தேமொழி
கரிகால் சோழன்
சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது.
“பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்”
மற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய “கலிங்கத்துப் பரணி”யில் காணப்படுகிறது.
“செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.”
என்று இராச பாரம்பரியம், இமயத்தில் புலிக்கொடி என்ற பகுதியில் செயங்கொண்டார் இவ்வாறு குறிப்பிடுவார்.
சேக்கிழார் பெருமான் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85 இல், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தியாக; கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் வளமையைக்கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பிப் பலரைக் குடியிருத்தினன் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது
தமிழ் மன்னர்களில் கரிகாலனும், செங்குட்டுவனும் இமயம் வரை சென்றதாக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படுகிறார்கள். இவர்கள் காலம் கடைச்சங்க காலமாக (கி.மு. 250 – கி.பி. 250 வரை) கருதப்படுகிறது.
தமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவர் தமது நூலில் அவர்களது பயணத்திற்கு சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்று முடிவு செய்து,
1. அசோகனுக்கு பிற்பட்ட மௌரியர் காலம் (கி.மு. 232 – கி.மு. 184)
2. புஷ்யமித்திர சுங்காவுக்குப் பிற்பட்ட காலம் (கி.மு. 148 – கி. மு. 27)
3. ஆந்திரர் ஆட்சி குன்றிய காலம் (கி.பி. 163 – 300)
என்ற காலங்களைக் குறிப்பிட்டார்.
இத்தகவல் ராசமாணிக்கனார் அவர்களது ‘பல்லவர் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. இதில் செங்குட்டுவன் இமயம் சென்ற காலம் கி.பி. 166 – 193 இக்கு இடைப்பட்ட காலம் என ஆராய்ச்சியின் மூலம் முடிவுக்கு வருகிறார் ராசமாணிக்கனார். இராசமாணிக்கனாரின் நூலை தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பெறலாம் (http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/PALLAVARVARALARU.pdf).
அது போலவே, கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.
மேலும், கரிகாலன் படைஎடுத்த காலமாக கருதப்படும் காலத்தில், கண்வ மரபினர் மகத நாட்டை ஆண்டவர்கள், அவர்கள் வலிமையற்ற மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்று V.A. Smith’s “Early History of India” pp.215, 216 என்ற நூலில் காணப்படும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.
அத்துடன், கலைமகள் (1932) தொகுதி 1. பக்கங்கள் 62-63 இல் வெளியான ராவ்சாகிப் மு. ராசுவையங்கார் என்பவர் கட்டுரையில், “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத் தொடருக்கு சோல மலைத்தொடர் (Chola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங்கணவாய்க்கு சோல கணவாய் (Chola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ என்பதும் சிக்கிம், திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை” என்று குறிப்பிட்டதை புதிய சான்றாக கருதலாம் எனவும் ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு காணப்படுவது பக்கம் 9, ‘பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்’ என்ற அத்தியாயத்தில்.
சோல மலைத்தொடர்:
இத்தகவலைப் படித்தபின்பு இணையத்தில் கூகிள் வரைபடத்தில் Chola Range என்ற இடத்தைப் பார்க்கும் ஆவலில் தேடினேன். அப்பொழுது Chola Range பற்றி மேலும் பல தகவல்கள் விக்கிபீடியாவிலும் கிடைத்தன.
The Chola range is situated on the Sikkim and Bhutan border. The highest peak is Rishila. The town of Kalimpong is situated in this region. Neora Valley National Park is located here.
(Ref: http://en.wikipedia.org/wiki/Darjeeling_Himalayan_hill_region)
இந்த மலைத்தொடர், கிழக்கு இமயமலைச் சாரலில், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்க்டோக் (Gangtok, the capital of the Indian state of Sikkim) நகருக்கு கிழக்கே அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் சிக்கிம்-திபெத்தின்(சீனா) எல்லையாகவும், சிக்கிம்-பூடான் நாட்டின் எல்லையாகவும் அமையப்பெற்றுள்ளது. இந்திய வரைபடத்தையும் , இத்தகவல்கள் குறிக்கப்பட்ட கூகிள் வரைபடத்தை கீழே காண்க.
‘சோல மலைத்தொடர் ‘, ‘சோல ஏரி’, ‘சோல கணவாய்’ மற்றும் ‘சோல சிகரம்’ ஆகியைவையும் சிக்கிம் பகுதியில் உள்ளது. சோல கணவாய் (Chola Pass) கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் உள்ளன. சோல கணவாய் சிக்கிமிலிருந்து திபெத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சமீபகாலமாக மலை ஏறுவதில் விருப்பமுடையோரிடம் புகழ் பெற்ற இடமாகவும் அது மாறி வருகிறது. சோல கணவாய் (Chola Pass) பற்றி ‘யுடியூபில்’ (YouTube) பல காணொளிகள் காணக் கிடைக்கின்றன.
Chola Range மற்றும் Chola Pass ஒளிப்படங்களைப் பார்க்க ஃபிலிக்கர் தளத்தில் பலர் வெளியிட்டுள்ள படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று பார்க்கலாம்.
Chola Range – Photos Link
http://www.flickr.com//search/show/?q=chola+range
Chola Pass – Photos Link
http://www.flickr.com//search/show/?q=chola+pass
சோலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன?
‘சோல’ என்ற பெயர் நம் தமிழக கரிகால் பெருவளத்தான் இமயம் சென்றதால் வந்தது என்று சொல்ல விரும்புவதில் நமக்கு அதிக ஆர்வம் இருக்கக் கூடும். ஆனால் உண்மை என்ன என்பதையும் ஆராய வேண்டும். ‘சோல’ என்ற பதத்தின் பொருள் என்ன? அது எதைக் குறிக்கக் கூடும்? என்று ஆராய்ந்ததில் அதைக்குறித்து பல கருத்துக்கள் உள்ளது என்பதும் தெரிய வருகிறது.
‘சோல’ என்ற சொல் திபெத்தியர்களால் ‘ஜோல’ என உச்சரிக்கப் பெறும் என்றும், அதற்கு திபெத்திய மொழியில் ‘பனிமலை’ என்ற பொருள் என்றும் கருதப்படுகிறது. மற்றுமொரு கருத்து ‘சோல’ என்பதை சீனர்கள் தங்கள் உச்சரிப்பின் அடிப்படையில் ஒலிக்கேற்ற எழுத்துக்களால் அவர்கள் மொழியில் குறித்ததாகவும், ஆனால் அதே எழுத்துக்கள் உள்ள வார்த்தை அவர்கள் மொழியில் பறவையைக் குறித்தபொழுது நாளடைவில் அந்தச்சொல் ‘பறவை மலை’ எனப் பொருள்படும்படி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
‘ல’ என்ற ஒலியில் முடியும் பல பெயர்கள் அம்மலைப்பகுதியில் உள்ளது. உதாரணமாக, சிக்கிமின் கிழக்கு எல்லையில் உள்ளது சோல மலைத்தொடர்; அது போலவே சிக்கிமின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள மலைத்தொடருக்கு ‘சிங்கலில’ (Singalila) என்று பெயர். அப்பகுதியில் உள்ள முக்கியமான கணவாய்களுக்கு ‘நதுப் ல’ மற்றும் ‘ஜலேப் ல’ (Nathu La and Jelep La) என்ற பெயர்களும் உள்ளன. எனவே ‘ல’ என்ற பதம் ‘மலை’க்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாத இருக்கலாம். அவ்விடத்திற்கு அருகில் உள்ள திபெத், நேப்பால், பூடான், வங்க தேசத்து மொழிகளிலோ; அல்லது சிக்கிம் பகுதிகளில் வழங்கும் பற்பல மொழிகளில் (languages spoken in Sikkim: Nepali, Bhutia, Lepcha, Limbu, Newari, Kulung, Gurung, Mangar, Sherpa, Tamang and Sunwar) ஏதோ ஒன்றில் மலைப் பகுதிக்கு தொடர்பு படுத்தும் வகையில் குறிப்பிடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.
சர். ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தன்னுடைய புவியியல் ஆராய்சிக் கட்டுரையில் குறிப்பிடுவதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். அவர் ‘சோல’ என்பதில் உச்சரிப்புக் கோளாறு இருக்கக் கூடும் என்று கருதுகிறார். மொழி தெரியாத அந்நியர்கள் தவறாக உச்சரித்ததால் அச்சொல் சிதைந்திருக்கும் என்பது அவர் கருத்து. அத்துடன் ‘ல’ என்பது திபெத்திய மொழியில் கணவாயைக் குறிக்கும் சொல், ‘சோ’ என்பது நீர்நிலையை அல்லது ஏரியைக் குறிப்பது என்றும் கூறிகிறார். இவரது விவாதத்திற்கு அப்பகுதி மக்களிடமோ அல்லது மற்றவரிடமோ வேறு மாற்றுக் கருத்து உள்ளதா என்பது தெரியவில்லை.
“…Tso is a common termination in Tibetan names, meaning water, and is sometimes pronounced tcho; in fact, Europeans cannot tell whether natives are saying tso or tcho. It merely means a lake. Nimyetso is Nimye Lake. And I ought to take this opportunity of mentioning that the termination la means a pass, so that Chola, or Cho-la merely means lake-pass, and Yakla, or Yak-la, is nothing more than the pass
of the Yak, the famous Tibetan cow…. (p. 334)”
Reference: Proceedings of the Royal Geographical Society and monthly record of Geography, Volume 3, 1881. Chapter: Lake Region of Sikkim, on the Frontier of Tibet, by Sir Richard Temple(p. 334). By Royal Geographical Society (Great Britain).
This document accessible at: this link
எனவே, சோலமலையில் உள்ள ‘சோல’ என்பது சோழர்களைக் குறிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாத் தோன்றுகிறது. கரிகால் வளவன் இமயம் சென்றதாகக் கருதப் படும் காலத்திலிருந்து ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்பும் சோழர் பெயர் அங்கு நிலைத்திருப்பதாக சொல்ல விரும்பினால் அதனை தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நம்மால் நிரூபிக்க முடியும்.
அப்பகுதியில் ‘டைகர் ஹில்’ (Tiger Hill) என்ற மலைச்சிகரம் ஒன்று உள்ளது. அது சோழர் சின்னமாகிய புலியைக் குறிக்க வாய்ப்பிருப்பதாக கருதுவதைவிட, அருகில் உள்ள புலிகளுக்கு புகழ் பெற்ற வங்க மாநிலத்துடன் அதற்கு உள்ள தொடர்பு அதிகம் இருப்பதாக மாற்றுக் கருத்து எழுந்தால் மறுக்க முடியாது. கரிகால் வளவன் இமயம் சென்றதை நிரூபிக்க மேலும் உறுதியான ஆதாரம் நமக்கு வேண்டும்.
- ஒரு கூட்டம் புறாக்கள்
- பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்
- ஆலமரத்துக்கிளிகள்
- சும்மா வந்தவர்கள்
- மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்
- வெளிநடப்பு
- இந்திய தேசத்தின் தலைகுனிவு
- சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்
- கண்ணீரில் எழுதுகிறேன்..
- சிறை
- நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
- ஓடியது யார்?
- ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்
- காதல் துளி
- மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -4
- பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்
- தாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !
- அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க
- குரானின் கருவும் உருவும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30
- எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
- கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
- நம்பிக்கை ஒளி! – 1
- நினைவுகளின் சுவட்டில் (101)
- மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை
- பத்தி எரியுது பவர் கட்டு
- அக்னிப்பிரவேசம் -3
- வெற்றியின் ரகசியம்!
- கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்
- என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்
- ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி
- “சொள்ள மாடா! மாத்தி யோசி!”
- பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி
- அனைவருக்குமான அசோகமித்திரன்!