தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்

This entry is part 15 of 23 in the series 14 அக்டோபர் 2012



மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மனத்தில் வைத்துக் கொள் இதனை  !
உனது புன்சிரிப் பூடேயும்
உன் களி ஆட்டம்  வழியேயும்
கானம் பாடினேன் நான்
காய்ந்த இலை உதிர் காலத்தில் !

தீய்ந்த புல்வெளிக் களத்தி டையே
மொட்டை மரக்காட் டிடையே நீ
தன்னை மறந்தாய் என்னிசையில் !
என் பாட்டைப் புறக்கணித் தாலும்
அல்லது நீ
இகழ்ந்து பேசினும்
கானம் பாடினேன் நான்
காய்ந்த இலை உதிர் காலத்தில் !

பகற் பொழுதுப் பயணியே !
மனதில் நினைத்துக் கொள் நான்
மாலை விளக் கேந்திக் கொண்டு
இரவில் நடப்பதை !
முறிந்த மிதப்புக் கட்டை மேல் நான்
கடற் பயணம் செய்கையில்
அக்கரையி லிருந்து என் பெயர்
அழைக்கப் படும் போது
கானம் பாடினேன் நான்
காய்ந்த இலை உதிர் காலத்தில் !

+++++++++++++++++++++++++
பாட்டு : 18  தாகூர்  60 வயதினராய் இருந்த போது  சாந்தி நிகேதனத்தில்  1921 நவம்பரில் எழுதியது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  October 8 , 2012

Series Navigationகிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : மூலக்கூறு முகிலில் புவிக் கடல்கள் போல் 2000 மடங்கு நீர் ஆவி கண்டுபிடிப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *