ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்

This entry is part 12 of 23 in the series 14 அக்டோபர் 2012

 

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்ட தாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ள வில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -41)

நளினக் குறும்புகள்

 

அந்த நளினக் குறும்புகள் உன் உரிமையால் செய்தவை

உந்தன் இதயத்தில் சில சமயம் நான் இல்லாத போது.

பொருந்திடும் அவை உனது பொலிவுக்கும், வயதுக்கும்,

காரணம் உடற் கவர்ச்சி பின் செலும் உன் மனப் போக்கு

கனிவுடை யோன் நீ  ஆகவே உனை என் வசப்படுத் துவேன்,

வனப்புடை யோன் நீ ஆகவே  உன்னை மயக்குவேன் நான்

மாது ஒருத்தி மயக்கும் போது மனிதன் அவளை மறுப்பதா ?

சலித்துப் புறக்கணிப் பதா தன்னை நீக்கிக் கொள்ளும் வரை

அந்தோ என்னிலை !  ஆயினும் பிடித்தாய் நீ என் இடத்தை

இகழ்வேன் உன் வனப்பை   தெருச் சுற்றும் இளங்குமரா  !

எடுத்து எவர் நடத்துவார்  இங்கவர் போராட்  டத்தில்

இருவழி இல்வாழ்வில் எங்குனை முறிக்க வைத்ததோ

அவன் வனப்பு அவளை மயக்கும் அவனுக் கடிமையாய்

உனக்குரிய உனது வனப்பு பொய்த்துப் போகும் எனக்கு.

 

+++++++++

SONNET 41

Those pretty wrongs that liberty commits,
When I am sometime absent from thy heart,
Thy beauty, and thy years full well befits,
For still temptation follows where thou art.
Gentle thou art, and therefore to be won,
Beauteous thou art, therefore to be assailed.
And when a woman woos, what woman’s son,
Will sourly leave her till he have prevailed?
Ay me, but yet thou mightst my seat forbear,
And chide thy beauty, and thy straying youth,
Who lead thee in their riot even there
Where thou art forced to break a twofold truth:
Hers by thy beauty tempting her to thee,
Thine by thy beauty being false to me.

 

++++++++++++++

Sonnet Summary : 41

In order to forgive the youth for his actions, the poet places himself in both the youth’s position and that of the mistress. In the sonnet’s first four lines, the poet mildly accuses the young man of committing small sins, but he then goes on to accept the youth’s actions given his age and beauty. The youth’s behavior, so the poet seems to say, is natural and expected. However, what is even more expected is that others attempt to gain the young man’s affections: “Beauteous thou art, therefore to be assailed.” This reasoning prompts the poet to blame those who tempt the youth rather than the youth himself.

Forgiveness of the young man is mixed with reprimand, for he breaks “a twofold truth” — the poet and the mistress’ affair — when he begins loving the woman. Although the poet admonishes the youth, his tone is reserved, in part because he suggests that the youth and the youth’s beauty are two separate things: “And chide thy beauty and thy straying youth, / Who lead thee in their riot even there / Where thou art forced to break a twofold truth.” The young man is not at fault for coming between the poet and the mistress; rather, his beauty and youth “forced” him to act as he did

 

++++++++++++++++++++++++

SONNET 41

(Paraphrased)

1. Those pretty wrongs that liberty commits,

pretty– although the word partly suggests frivolousness, because of its resemblance to pettyand because it is often applied to trivial and slight objects, its effect here is mainly to state that the crime commited is actually quite likeable, certainly forgiveable, and of no great consequence either. For so, at this stage, the speaker has tried to convince himself.
liberty = social or moral freedom to behave as one chooses. But it can also have the meaning of libertinage or sexual wantonness, as in

…..breathe his faults so quaintly
That they may seem the taints of liberty,
The flash and outbreak of a fiery mind,
Ham.II.1.31-3.

Lust and liberty
Creep in the minds and marrows of our youth,
That ‘gainst the stream of virtue they may strive,
And drown themselves in riot!
Tim.IV.1.25-8.

Note that lust, liberty and riot coincide in the ‘Timon’ extract, as they do in this sonnet, except that lust is not named, only implied. Timon is calling down execrations on his countrymen.

2. When I am sometime absent from thy heart,

sometime = sometimes. Implying that the faults are infrequent, the lapses of occasional forgetfulness.

3. Thy beauty, and thy years full well befits,

befits – the subject is wrongs in line 1. The verb ending in ‘s‘, when one would expect befit, is common in Elizabethan English. befits = suits, is appropriate to. ‘The pretty wrongs are fitting for one of your age and beauty’.

4. For still temptation follows where thou art.

still = always. temptation follows – usually temptation leads one into sin, but here the image is of temptation first seeking out the potential sinner in order to lead him into darkness.

5. Gentle thou art, and therefore to be won,

Gentle = kind, considerate; of noble birth, a gentleman.
thereforeto be won = available to be seduced; bound to be seduced

6. Beauteous thou art, therefore to be assailed;

assail’d = vigorously courted, seduced.

7. And when a woman woos, what woman’s son

When a woman takes the initiative, what man is so foolish as to resist?

8. Will sourly leave her till he have prevailed?

Editors are divided on the merits of retaining the he of Q or changing it to she, an emendation suggested by Malone, since it is the woman who does the wooing in this case. Leaving it as he suggests possibly that the woman allows the man to feel that he has made the conquest. In such circumstances the man might wish to think that he is the one who has prevailed.

9. Ay me! but yet thou mightst my seat forbear,

Ay me! – a homely exclamation indicating wonder tinged with sorrow. Compare Sonnet 148:
O me! What eyes hath love put in my head

As HV points out, this is an example of ‘truth breaking in’ (using a phrase coined by Frost in Birches). The sophisticated analysis and provision of fulsome excuses which has prevailed so far breaks down and the poet exclaims against the youth, since now he contemplates the real effect of ‘those pretty wrongs’ – the youth has leapt into his seat and is now riding his mistress. my seat forbear– abstain from using my favourite, reserved place. The meaning is however strongly sexual, (seat = pudendum), showing all the possessiveness of sexual jealousy. See Oth.II.1.289-90:
….I do suspect the lustful Moor
Hath leap’d into my seat.

10. And chide thy beauty and thy straying youth,

chide = restrain by chiding. beauty…youth– the youth’s years and beauty are cited in line 3 as being the justification and forgiving background for his lustful behaviour, which there is described with moderate euphemisms. Now it has become straying and riotous youth.

11. Who lead thee in their riot even there

Youth , lust and riotousness are often grouped together (perhaps justifiably). The links between them were proverbial, since the days of the prodigal son and earlier. See the passage from Timon of Athens above (line 1).
riot = Wanton, loose, or wasteful living; debauchery, dissipation, extravagance. (OED.1.a.).

12. Where thou art forced to break a twofold truth:

truth– probably closer to the word troth in the marriage service ‘I plight thee my troth‘, where the meaning is fidelity, allegiance, promise. troth is a variant form of truth. A link here also I suspect to the true love of the previous sonnet (line 3). See also 152, where the situation is seen from the perspective of the poet betrayed by the woman.
In loving thee thou know’st I am forsworn,
But thou art twice forsworn, to me love swearing,
In act thy bed-vow broke and new faith torn,
In vowing new hate after new love bearing.

13. Hers by thy beauty tempting her to thee,

His beauty forces her to break her promise (of faithful love to the speaker), and tempts her into his arms. See the note above.

14. Thine by thy beauty being false to me.

thine = your good faith, your promise of love to me. The two offences are that his beauty seduces the woman and his beauty (which in this line almost becomes the youth himself) betrays his friend and steals his friend’s lover. (Both offences are almost the same thing). Note that the woman herself is not accused.

 

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)

2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)

3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)

4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)

5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)

6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 9, 2012

 

Series Navigationதிருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .கவிதை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *