வாயு

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 23 in the series 14 அக்டோபர் 2012

அரு. நலவேந்தன் – மலேசியா

          “புகைப்பிடிப்பதனால் பல்வேறு நோய்களால் இன்றைய இளைய சமுதாயத்தினர் சிக்கித்தவிக்கின்றார்கள்…….! .உதாரணத்திற்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் மற்றும் மிகக் கொடுமையானதாகக் கருதப்படும் மூளைப்புற்று நோயும் இதில் அடங்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் விடும் புகையை மற்றவர்கள் சுவாசித்தாலும் அவர்களையும் இந்த நோய்கள் தாக்கவல்லது!”  என்று   ஒலிப்பெருக்கியின் வழி மலேசியச் சுகாதார மையத்திலிருந்து வந்த அதிகாரி இஞ்சே மாருல் ஹாசன் உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.
          ஆசிரியர்களும்  மாணவர்களும்  மிகவும் உண்ணிப்பாக அவரின்  சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். பொறுப்பாசிரியர் மாணவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மாணவர்களுக்கு ஒரு நாள் காவல் தெய்வங்களாகவும், மாணவர்கள் ஆதாமாகவும் சாத்தான்களாகவும் அரிதாரம் பூசியிருந்தனர்!
          மண்டபத்தின் இறுதி வரிசையில் அமர்ந்திருந்த   படிவ ஐந்து (சாத்தான்) மாணவர்களிடையே……. கைபேசி சினுங்கியது! காற்சட்டையினுள் பிரத்தியேகமாகத் தைக்கப்பட்ட  இடத்திலிருந்து….
         “அடடா…..! இந்த நேரத்திலே யாரு நம்மை கூப்பிடுறது…..?”   என்ற  மனக்கேள்விக்கு விடை காண இடக்கையைச் சுயமாகவே நோக்குகிறது கார்த்திக் (கருணாகரன்)  கண்கள். அவன் மனதில் ஆயிரம் கேள்விகளுடன் மன அலைகள் மெதுவாக கொந்தளித்துக்கொண்டு  இருந்தன கருணாகரன் இல்லை……இல்லை கார்த்திக்.
         கருணாகரன்  இது அவனது  பெற்றோர்கள்  வைத்த பெயர்.கார்த்திக்  அவனாகவே  உயிர்பித்துக் கொண்ட  பெயர். இவன் மட்டுமல்ல அந்த சாத்தான் (மாணவர்கள்) கூட்டமே ஒவ்வொரு முகமூடியை அணிந்து கொண்டுதான் வாழ்கிறார்கள் இந்த நவீன சாத்தான்கள்.
“புரோ…..யாரு புரோ இவன்,காலைலே வந்து டாச்சர் பண்றானுங்க…….”என்றான் தினேஸ் மிகவும் எரிச்சலுடன்.
“டேய்,அப்படில்லான் சொல்லாதீங்க டா….! மனுசன் கட்டையா இருந்தாலும் செமே மேட்டரைச் பத்தித்தான் பேசுறாக…..நல்ல கேட்டுக்குங்க டா…..!”என்றான் அவன்  பின் அமர்ந்திருந்த  நண்பர்களிடம் நமட்டுச் சிரிப்புடன் துவான் என்கிற சசி.
“தோட…..தலைவரே சொல்லிட்டாரு…….உடனே அந்த இடத்திலேருந்து எழுவது போல் பாவனை செய்தவாறு….. கூட்டத்தில் உள்ள நண்பர்களிடம்(சாத்தான்கள்)…..… டேய்……துவான்னே சொல்லிட்டார்……..இனிமே யாராவது இந்த ஸ்கூல்ல சிகரேட் பிடிச்சா மண்டைய உடச்சுருவேன்…..என்றான் அந்தக் கூட்டத்தின் மானசீக நகைச்சுவை மன்னன் விக்கி.
நண்பர்கள்  ஒரு சிரிப்பு(ஊலை) விட்டுப் போனது……
“இவனுங்களாளளே எப்படித்தான் சிரிக்க முடியுதோ…..? எவலோ திட்டினாலும் சிரிப்பு கூத்து,நையாண்டி,கிண்டல் தான்  செ…எரிச்சலா இருக்கு இவனுங்க முகத்த பாக்கிறதுக்கு ”என தெய்வங்கள்(ஆசிரியர்) கூட்டத்தில் சலசலத்துக் கொண்டு இருந்தது ஒரு தமிழ் தெய்வம்(ஆசிரியர்).
ஆனால்,பின் வரிசையில் இருந்த கார்த்திக் மட்டும் அந்த நகைச்சுவையைக் காதில் கேட்டாலும் முகத்தில் ஒரு சலனமும் இன்றி எதையோ தீவிரமாக சிந்திதவாறு இருந்தான்.கார்த்திக்கின் மிகவும் நெருங்கிய நண்பனானச்  சுனிலுக்கு மட்டும் தான் புரியும் அவனது ஒவ்வொரு அசைவும் என்ன அர்த்தத்தை விளக்குகின்றன என்று,இதனால் என்னவோ அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் மிகவும் குறைவு காரணம் அவனுடையே “மூடை” புரியாமல் கூராங் சக்காப்னா(வாய்க்கொடுத்தல்) அவ்வளவுதான்……. தேவை இல்லாமல் மூக்கின்வழியால் குருதியை சிந்தச் செய்து விடுவான்…(நீங்கள் பயப்படாதீர்கள்).
“டேய்  மச்சான்…..! என்னாட ஒரு மாதிரியா இருக்கே….சரி யில்லையே …….”காலைலே  சரக்கு(ஏவாள்) ஏதாவுது மூட்டே அவூட் ஆக்கிடுச்சா…..? என்றான் சுனில் .
இப்போதுலெல்லாம் ஆதாமை நேசிக்கும் ஏவாள்கள் காண்பது அறிதாய்விட்டது.நவீன ஏவாள்கள் (கார்த்திக்)சாத்தான்களைத்தான் விரும்புகிறார்கள். புற வாழ்க்கையைக் கண்டே சாத்தான்களிடம் “எல்லாத்தையும்”பறிக்கொடுக்கினர் ஏவாள்கள்,பிறகு தவிக்கிறது யாரவது முட்டாள்  ஆதாம் சிக்கும்மென்று.
“இல்லடா…. போன் வைபிரேட் பண்ணிக்கிட்டு இருக்கு,காலையில இருந்து போனே அட்டென்பண்ணலே…….அதான் கடுப்பா இருக்குடா…..மச்சி எதாவுது வழி சொல்லேன் ……..செராமாவே பொந்தேங் அடிச்சுட்டு  ஜாலியா எங்காவுது போய்ட்டு லேபாக் பண்ண போறேன் ……. எப்படி நீயும் வரியா…………”என்றான் கார்த்திக்.
“எனக்கு  ஓகே……ஆனா இந்த சித்தி ஹாஜார் (கட்டொழுங்கு ஆசிரியர்) தொல்ல தாங்க முடியிலே மச்சி……..காலை ஏன் லேட்ட வந்தே ,முடி ஏன்  நீட்ட வளர்த்துருக்கெ,ஏன் சிலுவாரே “போ கட்” வெட்டிக்கேன்னு”ஒரே கேள்வியாகேட்டு கொல பண்றாடா…..இவளான் எப்படித்தான் புருசன் காரன் வச்சுகிட்டு வாழ்றானோ…..பாவம்  பய புள்ளே……..என்றான் சுனில் கோபமும் சிரிப்பும் கலந்த பாவமுடன் மனதில் உள்ளதை கொட்டினான்.
கட்டொழுங்கு ஆசிரியை மண்டபத்தில் நுழைந்து…… இறுதி வரிசைக்கு அருகில் வந்தார்.
செலமாட் பாகி புவான்”என முகமலற(கிண்டலுடன்)  கூறினான் சுனில்.
“ஒய்…..சுனில் ,பெராப்பா காலி டா சகாப்புன் தா மாவ் டெங்ஙார்,காமு டா உமுர் தூஜோபெலாஸ்.,தாபி, தாக் மாஹு உபாஹ் டிரி செண்டீரி…….சாய புன் தாக்தாவுலா அப்பா…! நக் பெரி நாசிஹாட்?…….ஒஹ் செமுவ கேங் கெங் சினி டாஹ் கும்போல் கே……தாக் மாவ் சது மலேசியாக……..?டெங்கர் அப டிஅ சகப்……” ஜாகான் புவாட் பீசிங்……ஓய்…..விகி ஜக முலுட் கௌ…….”என்றார் மிகவும் ஆத்திரமாகவும் வெறுப்புடனும் புவான்.சிதி ஹாஜார்.இவர் எங்களுக்கு மலாய் மொழி ஆசிரியர்.வகுப்புக்கும் இவருக்கும் என்றைக்குமே சரி வராது.வகுப்புக்குப் போதிக்க வருகிறாரோ இல்லையோ வசைபாட மட்டும் இவரது காலடி தடம் வகுப்பை நாடும்.
“மச்சி இவளுக்கு என்னமோ தெரியலே ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்கா……..என்னிக்கி இவ மூஞ்சே கிழிக்கப் போறேன் தெரியலே…….”என்றான் கார்த்திக்கிடம் சுனில்.
“சரி விடுங்க புரோ……அவளுக்கு யார் இருக்கா பேசறதுக்கும்  திட்டுறதுக்கும்…….இதுக்கெல்லாம்ம் போய்……..பீல் பண்ணலாமா…….முன்னுக்கு   ஒருத்தேன் ஒரு மணிநேரமா சொற்பொலிவு ஆற்றிக்கிடு இருக்கான் அத கேளுங்க புரோ.”என அவர்களைத்  திசைத் திருப்பினான் தினேஸ்.
“இந்த நஞ்சுப் வாயுவை  வெளியாக்குபவர் எந்த வகையாலும் நாட்டிற்கும்  வீட்டிற்கும் நன்மை வரப்போவதில்லை…..இவர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்…..”என்றவர் சொல்லில் ஒருவகை வெறி எட்டிப்பார்த்தது.
“ஏன் மச்சா சிகரெட்னாலே இவ்லோ பிரச்சனை வருமா……?” என வினவினான்  சுனிலிடம் கார்த்திக்.
“இதலாம் Form 3 ல படிச்சது மச்சி”என பதிலளித்தான் சுனில்.
“ஓக்கே  ஓக்கே..”என சுதாரித்துக்கொண்டான், “டேய் மடையா கெலாஸ்கு  பக்கமே போனாதுலே….அப்புறம் எங்கேடா  மனசாட்சி  காரி உமிழ்ந்தது. அவனது முகத்தில்,பிரமை என எண்ணினாலும் முகத்தை தன் கைகளால் துடைத்துக்கொண்டான்.
“இதுக்கப்புறம் முடியாதுடா…..நான் பொந்தேங்  அடிச்சிட்டு லெபாக் பண்ண போறேன்………யாராவது வரிங்களாடா…..”(சும்மா கேக்கிறது தான்…..அங்க யாரும் வரமாட்டானுங்க நம்ம சுனில்ல  தவிற)என வாஞ்சையுடன் கேட்டான் கார்த்திக்.
“வாட கிளம்புவோம்”……..என சுனில் கூற,  ஒரு சில நிமிடங்களில் ஒருவர்  பின் ஒருவாராக இடத்தை  மற்றவர்களுக்கு  வாடகை விட்டுச் சென்றனர்.
கார்த்திக்கும் சுனிலும்  பள்ளியின் இறுதி கட்டிடத்தை  நோக்கி  விரைகிறார்கள்.
“செ…,பெசாமே அங்கே இருந்திருக்களாம்……இந்தெ நாயோட நம்மலாம் வந்துட்டோம்,இன்னும் கொஞ்ச நாள்ள எஸ்.பி.எம் பரிச்செ…….கண்டிப்பா கோல்லுதான்(தோல்வி), வீட்ல என்னாதுனா ஓயாமே திட்டிக்கிட்டு  இருக்கான் அவன்(அப்பா)…..செ வாழ்க்கையே கடுப்பா இருக்கு……பரவாயில்ல இதல்லாம் போக்குறதுக்குண்ணு ‘ கேள் பெரென்’ வச்சிக்கிட்டா  மைன்ட் ரிலக்ஸா இருக்கலாம்னூ பாத்தா அவ ……..அத விட டாச்சரா இருக்கா…..அவக்கூட போனியா இவக்கூட போனியா,இவன்கூட சேராதே அவன்கூடா போகாதேனு அட்வாய்ஸ் மேல அட்வாய்ஸ் குடுத்து கொல்லறா……ஆனா இவன் மட்டும் எது வந்தாலும் கூலா இருக்கான்,ஒன்னுக்கு மூனுவச்சி சுத்திகிட்டு  இருக்கான்…… எப்படி..?….”என  சுனிலின் மனசாட்சி குமுறிக்கொண்டு  இருந்தன கார்த்திகின் தான்தோன்றிக் குணத்தைக் கண்டு.
“செ….. பெரிய தப்பு பண்றோமோ,புகைப்பிடிப்பதினால்  மற்றவர்களை  நாம  என்ன கொலயா  செய்கிறோம,சிகரட் அடிக்கிறதெ ஒரு ஸ்டைல் தான்நினைச்சேன்……ஆனா இப்படி நடக்கும்னு நிறைய முறை கேள்விப்பட்டு இருக்கேன்…….பட் கண்டுக்கிறதி ல்ல…..அப்ப சிகரேட் அடிச்சாரு,அண்னே  சிகரேட் அடிச்சான் அதனாலே கத்துகிட்டேன்…..! செ அவகூட(ஏவாள்) சொன்னா காதுலயே கேட்டுக்கலே….செ பயம இருக்கெ…..பேசாம விட்டலாமா…….
“புகைப்பிடிப்பவர்கள் மட்டும் இந்நோய்களைக் கொண்டவர்கள் அல்ல,இப்புகையைச் சுவாசிப்பவர்களும் இந்த நோய்களைக் கொண்டுள்ளார்கள்”மீண்டும் மீண்டும் மணியோசையாய் அவனுக்குல்  ஒலித்துக்கொண்டு இருந்தது.
சில வினாடிகளில் பிறகு  “நோ ……நோ….இப்ப விட்டேன் அவள்ளவு தான்”……எனக்கு  லீகாட்தான்  முக்கியம்…..இவனுங்க சொல்றதுக்காக விட்டா…….அவளவுதான் சின்ன  பயலுகக்  கூடப்  பொம்பளனுச் சொல்லிப்புடுவான்.(சாத்தான் வேதம் ஓதுமா)
இருவரும்  இறுதிக் கட்டிடத்தினுள்ள  அறிவியல்  அறை பக்கத்தில் இருக்கின்றக் கழிவறைக்குத்  தங்களின் வருகையைத் தெரிவித்திக்  கொள்வது போல்,முகப்புக் கதவை முட்டிக்காலை மடக்கி முத்தம் கொடுத்தான்……பாவம் அழகாய் திறக்க வேண்டியது அலறிக்கொண்டு திறந்தது  வாயிற் கதவு.
(மாணவர்கள்)சாத்தான்கள்  கைவண்ணம்  படிந்த சுவரும் பல நாட்களாகத்  தண்ணீரைக் கண்டிராதத் தரையும் தேங்கி நிக்கும் கழிவுகளின்  வாடையும்  சட்டென்று  மூக்குக்கு விரலைப்  போட வேண்டும் இல்லை என்றால் அவ்வளவுதான்…..
“டேய் கொஞ்ச நேரம்  நீ இங்கயே வெய்ட் பண்ணு”……….என  கோரிக்கையைச்    சுனிலுக்கு விடுத்தவன்.  கழிவறையினுள்  உள்ள  இறுதிக் கூடத்திற்க்கு அவனது கால்கள் தேடிச் சென்றன.
“கே..கே…… அது வரைக்கும் நான்  ரெண்டு இளு இளுத்துக்கிறேன்”என ஆசையாய்க் கூறினான் சுனில் கார்த்திக்கிடம்,ஆனால்,அவன் அதை  காதில் போட்டு கொண்டவனாகத்  தெரியவில்லை.
கார்த்திக் தனது  கைபேசியை   உயிர்ப்பித்துக்கொண்டதை அதன் ஒலிக்காட்டித்தந்தது.
கழிவரையின் வாயில்  கதவு மீண்டும்  சுவரோடு ஐக்கியமாகுகிறது.
சுனில் சற்று குனிந்து இடது காலுறையினுள் கையை விட்டு  ஒரு புதிய சிகரட் பெட்டியை எடுத்தான்.
“செ…..மைன்ஸ் ரிலெக்ஸ் பண்ணலாம்னு  சிகரட் வாங்கினா இது மேல கண்ட படத்த போட்டு பயத்த உண்டாகிறானுங்க,அவனுக்குங்களுக்கு தான் நஷ்டம்…….சரி வந்த வேலயே பார்போம்……என சுனில்.
சிகரேட்டில் மேல் இருந்த  படத்தைச் சுண்டு விரல் நகத்தாலே கீரி கிழித்து வீசினான். வலக்கரத்தால்  பெட்டியைப் பிடித்து இடக்கரத்தால் சில முறை தட்டி பிரித்து  மூக்கின் அருகில் கொண்டு சென்று ஒரு முறை மூக்கால் வாசனையை  இழுத்தான்.அதில் ஒரு வெண்சுருட்டு எடுத்து தனது குவித்த உதடுகளில் செருக்கி  லைட்டரால் பற்ற வைத்து புகையை உள் இளுத்தான்……..
“வாவ்……என்ன ஒரு சுகம்…..இப்பத்தான் சூப்பரா இருக்கு….”ஒரு புதிய சுறுசுறுப்பு  தனது குருதீயோடு  பின்னல் போட்டது சுனிலுக்கு.
கழிவரையின் கதவுக்கு திடீர் உயீர்பெற்று  திறந்துக்கொண்டது.
சுனிலுக் ஒரு வித பயம் சாலை மஞ்சள் சமிக்ஞை விளக்கு போல் வந்து விட்டு போனது உள்ளே  வந்தது  தனது நண்பர் என்று அறிந்ததும்.
“டேய் ….அட செ… நீ யா….. சரி …உள்ளே வாடா ….” என நண்பன் துவான்(சசி) யைப் பார்த்துக்கூறினான் சுனில்.
“கார்த்திக் எங்கடா……?”என கேட்டான் துவான்(சசி).
“உள்ள சரக்குக்கு(ஏவாள்) கிட்ட பேசிக்கிட்டு இருக்கான்”.வந்தவன்  சிகரட்டை  சுனிலின் கைகளிருந்து  பங்கு போட்டுக்கொண்டவன்…..தனது  சட்டைபையிலிருந்த  ‘கோடாலி சாப் தைலத்தை’  சிகரெட் மேல் பன்னீரை தெளிப்பது போல் தெளித்து   ஒரு சில ஊதலில் அவன் சொர்கத்தை கண்டவன் போல் மெய்மறந்து நின்றதைக் கண்ட சுனிலும் ஆவாலாய்  சிகரட்டைப் பகிர்ந்து கொண்டான்.
இருவரும் கழிவறையின்  வாடை  மூக்கை அடைத்தாலும்  சிகரட்டின் புகையால் மாய நித்திரையில் கலந்து  பறந்து கொண்டு இருந்தனர்.
“ஏன் துவான்….புதுசு புதுசா எங்க கண்டு பிடிக்கிறே……”என்றான் சுனில்
“எல்லாம் அப்படித்தான்…..புரோ…” என்றான் துவான்.
“ஆனா……போன  தடவை காஜா கம் காச்சி அடிச்சதே ……மறக்கவே முடியாது….”என சுனில் மயக்கத்தோடு கூறினான்.
“மறந்தே போய்டேன் …..மூர்த்தி கால் போட்டான் …..இன்னைக்கு அவன்  இடத்துல சண்டை  இருக்கா  வரிங்களாடா……என கேட்டான் துவான்.
சொல்லி முடிப்பதற்குள் சுனில் வழிமறித்தான்.
“அதெல்லாம் ஓகே…யாரு கூட….?”
“ஜாபார்  கூட்டத்தோடுதான்”……என துவான் சொல்ல….
“அந்தப் பேய்களுக்குத் திமீர் ரொம்ப அதிகமாப் போச்சு! இன்றைக்கு இருக்கு…… ஒரு காட்டு காட்டிட வேண்டியதுதான்” எந்கிறான் சுனில்.
துவான் முகத்தில் ஒரே சிரிப்பு…!.
“அண்ணே…….. இப்ப நான்……..என்ன பண்ணனும்…….?”கார்த்திக்கு மெதுவாகக் கேட்டான்.
“நீ ஒன்னும் செய்ய வேண்டாம். பெரிய மாமாகிட்ட   எல்லா விவரத்தையும்  சொல்லிட்டேன். தம்பி……நீ ஒன்னும் கவலப் படாதடா. அது சாதாரணக் காய்ச்சல்தான்.
நீ வந்துட்டேன்னா……எல்லாம் முடிஞ்சிடும்! ” என  பரதன் சொல்கிறார்.
“என்ன முடிஞ்சிறோம்……?” சற்று நிலை தடுமாறிக் கேட்டான் கார்த்திக்.
“இல்ல…… நீ பாத்துட்டுப் போய்யிடலானு சொன்னேன்…” அததான்  தவறுதலா.  சொல்லிட்டேன்! ” என்றான் பரதன்.
“சரி……அண்ணே…..வந்துடுறேன். நீங்க ஒன்னும் கவலப் படாதீங்க” என  மனதில் ஒரு துயரம் வந்து தொற்றிக்கொண்டதைக்  கார்த்திக்கின்  குரல் காட்டியது. கைபேசியை  வைக்கிறான்..
கடவுளே……! அம்மாவுக்கு  ஒன்னும்  ஆயிடக் கூடாது….! .பிளீஸ்…… அவங்கள  என் கிட்ட இருந்து  பிரிச்சிடாதே என  மனதுக்குள்  கடவுளிடம் இறைஞ்சினான்.
ஏற்கனவே  அம்மாவுக்கு  நுரையீரல்  புற்றுநோய்யுனு சொல்லி பல லட்சம் செலவு பண்ணி  கீமோதெராப்பி  செஞ்சாங்க. ஆனா, இதுக்குப்  பிறகு மறுபடியும்காய்ச்சல் வந்தால் நிச்சயம் அது புற்றுநோய்தானு டாக்டர் சொன்னாரு!”
      “அய்யோ….!அப்பா சிகரட்  பிடிச்ச நாளே அம்மாவுக்கு  வந்துச்சு……! பிறகு என்னே சுற்றி இருக்கிறவங்களுக்கும்  வராதுனு என்ன நிச்சயம்……….? என யோசித்தவன் நண்பர்களைக் கண்டதும்  எதுவுமே  நடை பெறாதது போல் முகத்தை  மாற்றிக்கொண்டான்.
“டேய்….மச்சான்.  லேட்டா  வந்தாலும் லேட்டஸ்டா  வந்துருக்கு ……புது டேஸ்ட்…..! .சூப்பரா இருக்குடா…..! ஒரு முறை  ஊதுறியா….” என்று  கூறினான் கார்த்திக்கிடம் சுனில் வாஞ்சையுடன்.
முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு! இப்பொழுது அவன் ஆதாமாக அரிதாரம் பூசம்  நேரம் வந்தது!
அவனது கால்கள் மீண்டும் மண்டபத்தை நோக்கி விரைந்தன!
                              முற்றும்
Series Navigationபத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோமகேளா ஒலிகள் கேட்கிறவள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    அரு.நலவேந்தன் says:

    வணக்கம்,இச்சிறுகதை எனது முதல் கதையாகும்.இக்கதையைப் படித்து தாங்கள் விமர்சிக்கலாம்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *