தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.

This entry is part 38 of 42 in the series 25 நவம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 41

அவள் தந்த பிரிவுப் பரிசு.

மூலம்: இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எந்தன் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும்
இந்த மலர்மாலை எனக்கவள்
தந்த பிரிவுப் பரிசு !
கால் எட்டு வைக்கும் ஒவ்வொரு கணமும்
இங்கு மங்கும் அசைந் தாடும்
என் இதயத்தின் அருகிலே !
இந்தக் கணமும் அடுத்த தருணமும்
அந்த மாலை நறுமணம் வீசிடும்
தேனீக்கள் ரீங்காரக் கிளைகளின் அடியில்,
வசந்தத் தென்றலில் !

அந்தி சாயும் போது
நடைமேல் நடந்து நான் செல்லும்
அந்தப் பாதை நெடுவே
எந்தன் நிழல் பின்னிக் கொள்ளும்
இருள் கானகத்தின் விளிம்பில் !
இங்கே என் மனதில் நிலைக்கும் நிழல்
அங்கே நெளியும் வனத்தில் !
நெளியும் ஆழ்ந்த
நீல வானின் விளிம்பிலும் !

+++++++++++++++++++++++++
பாட்டு : 285 தாகூர் 61 வயதினராய் இருந்த போது 1922 ஆகஸ்டு – செப்டம்பரில் எழுதியது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 19 , 2012

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்நாத்திகர்களும் இஸ்லாமும்.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *