புனைப் பெயரில்…
மேரி மாதா ஆஸ்பத்திரியானாலும் சரி, குப்புசாமி நினைவு ஆஸ்பத்திரி ஆனாலும் சரி, அப்போலோ, கே ஜி ஆஸ்பத்திரிகள் ஆனாலும் சரி, அங்கு பணி புரியும் நிறைய பேர், அரசு ஆஸ்பத்திரிகளிலும் வேலை பார்ப்பார்கள்.
இது சட்டப்படி குற்றம்… தண்டனைக்குறியது…
ஆனால், எல்லா மருத்துவ கல்லூரி இணைந்த அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலைமை மருத்துவராக இருப்பவர்கள் கூட வெளியே தனியே பிராக்டிஸ்…
அரசு மருத்துவமனைகளின் தரக் குறைவுக்கு டாக்டர்கள் காரணமில்லை…
பின்..?
அங்கு அந்த மருத்துவ மனைகளின் டீனாக இருப்பவரே காரணம்… கமிஷன் வாங்கி திட்டங்கள் செயல்படுத்துதல்..
அரசு மருத்துவமனை கட்டமைப்புக்கு கட்டாயம் வெள்ளை நிற அறிக்கை தேவை…
அரசு ஏன் தகவல்களை பொத்தி பொத்தி வைக்க வேண்டும்…?
இணையத்தில் போடலாமே…
அதனால், பாதிக்கப்படும் போது சிலராவது அதில் சரிபார்த்து விஷயங்களைத் துருவி குற்றவாளிகள் தண்டனைப் பெறச் செய்யலாமே…?
அதே டாக்டர்கள் தான் அப்போலே மருத்துவமனையிலும்..?
அதில் பெரிய தரம் என்று நினைக்காதீர்கள்… நடிகை விஜி முதல் சாமான்யன் வரை அங்கு இம்சை அனுபவித்தவர்கள் அதிகம். அது தான் உயர்ந்த சிகிச்சை நிலையம் எனில் , ஏன் போரூர் ராமசந்திராவிற்கும் சிங்கப்பூருக்கும் பிரபலமானவர்கள் ஓடுகிறார்கள்…?
அதனால், அரசு, கட்டாயம், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மந்திரிகள் எம் எல் ஏ ஆகியோர் அரசு மருத்துவ மனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும், என்று சட்டம் கொண்டு வரலாம்.
அப்படி ஏதாவது ஒரு காரணத்திற்கு வெளியே சிகிச்சைப் பெற்றால், அது நேரம் நிர்பந்தித்த எமெர்சென்சியா என்று விசாரிக்க வேண்டும்.
இல்லை அதே மருத்துவ தரம், அரசு மருத்துவமனையில் இல்லையெனில் , அதை கொண்டு வர வேண்டும்.
இன்று தேசத்தை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மருத்தவ வசதி முறைகள்.
இன்று பல ஊரிகளிலும், கிராமம் முதற்கொண்டு, தனியார்களால் பிரமாண்டமான மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரி இணைந்து கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன..
இதில் ஒன்றிரண்டு வேண்டுமானால் கொள்ளையடிக்காத பணத்தில் கட்டப்பட்டிருக்கலாம்… மீதி அனைத்து திருடிய பணங்கள்…
உழைத்து சம்பாரித்தவன் கட்டிய வரிப்பணங்கள், திட்டங்களாக போகும் போது இடையில் இந்த கொள்ளைக் கும்பல் புகுந்து திருடி அடித்த கொள்ளைப் பணம்…
அவை மக்களுக்கு ஒழுங்காக , திட்டங்களாக போயிருந்தால் இந்த நிலையே வந்திருக்காது…
இன்று ஒரு தாயின் பெயரில் அங்கங்க கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கல்வி சாம்ராஜ்யத்தின் ஓனரின் 10வருட முன்பு ஜாதகம் அறியுங்கள்.. அவர் ஒரு மதம் சார்ந்த அமைச்சரின் அல்லக்கையாக இருந்தவர்…
இது ஒரு சாம்பிள்…
இப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணங்களுடன் கல்விக்கூடங்கள், மருத்துவ மனைகள் கட்டப்பட்டு அவர்கள் அவதார புருஷன்களாகவும்…. கொடைவள்ளலாகவும் இருந்து கொண்டு…
நாம் ஒரு அபாயகரமான முனையை நோக்கி ஆக்ஸிலேட்டரை ஓங்கி ஓங்கி அமுக்குமிறோம்…. பிரேக் இல்லா வண்டியில்..
இங்கு கவலையில்ல்லை..
”உழைத்து ஒழுங்கா வரி கட்டியவனின் வளத்தை, கால் செண்டரில் 20000 ரூபாய வாங்கிற நாயே” என படமெடுக்கிறார்கள்…
ஆனால், இந்த கொள்ளையை தட்டிக் கேட்டி திராணியில்லா சினி இயக்குனர்கள்…
பத்திரிக்கைகளும், தடியும் உடையக்கூடாது, பாம்பும் சாகவேண்டும் என்று எழுதுகின்றன…
சரி என்னவெல்லாம் செய்யலாம்..
அரசு கோட்டவிலும், அரசு செலவிலும் படிப்பவர்கள் அரசு சார் மருத்துவமனைகளில் 10 வருடம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என சட்டம் இயற்றலாம்…
அதில், கல்லூரி முடித்தவுடன் 5 வருடம், பின் ஐந்து வருடம் தாண்டி ஐந்து வருடம் என இருக்க வேண்டும்.
அதனால், முதல் ஐந்து வருடம் பணியாற்றி, தொடர்ந்து பணியாற்றினாலும் ஆற்ற விட்டாலும் 6முதல்10வது வரும் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றிக் கொள் என்றாகி விட்டு பின் 11வது வருடம் முதல் ஐந்து வருடம் பணி.
இதனால், வெளி சென்று பெரும் வித்தகம் பயன் கிடைக்கும்.
இதில் மேல்படிப்பு தொடர்ந்தால் அந்த 5 வருட கணக்கு , மேல் படிப்பு முடிந்தவுடன் தொடரும்.
எந்த காரணம் கொண்டும், மரணம், ஊனம் தவிர, பணம் கொடுத்து விட்டு இந்த கட்டாய முறையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கு பதில் அவர்களின் பிராக்டிஸ் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்..
அப்போலோ ஷேர் 700 ரூபாய் தாண்டி பறக்கிறது… வியாபாரம் மட்டுமே உக்தியாகிப் போனதால்..
மனிதர்கள் அதிகமாகிப் போன தேசத்தில், கல்வியும் , மருத்துவமும் சேவைப் பிரிவில் மட்டுமே வர வேண்டும்.
அது என்ன வியாதியஸ்தர்கள் அறைக்கு ஃபைவ் ஸ்டார் அக்காமடேஷன் பிரிவு…?
இதற்கெல்லாம் விடிவு ரோடோரத்தில் போராடுவது அல்ல… சளைக்காமல் ஆர் டி ஐ போடுவதே…
அரசின் மென்னியை பிடித்து உலுக்க வேண்டும்.
அதற்கு ஆர் டி ஐ யே வழி…
ஆர் டி ஐ – அஹிம்சை ஆர் டி எக்ஸ்…
- ஒரு கூட்டம் புறாக்கள்
- பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்
- ஆலமரத்துக்கிளிகள்
- சும்மா வந்தவர்கள்
- மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்
- வெளிநடப்பு
- இந்திய தேசத்தின் தலைகுனிவு
- சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்
- கண்ணீரில் எழுதுகிறேன்..
- சிறை
- நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
- ஓடியது யார்?
- ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்
- காதல் துளி
- மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -4
- பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்
- தாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !
- அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க
- குரானின் கருவும் உருவும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30
- எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
- கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
- நம்பிக்கை ஒளி! – 1
- நினைவுகளின் சுவட்டில் (101)
- மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை
- பத்தி எரியுது பவர் கட்டு
- அக்னிப்பிரவேசம் -3
- வெற்றியின் ரகசியம்!
- கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்
- என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்
- ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி
- “சொள்ள மாடா! மாத்தி யோசி!”
- பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி
- அனைவருக்குமான அசோகமித்திரன்!