(ஓர் அறிவியல் மாணவன்)
வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யவரும் எமிலி என்னும் அமெரிக்க மாணவி (நியூ சயண்டிஸ்ட் புகழ்) அமெரிக்காவுக்குத் திரும்பு முன் சின்னப்பாண்டியென்னும் நமது கதாநாயகனுடன் பேசுகிறாள். அந்த உரையாடல் கொஞ்சம் காதல் போல் தொனிக்கிறது. ஆனால் காதல் இல்லை.
எமிலி: “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை நம்புகிறீர்களா?”
சி.பா.: “இப்போது என் வாழ்வின் நம்பிக்கையே நீதான் எமிலி”
“நம்பிக்கையின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்களா?”
“நிச்சயமாக”
….
“சொல்லுங்கள் சின்னப்பாண்டி… என்னோடு அமெரிக்கா வருவீர்களா?”
“ஏன் எதற்கு?”
“உங்கள் மண் நல்லது; மக்கள் நல்லவர்கள்; உன்னத உழைப்பாளிகள். ஆனால் கற்கால உழைப்பைவிட்டு முற்றிலும் விடுபடாதவர்கள். உங்கள் விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். இந்திய வேளாண்மை மரபும் நவீனத் தொழில் நுட்பமும் இணைந்தே இங்கே விவசாயத் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். என்னோடு வாருங்கள். தொழில்நுட்பம் பயிலுங்கள். முதலில் உங்கள் ‘மாதிரி’ கிராமத்தில் அமல்படுத்துங்கள். உங்களை அழைத்துப் போகிறேன். விரைவில் திருப்பியும் அனுப்புகிறேன். அதற்கான செலவுக்கு நான் பொறுப்பு. இதை மனம்விட்டுப் பேசத்தான் உங்களைத் தனிமையில் சந்திக்க ஆசைப் பட்டேன். சமூகத்துக்குத் தொண்டு செய்வதற்கு சமூக சம்மதம் எதற்கு? எங்கே உங்கள் பாஸ்போர்ட்?”
சின்னப்பாண்டி பாஸ்போர்ட் வைத்திருக்கிறானோ என்னவோ தெரியவில்லை. கதையில் அவன் பாஸ்போர்ட் வைத்திருக்கக் காரணம் ஒன்றும் இல்லை.
அது நிற்க, சின்னப்பாண்டி சம்மதிக்கிறான். அவனுடைய பெற்றோர்களின் ஆசியுடன் எமிலியுடன் விமானமும் ஏறுகிறான். ஆனால் கிராமத்தில் நடக்கும் கலவரத்தால் அவன் விமானத்திலிருந்து இறங்கி ஊருக்குத் திரும்பிவிடுகிறான்.
பயணம் நிறைவேறாவிட்டாலும் எமிலியின் இந்த அழைப்பும் சின்னப்பாண்டியின் சம்மதமும் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன.
முதலில் எமிலியின் நோக்கத்தில் உள்ள குழப்பம். மேற்கண்ட உரையாடலுக்குப் பிறகு ஓரிடத்தில் அட்டணம்பட்டிக் கிராமத்திலிருந்து விடைபெறும் முன்னம் எமிலி கிராமத்தாருக்குக் கூறும் புத்திமதி: “இந்த மண்ணின் பூர்விகமான இயற்கை விவசாயத்தை முடிந்த மட்டும் தொடர முயலுங்கள்.”
என்றால் சின்னப்பாண்டி அமெரிக்காவில் போய்க் கற்கும் நவீன விவசாய முறைக்கு அது முரண் ஆகாதா?
இன்னொரு முரணும் உள்ளது. சின்னப்பாண்டி பயில்வது காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தில். இதில் விதை மேலாண்மையில் பட்டயப் படிப்பு படிக்கிறான். இது பாரம்பரிய (காந்தி வழி) மரபு விவசாயத்தைப் போற்றும் பல்கலைக் கழகம். அது உண்மையிலேயே இந்தியாவில் இயங்கும் ஒரு பல்கலை. அதன் வலைத்தளம் இப்படி விளக்குகிறது: (http://www.ruraluniv.ac.in/)
With undying faith and deep devotion to Mahatma Gandhi’s revolutionary concept of ‘Nai Talim’ system of education, Gandhigram Rural Institute has developed academic programmes in Rural Development, Rural Economics and Extension Education, Rural Oriented Sciences, Cooperation, Development Administration, Rural Sociology, English and Communicative Studies, and, Tamil and Indian Languages. Students who emerge from its portals tend to meet the personnel needs for rural development under various governmental and non-governmental schemes.
….
Today, it has become a nationally and internationally recognised Institute for its contribution to rural education, so much so that the New Education Policy of the Nation reflects the principles evolved here in developing the rural university concept.
இப்போதும் கூட காந்தி கிராமப் பல்கலை விவசாயத் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பதிலும் பரப்புவதிலும் முனைப்பாக இருப்பதாகத்தான்தெரிகிறது. அது நடத்துகின்ற ஒரு கருத்தரங்கம் பற்றிப் பாருங்கள்:
http://www.dailythanthi.com/node/28422
“இந்த கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்கள், தொழில் வாய்ப்புகள், கடன்உதவி திட்டங்கள், மத்திய அரசின் குழும தொழில் மானியம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் கொள்கையின் மானிய திட்ட உதவிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் தொடர்பான தகவல்கள் வழங்கப்படுகின்றன. “
எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த நோக்கங்களுக்கு எமிலி பரிந்துரைக்கும் அமெரிக்க முறை தொழில் நுணுக்க விவசாயம் மிகவும் முரணாகவே தெரிகிறது.
….முடிந்தது…
- உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”
- கடவுள் உண்டு
- விஷமேறிய மரத்தின் சிற்பம்
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- என் ஆசை மச்சானுக்கு,
- ஓடிப் போனவள்
- “ஆம் ஆத்மி”
- ஒரு ரத்தக்கண்ணீர்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஒரு விண்மீன் தன் அண்டக் கோள் ஒன்றை உறிஞ்சி விழுங்குகிறது !
- நம்பிக்கை ஒளி! (8)
- இராத்திரியின் சக்கரங்கள்
- பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை
- ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்
- வாயுள்ள கன்றும் பிழைக்கும்…!
- ரூபம்
- வருவேன் பிறகு!
- தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்
- ஜரகண்டி
- நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)
- காதல் அன்றும் இன்றும்
- மூடிய விழிகள்
- எஸ் ராமகிருஷ்ணன் வழங்கும் உலக சினிமா 7 நாள் பேருரைகள்
- மனம் வெட்டும் குழிகள்
- (3) – க. நா.சு. வும் நானும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -4
- மீண்டுமொரு சரித்திரம்
- வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?
- மலேசியாவில் தொலைந்த மச்சான்
- பழமொழிகளில் காலம்
- அடையாளம்
- வாழ்க்கைச் சுவடுகள்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்
- காலம் ஒரு கணந்தான்
- Arumbugal 2012 organised by Tamil Cultural Association in Hong Kong
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.
- நாத்திகர்களும் இஸ்லாமும்.
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30
- காணோம்
- அக்னிப்பிரவேசம்- 11