வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்

author
11
1 minute, 5 seconds Read
This entry is part 27 of 29 in the series 18 நவம்பர் 2012

(ஓர் அறிவியல் மாணவன்)

 

வைரமுத்துவின் அண்மைய பெஸ்ட் செல்லரான “மூன்றாம் உலகப் போர்” நாவலில் எமிலி டேவிட் என்னும் அழகான அமெரிக்கப் பெண் வருகிறாள். அவள் நியூ சயண்டிஸ்ட் இதழில் எழுதிய ஒரு கட்டுரை இந்த நாவலின் கருவாக அமைந்துள்ளது. புவி வெப்பமடைதலினால் ஏற்படும் வேளாண்மையின் வீழ்ச்சி பற்றி அது பேசுகிறது. கட்டுரையின் தலைப்பு தமிழ் மொழி பெயர்ப்பில் “போருக்கு எதிரான உலகப் போர்” என்று இருக்கிறது. ஆங்கிலத்தில் என்னவாக இருந்திருக்கலாம் என யூகமாக மொழிபெயர்த்தால் “World War against War”.

உண்மையான நியூ சயண்டிஸ்ட் இதழின் உண்மையான கட்டுரைத் தலைப்புக்களைப் பார்த்தால் அவை தம் உள்ளடக்கம் பற்றிய ஒரு குறிப்பைத் தம்முள் கொண்டிருக்கின்றன. சில அண்மைய எடுத்துக்காட்டுகள்:

Does your biology influence your vote? ;

Of  lice and men: A very intimate history ;

The great thaw: Charting the end of the ice age;

Farmerbots: a new industrial revolution ;

Costing the Earth: The value of pricing the planet ;

Loss of attraction: We’re running out of magnets .

(என் மொழி பெயர்ப்புகள்:

உங்கள் உடலமைப்பு உங்கள் வாக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?;

பேன்களும் மனிதனும் பற்றி: ஓர் அந்தரங்க வரலாறு;

பேரளவிலான உருக்கம்: பனிக் காலத்தின் கடைசிக் காலத்தை வரைதல்;

விவசாயத்தில் ரோபோட்டுகள்: புதிய தொழிற் புரட்சி;

பூமியின் விலை: நமது கோளத்தின் விலைமதிப்பை அறிதல்;

கவர்ச்சியின் இழப்பு: காந்தத்தை இழந்து வருகிறோம்.)

எமிலியின் கட்டுரையின் தலைப்பு இந்த உருவில் இடம்பெற நியூ சயண்டிஸ்ட் ஆசிரியர்கள் அனுமதித்திருக்கமாட்டார்கள். அதில் உள்ளடக்கம் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. நியூ சயண்டிஸ்ட்டின் பாணியை ஒட்டி “வேளாண்மையைக் காப்பாற்றுதல்: போருக்கு எதிரான உலகப் போர்” என்றிருந்திருக்கலாம். (இதுவும் திருப்திகரமாக இல்லை. அசல் தலைப்பைக் காப்பாற்ற முயன்றிருக்கிறேன். அவ்வளவே.)

எமிலியின் கட்டுரையை மேலோட்டமாகப் படித்தாலே அது நியூ சயண்டிஸ்ட் தரத்தில் இல்லை என்பது விளங்கிவிடும். ஏன்? நியூ சயண்டிஸ்ட் இதழுக்கு கோரப்படாத கட்டுரை (unsolicited articles) எழுதுவோருக்கு அந்த இதழ் தரும் ஆலோசனை அவர்கள் வலைத் தளத்தில் இருக்கிறது: (http://www.newscientist.com/info/in209?full=true)

Pitching stories

When suggesting a story, send us a paragraph or two describing exactly what the story is and why it’s significant. If it’s not obvious, spell out how it is different to what’s been done before.

Send in focused pitches relating to one or two story ideas, rather than pitching many less well-informed ideas at once. Make sure it is a good story and explain why it is a good story – remember, your story is competing for coverage against tens or hundreds of others each week.

Do include details such as the names of the researchers and organisations involved, where you came across it, what – if any – media coverage the story has had and, in the case of journals, the title and date. This makes it easier for us to check our archive to see if we’ve done the story already and to decide whether it’s worth covering.

குமாரி டேவிடின் கட்டுரை மேற்சொன்ன எந்த ஆலோசனைக்கும் பொருந்தவில்லை. குறிப்பாக நியூ சயண்டிஸ்ட் கோரப்படாத கட்டுரைகளை வெளியிடுவதில்லை. அவர்கள் எழுதும் செய்திகளை மட்டுமே (stories) தகுதியிருந்தால் வெளியிடும். அப்படி செய்தி என்று எடுத்துக்கொண்டாலும் எ. டேவிட் எழுதியதில் புதிய செய்தி ஏதுமில்லை. பல காரணங்களினால் அது நிராகரிக்கப்படும். முதலில் அது அறிவியல் ஆர்வலர்கள் ஏற்கனவே அறிந்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் கூறுகிறது. (“கொல்லன் தெருவில்…”) புதியதாக ஒன்றுமில்லை. இரண்டாவதாக அது ஒரு செய்தியே அல்ல; வெறும் ஆலோசனைத்தொகுப்பு. அதில் இருப்பது many less well-informed ideas.  மூன்றாவதாக இதில் ஆய்வாளர்கள் பெயர்களோ மேற்கோள்களோ இல்லை. நியூ சயண்டிஸ்ட் ஆசிரியர்கள் அவர்களின் ஆர்க்கைவில் தேடினால்….  அவ்வளவு தூரம் போகக் காரணமே இல்லை.

நாவலுக்குப் பொய் அழகுதான். ஆனால் அந்தப் பொய்க்கு முட்டுக்கொடுக்க நியூ சயண்டிஸ்ட் போன்ற உலகத்தர உண்மை இதழை இழுத்திருக்க வேண்டாம்.

நியூ சயண்டிஸ்டில் இருந்து அதிகபட்சமாக குமாரி டேவிடிற்கு இப்படி ஒரு கடிதம் மட்டும் கிடைக்கலாம்:

அன்புள்ள எம்எஸ் டேவிட்,

தாங்கள் அனுப்பியுள்ள கோரப்படாத கட்டுரையை எங்கள் ஆசிரியர் குழு கவனமாகப் பரிசீலித்தது. ஆனால் அதில் நியூ சயண்டிஸ்ட் இதழில் இடம்பெறத்தக்க உள்ளடக்கம் ஏதும் இல்லாததால் அது திரும்ப அனுப்பப்படுகிறது.

உங்கள் முயற்சிக்கு நன்றி.

ஆசிரியர் குழு, நியூ சயண்டிஸ்ட்.

Series Navigationகையெழுத்துவெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
author

Similar Posts

11 Comments

  1. Avatar
    Veerapandi says:

    வைரமுத்து, எமிலி & சயிண்டிஸ்ட் வரை போக வேண்டியதில்லை… தன் பங்காளி மலை முழுங்கி பி ஆர் பி யின் மேல் ஓர் அரம் பாடினாலே போதும்.. அதை விட்டு புத்தகம் போட்டு அவர் இன்னொரு கல்யாண மண்டபம் கட்ட வேண்டியதில்லை… மொழி அழகியல் பிடி பட்டதால் புத்தகம் போட்டு சமூக அக்கறை கொண்டவர்கள் போலிருப்பவரை விட தெருவோர பிளாட்பார சரோஜா தேவி எழுத்தாளர்கள் பெட்டர்…

  2. Avatar
    Dr.G.Johnson says:

    கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் தொடர் கதையாக மலேசியா மக்கள் ஓசை பத்திரிகையில் வெளிவந்தபோது மிகுந்த ஆர்வத்துடன் அதைப் படித்தேன்.அவரின் மொழியும் நடையும் கண்டு வியந்தேன். கதாபாத்திரங்களும் கதைப்பின்னலும் அருமையே. அதில் வரும் எமிலி கதாபாத்திரம் எங்கிருந்து எடுக்கப்படிருந்தாலும் அவளை அழகாக சித்தரித்திருந்தார் கதாசிரியர் கவிஞர் வைரமுத்து. எமிலியின் கட்டுரை தரம் வாய்ந்ததோ இல்லையோ, அந்த கருப்பொருளான இயற்கையை பாதுகாப்பது என்பதை வைத்து ஒரு பயன்மிக்க நாவலை நமக்கு வடித்துத் தந்துள்ள கவிஞருக்கு எனது பாராட்டுகள்!…டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    சோ.சுப்புராஜ் says:

    நீங்கள் குறிப்பிடும் வைரமுத்துவின் நாவல் உள்ளீடற்ற வெற்று வார்த்தை குவியல்களாலும், வாரி இறைக்கப்பட்ட வெறும் தகவல்களாலும் கட்டமைக்கப் பட்டது. அதில் உண்மையின் ஒளியோ, வாழ்வின் தரிசனமோ துளியும் இல்லை. அவரைப் பொறுத்தவரை நியூ சயிண்டிஸ்ட் என்பது அவர் அறிந்த ஓர் ஆங்கில இதழ். அந்தத் தகவலை நாவலில் சாமர்த்தியமாக நுழைத்திருக்கிறார். அவ்வளவு தான்; அதன் உள்ளடக்கம் பற்றியெல்லாம் அவரே அறிந்திருக்க மாட்டார்.அந்த நாலாந்தர நாவல் பற்றி வேலை மெனக்கெட்டு இப்படி ஒரு ஆராய்ச்சியா?

  4. Avatar
    Dr.G.Johnson says:

    ஒரு நாவலைப் பற்றி கருத்து கூறினால் அது வெட்டி வேலையா? வெளிவரும் நாவல்கள் அனைத்தும் எல்லாராலும் பாராட்டப்படுவதில்லை இன்னும் சொன்னால் படிக்கப்படுவதில்லை. நம் மக்கள் திரைப்படங்களுக்கும் சின்னத்திரை தொடர்களுக்கும் காட்டும் ஆர்வத்தையும் நேரத்தையும் படிப்பதில் காட்டுவதில்லை
    கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போரில் உண்மையின் ஒளியோ, வாழ்வின் தரிசனமோ ஏதும் இல்லை என்று கூறியுள்ளது வேடிக்கை.! வானம் பார்த்த பூமிக்கு அண்ணன் தம்பி அடித்துக்கொள்வதும், வெட்டிக்கொள்வதும் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு வேண்டுமானால் பழகிப்போன பழங்கதையாகலாம் காரணம் அதுதானே இன்றும் நடந்து வருகிறது.? அதனால் இதில் என்ன புதுமையைப் புகுத்திவிட்டார் எனெக் கேட்டுள்ளது நியாயந்தான்.
    ஆனால் இதுபோன்ற மிகவும் பின்தங்கிய நிலையில் இன்னும் நம் கிராமங்களும் தமிழ் மக்களும் உள்ளனரே எனும் ஆதங்கத்தில் இந்த நாவலைப் பலர் ஆர்வத்துடன் படித்துள்ளனர் என்பதும் உண்மையே!
    அவை வெறும் வேற்று வார்த்தைக் குவியல்கள் அல்ல! ஒரு கவிஞனின் மனக்குமுறல்! அவை வாரி இரைக்கப்பட்ட தகவல்கள் அல்ல. இயற்கைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை பறைசாற்றும் சாவு மணியோசை!
    ஆமாம். நீங்கள் கூறுவதுபோல் இருந்தால் எதற்காக வேலை மெனக்கிட்டு ஆனந்த விகடன் இதை தொடர் கதையாக பிரசுரம் செய்தனர்?…….. டாக்டர் ஜி. ஜான்சன். . .

    1. Avatar
      சோ.சுப்புராஜ் says:

      ஒரு நாவலைப் பற்றிக் கருத்துக் கூறுவதை நான் வெட்டிவேலை என்று குறிப்பிட வில்லை. தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மேதாவித் தனத்தை அறிவிக்கும் விதமாக தான் அறிந்த ஒரு ஆங்கில இதழின் பெயரைக் குறிப்பிட்டு அதில் பிரசுரிக்கப் பட்டதாக நாவலில் விவரிக்கப் பட்டிருக்கும் கட்டுரை அப்படிப்பட்ட ஆங்கில இதழில் வெளி வந்திருக்க சாத்தியமில்லை என்று அந்த இதழின் உள்ளடக்கத்தையெல்லாம் அலசி ஆராய்ந்து கட்டுரையாளர் எழுதியிருந்ததைத் தான் வெட்டி வேலை என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட ஆழமான ஆராய்ச்சிக்கெல்லாம் அருகதையற்றது அந்த நாவல் என்ற ஆதங்கத்தைத் தான் அப்படி பதிவு பண்ணியிருந்தேன்.

      /வானம் பார்த்த பூமிக்கு அண்ணன் தம்பி அடித்துக்கொள்வதும், வெட்டிக்கொள்வதும் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு வேண்டுமானால் பழகிப்போன பழங்கதையாகலாம் காரணம் அதுதானே இன்றும் நடந்து வருகிறது.?/ அதெல்லாம் சரி. அது நாவலில் எப்படி விவரிக்கப் பட்டிருந்தது என்பது தானே கேள்வி? நாலாந்தர சினிமாத் தனங்களுடன் கருத்தமாயியை கடவுளுக்குப் பக்கத்தில் கொண்டு போய் நாயக பிம்பங்களுடன் தான் சித்தரிக்கப் பட்டிருந்தது என்பது தான் என்னுடைய வாசக அனுபவம்! அதனால் தான் அதை உள்ளீடற்ற வெற்று வார்த்தைகள் என்று குறிப்பிட்டேன்; உங்களுடைய வாசக அனுபவம் வேறு மாதிரியாக இது கொண்டாடப் பட வேண்டிய நாவலாக உங்களை உணரச் செய்யலாம். அதற்கு நானென்ன செய்ய முடியும்?

      /நீங்கள் கூறுவதுபோல் இருந்தால் எதற்காக வேலை மெனக்கிட்டு ஆனந்த விகடன் இதை தொடர் கதையாக பிரசுரம் செய்தனர்?…….. / நல்ல கேள்வி! இதைப் போல ஒரு தொடரை வைரமுத்து மாதிரி பிரபல மில்லாதவர் எழுதத் தொடங்கியிருந்தால் அது பத்துப் பனிரெண்டு அத்தியாயங்களுடன் மங்களம் பாடப்பட்டு நிறுத்தப் பட்டிருக்கும் என்பது உறுதி. ஆனந்த விகடனும் வைரமுத்து மாதிரியான சினிமா பிரபலங்களுக்கு இடம் தருவதால் அதிகரிக்கும் விற்பனை சாத்தியங்களைக் கணக்குப் போட்டுத் தான் இதை அனுமதிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை தானே! வைரமுத்துவின் நாவல் தொடராக வந்தபோது ஆனந்த விகடனில் எத்தனையோ அற்புதமான சிறுகதைகள் வெளி வந்தன. இலக்கியத் தரத்தில் அவற்றின் நிழலில் நிற்கக் கூட அருகதையற்றவை வைரமுத்துவின் நாவல் அத்தியாயங்கள்!

  5. Avatar
    R.Karthigesu says:

    “மூன்றாம் உலகப் போர்” இரண்டு வகையான பாணிகளால் ஆனது. ஒன்று, கருத்தமாயியின் கிராம வாழ்வு; அதன் மாண்பு, சுரண்டல், வக்கிரம் முதலியவை. இரண்டு, எமிலியும் இஷிமுராவும் இந்தியாவுக்கு நன்மை செய்ய வரும் நவீன கதை. முதலாவதில் வைரமுத்துவின் மொழியழகு கவித்துவம் ஆகியவை சிறந்து நிற்கின்றன. இந்தப் பகுதி மிக அழகியது. இந்தப் பகுதியில் கதைப் பின்னலும் மிக அருமை. அவருடைய முன்னைய கிராம நாவல்களுக்கு இணையானது. இந்த நடையில் நிகழ்ச்சிகளின் விவரணைகளில் அவருக்கு இணை இல்லை.

    ஆனால் அவர் எடுத்துக்கொண்ட இரண்டாம் பாணி சாதாரணமாகிவிடுகிறது. பெரும்பாலும் தற்போதைய அறிவியலாளர்கள் சொல்லும் கருத்துக்களைத் திரட்டித் தந்துள்ளார். அதில் அவருடைய தனித்துவமும் கவித்துவமும் வெளிப்படவில்லை. இந்தியாவுக்கு அவர் சொல்லும் தீர்வுகள் மிக எளிமையானவையாக இருக்கின்றன. இந்தத் தீர்வுகளுக்கு எமிலியும் இஷிமுராவும் தேவையில்லை. இந்திய வேளாணமை அறிவியலாளர்களே இவற்றையும் இன்னும் பல தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே எமிலியும் இஷிமுராவும் ஒரு exotic flavour-க்காக மட்டுமே பயன் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    ஆனால் தமிழில் புதிய அறிவியல் விஷயங்களை அலசுவதில் இந்த நாவல் ஒரு முன்னோடிதான்.

    ரெ.கா.

  6. Avatar
    சோ.சுப்புராஜ் says:

    /முதலாவதில் வைரமுத்துவின் மொழியழகு கவித்துவம் ஆகியவை சிறந்து நிற்கின்றன. இந்தப் பகுதி மிக அழகியது. இந்தப் பகுதியில் கதைப் பின்னலும் மிக அருமை. அவருடைய முன்னைய கிராம நாவல்களுக்கு இணையானது. இந்த நடையில் நிகழ்ச்சிகளின் விவரணைகளில் அவருக்கு இணை இல்லை./ ஒரு நாவலுக்கு மொழி அழகும் கவித்துவமும் பிரதானமில்லை. அவை இரண்டாம் பட்சம் தான். வைரமுத்துவின் அதீத கவித்துவமும் அளவுக்கதிகமான தகவல் இறைப்பும் தான் நாவலின் கதைக் களத்தை அந்நியப்படவே வைக்கிறது. நாவலுக்கு முதல் தேவை நம்பகத் தனமான நிகழ்ச்சிகள்! ஏதோ பெண்ணின் வாயிலிருக்கும் வெற்றிலையை கருத்தமாயி அவளின் இதழில் நாக்குப் படாமல் வெட்டவெளியில் வைத்து எடுப்பாராம்; இது ஒரு வேடிக்கை விளையாட்டாம்…. இதைப் பார்த்து விட்ட கருத்தமாயியின் மனைவி காலமெல்லாம் அவருடன் நேரிடையாய் பேசவே மாட்டாளாம்…. விடலைத் தனமான சினிமா காட்சி மாதிரி இல்லை இது? யாராவது சினிமாவாக இதை எடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புகளுடன் எழுதப்பட்ட அசட்டுத் தனமான தொடர்கதை அது; ரெ.கார்த்திகேசுவுக்கு அது ஒரு அற்புதமான நாவலாகத் தெரிகிறது. ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பைப்பூ சர்க்கரை தான்!

    1. Avatar
      R.Karthigesu says:

      உங்கள் ரசனைக்கு வைரமுத்துவின் நாவல் ஒத்துவரவில்லையென்றால் அதை அப்படியே விட்டுவிடலாம். இலக்கிய ரசனையில் யாரும் யாரையும் வலியுறுத்தத் தேவையில்லை. ஆனால் வைரமுத்துவின் நாவல் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் உலகமுழுவதும் இருக்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
      ஆகவே அது வெற்றிபெற்ற நாவல்தான். நல்ல உணர்வுகளை மனதில் தோற்றுவிக்கும் நல்ல நாவலும் கூட. இதை என் ரசனையின் அடிப்படையிலேயே நான் சொல்லுகிறேன்.

      ரெ.கா.

  7. Avatar
    kavignar ara says:

    இந்த பின்னூட்டங்களே என்னை இக் கதையினை படிக்க தூண்டி உள்ளது.கவிஞர் என்ற முறையில் நான் கூறுவது தன் சுயத்தை கவியால் கதை எழுதும் போதும் இழக்க முடியாது , கட்டுரையில் கூடவும் அதுவே நிஜம். கவிஞர் ஆரா

  8. Avatar
    punaipeyaril says:

    மொழி அழகியல் கை வரப் பெற்றவர்கள் , காமம் பற்றி எழுதி விட்டுப் போகட்டும். சமூக பொறுப்பு , சமூகத்தில் தீய்வர்கள் விருந்துகளில் பங்கேற்காதவர்கள், ஒரு மாநிலமே இயற்கை அழிக்கும் கும்பலை திட்டித் தீர்க்கும் போது அந்த கும்பலின் ஆணிவேரோடு விருந்துண்ணும் மனிதர்கள், தமக்கு மொழி ஆளுமை இருப்பதை வைத்து படைப்பு வேஷம் போடுவது கேள்வி கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட வேண்டும். பொன்னுக்கு ஆசைப்படாமல்… பார் அதி சின்னப் பயல் என்று சொன்னவனே கவிஞன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *