ருத்ரா
ஆம்.
இது இனிமேல்
குப்பன் சுப்பன்களின் பார்ட்டி.
தாத்தா அப்பா பேரன் பூட்டன்
என்று
எத்தனை நாளைக்கு
“நூல்”பிடித்துக்கொண்டிருப்பது?
ரத யாத்திரை போகும்
அந்த ரதத்தில்
ராமனை இறக்கிவிட்டு
(ஊழல் பழி சொன்ன)
சலவைத்தொழிலாளிக்குத் தான்
இனி தூப தீபமா?
எப்படியிருப்பினும்
பொது ஜனம் என்றாலும் சரி
மகா ஜனம் என்றாலும் சரி
சாமான்யன் என்றாலும் சரி
பொத்தான் அமுக்கும் போது..இந்த
“பொது உடைமையை”
மனதில் வைத்துக்கொண்டால் சரி.
வெள்ளைக்குல்லாய்களின்
கும்பமேளா போல் தெரிந்தாலும்
ஊழல் நரம்புகள்
அற்று விழுந்தால் சரி.
இந்தியின் காரமும்
கூடவே இருந்தாலும்
இந்தியா பிழைத்துக்கொண்டால் சரி.
வறுமையின் நிறம் சிவப்பு என்றால்
அலர்ஜி ஆகி விடுகிறவர்கள்
இந்தியாவை ஆட்டிப்படைக்கும்
பணத்தின் நிறம்
கருப்பா? காவியா?
என்று கவலைப்படாமல்
இருந்தாலும்
ஊழல் கறை ஒழிந்தால் சரி.
ஈழத்துள்ளே
தமிழன் ரத்தத்து வேர்த்தூவிகள்
வெட்டப்பட்டிருக்கும் வேளையிலும்
தமிழன் இதயத்துள்ளேயும்
இந்த தீ எரியத்தான் செய்கிறது.
அது
அனுமார்களின் வாலில் வைத்த
தீயாக இருக்கக்கூடாது.
யார் முகமூடி
யாரிடம் இருக்கிறது?
ராமனிடமா? ராவணனிடமா?
அந்த முப்பது சொச்சம் கோரிக்கைகள்
நிறைவேற
அரசியல் சாசனமே இனி
வேதங்களாக இருக்க வேண்டும்.
வேதனை தரும்
நான்கு வர்ணங்களின்
வேதங்களே
அரசியல் சாசனம் ஆகும்
“புழக்கடை”அரசியல் அபாயமும்
அல்லவா
புதைந்து கிடக்கிறது இங்கே!
ஆத்மி என்றால்
ஆத்மா உள்ள சாதாரண மனிதனா?
ஆத்மா என்றால்
என்னவென்றே தெரியாத
சாதாரண மனிதனா?
இது ஒரு ஆத்மீக பார்ட்டியின்
ஆரம்ப அறிகுறி தானோ
என்னும் ஐயமும்
தலை காட்டத்தான் செய்கிறகிறது.
பாருங்கள்.
“ம்ருத்யுஞ்ஜெய” ஹோமம் நடத்தி
டெங்கு கொசுக்களை
ஒழிக்க நினைப்பவர்கள்
நாளை
ஊழல் ஒழிக்க
இதே ஹோமம் நடத்தினாலும்
நடத்துவார்கள்.
மத சாம்ராஜ்யங்களின்
சாமரங்களை மடியில் கட்டிக்கொண்டு
“ஆம்னிபஸ்” ஓட்ட நினைத்தால்
அதில் கட்டித்தொங்கவிட்டிருக்கும்
“கட்காரி” எலுமிச்சம்பழங்கள்
வெறும் திருஷ்டிக்கழிப்பு என்று
புரிந்து போகும்
இந்த “பொது ஜன”த்துக்கு.
நான்கு வர்ணத்தில்
முதல் வர்ணம் தவிர
மற்றவை இங்கே
“அந்நியம்”ஆன பின்
இத்தாலிய வர்ணம்
மட்டுமா
இங்கே அந்நியம்?
ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு
ஊதிய பலூனைக்கட்டிக்கொண்டு
தேர் இழுப்பவர்களே
இதற்கு காற்று ஊதியவர்களின்
பட்டியல்
அமரர் பிரமோத் மகாஜன்
காலம் வரைக்கும்
நீள்கிறதே.
ஆம் ஆத்மி என்றால்
வெறும் “ஆ(மா)ம் சாமி”களா?
கிராமத்துக்குள்
“ராம”இருக்கலாம்.
ராமனுக்குள்
கிராமம் இல்லை.
அவனை
உப்பரிகை வர்க்கமே
பாராயணம் செய்கிறது.
உப்புக்கரிக்கும் வர்க்கம் அல்ல.
இருப்பினும்
ஊழல் தோற்க
ஆம் ஆத்மி ஜெயிக்கட்டும்.
=========ருத்ரா
- உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”
- கடவுள் உண்டு
- விஷமேறிய மரத்தின் சிற்பம்
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- என் ஆசை மச்சானுக்கு,
- ஓடிப் போனவள்
- “ஆம் ஆத்மி”
- ஒரு ரத்தக்கண்ணீர்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஒரு விண்மீன் தன் அண்டக் கோள் ஒன்றை உறிஞ்சி விழுங்குகிறது !
- நம்பிக்கை ஒளி! (8)
- இராத்திரியின் சக்கரங்கள்
- பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை
- ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்
- வாயுள்ள கன்றும் பிழைக்கும்…!
- ரூபம்
- வருவேன் பிறகு!
- தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்
- ஜரகண்டி
- நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)
- காதல் அன்றும் இன்றும்
- மூடிய விழிகள்
- எஸ் ராமகிருஷ்ணன் வழங்கும் உலக சினிமா 7 நாள் பேருரைகள்
- மனம் வெட்டும் குழிகள்
- (3) – க. நா.சு. வும் நானும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -4
- மீண்டுமொரு சரித்திரம்
- வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?
- மலேசியாவில் தொலைந்த மச்சான்
- பழமொழிகளில் காலம்
- அடையாளம்
- வாழ்க்கைச் சுவடுகள்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்
- காலம் ஒரு கணந்தான்
- Arumbugal 2012 organised by Tamil Cultural Association in Hong Kong
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.
- நாத்திகர்களும் இஸ்லாமும்.
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30
- காணோம்
- அக்னிப்பிரவேசம்- 11