வானம் விடாது
முணுமுணுக்கும் அதனை !

வெகு தூர மூலை ஒன்றில் எனது
வீட்டைக் கட்டிய தற்கு
வருத்தமே எனக்கு  !
எப்படிச்  சிரமத்துடன் திரிந்து
இங்கவர் வருவார் என்று
எனக்குத் தெரியாது !
என் இதயத்தை விரித்துக் காட்டி
எல்லாப் பாதையும் நடந்து
கண்காணித்தேன்
ஆவல்  உறுவேன்  நான்
அவரது கால்தடம்
அங்கு பட வேண்டுமென !

+++++++++++++++++++++++++
பாட்டு : 289  தாகூர்  57 வயதினராய் உள்ள போது 1918-1919 ஆண்டுகளுக்கு இடையில்   எழுதியது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press,
Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  September 24 , 2012

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *