சுரேஷின் ‘வவ்வால் பசங்க’

This entry is part 3 of 29 in the series 18 நவம்பர் 2012

தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு வேளை கதையே தாவித் தாவி தலைகீழாகத் தொங்குவதால் வைத்திருப்பாய்ங்களோ?

காசிராமன் என்கிற வவ்வால் ( அறிமுகம் ராகுல் ) கேபிள் டிவி கனெக்ஷன் கொடுக்கும் பையன். குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள். இவன் மட்டும் படிக்காத மேதை. அப்பா அனந்தராமனின் ( நரேன் ) பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகும் கேரக்டர், வயசுப்பொண்ணு சௌம்யா ( உத்ரா உன்னி ) மேல் இண்ட்ரஸ்ட் ஆகிறான். நடுவில் திடீரென்று தாவி, சென்னை வருகிறான். ஏன்? அண்ணனுடன், பொறியியல் கல்லூரி நேர்முகத்தேர்வுக்குச் சென்ற, தங்கையைக் காணவில்லை. உதவாத பிள்ளை, உருப்படியாகச் சண்டை போட்டு, உடன்பிறப்பைக் காப்பாற்றும், அதிரடி கிளைமேக்ஸ¤டன் படம் முடிகிறது.

படத்தின் முன்பாதியில் இயல்பான நகைச்சுவை வசனங்கள்.

“ ஏ வவ்வால்.. சாரிடா தெரியாம வாய்ல வந்துடுச்சு”

“ இன்னொரு வாட்டி சொன்னே.. மூக்கில வந்துடும்”

0

“ ஒங்க அப்பா ஏன் திட்டிக்கிட்டே இருக்காரு?

“ சிங்கத்தைக் கொஞ்ச முடியாது இல்ல “

0

(திருஷ்டி பூசணிக்காயை உடைத்து விட்டு ) “ அம்பது காசு போட்டு அம்பானி ரேஞ்சுக்கு பேச்சு “

0

“ எங்கப்பா வேலைக்கும் போறதில்லே.. ஒண்ணுக்கும் போறதில்ல “

“ ஒண்ணுக்காவது போகச் சொல்லுடா, இல்லேன்னா கிட்னி சட்னி ஆயிடும்”

0

இயக்குனர் சுரேஷ், வெற்றிக்கு எது உத்திரவாதம் என்று தெரியாமல் சகல அம்சங்களையும் வைத்துப் படம் பண்ணியதில், எதுவுமே மனதில் நிற்கவில்லை.

டான்ஸ் மாஸ்டர் லலிதா மணியின் மகன், கதை நாயகன் ராகுல் என்பதால், நடனத்தில் பட்டையைக் கிளப்புகிறார். அசப்பில் சின்ன வயசு டி ஆர்(சிம்பு இல்லை ) போல் இருக்கிறார். அடுத்த படத் தேர்வில் கவனம் தேவை, நிலைக்க.

உத்ரா உன்னி நல்ல வரவு. வாய்ப்புதான் இல்லை. கபிலனின் வரிகளும், புஷ்பராஜின் இசையும் கொஞ்சம் கேட்கும்படி இருப்பது ப்ளஸ்.

வவ்வால் பசங்க, அறுந்த காத்தாடி போல அல்லாடுகிறது.

0

கொசுறு:

பூந்தமல்லி விக்னேஷ்வராவை குளிரூட்டி இருக்கிறார்கள். வரவேற்கத்தக்க மாற்றம். டிக்கெட் 120 ம், வாசலில் மல்டிப்ளெக்ஸ் போல் பாக்கெட் செக்கிங்கும், கண்டிக்க தக்க கலாச்சாரம்.

0

Series Navigationக. நா. சுவும் நானும்(2)எங்கள் ஊர்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *