இது என்னுடைய முதல் நாவல்.
தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத் திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை. எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமையூட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை.. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்கு சுயநலக்காரன், திமிர் பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமென மதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள் மீது தீராத பொறாமை உணர்ச்சியை அடைகாத்து வருபவன், சில வேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன் அவன் – இவை எல்லாம் மறந்து போய்விட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில் அவன் அக்கிர கண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிற போது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஆமோதிக்க, உணமை உணர்ச்சி அவனை உறுத்தும். மறுக்க அவனுடைய புகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப்படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணை இல்லை.
எழுதாளனும் ஒரு கலைஞன். தன் எழுத்து எவ்வாறு பிறர் படித்து ரசிக்கும்படியாக அமைந்து விடுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் அப்பாவி அவன். அவன் வாழ்கிற காலத்தின் ஜீவரசம் அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய பொறிகளுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும், முடிப்பிலும் அவனுடைய ரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. வைஷ்ணவ நெற்றியில் நாமம் போல் டைட்டில் பக்கத்தில் அவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது இல்லை. பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன. விஞ்ஞான பத்ததிக்கும், தருக்க சாஸ்திர முறைக்கும் இலக்காகாத அவ்வுணர்வுகளின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் சகஜம்; தவிர்க முடியாதவை. இதற்கு நேர்மாறாக, கலையுலகில் அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைப்பவன் கலைஞனே அல்ல. தெருக்கோடி கிறிஸ்துவ பஜனையில் தொண்டையைக் கிழித்துக் கொள்பவனுக்கும் அவனுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்: மொழி செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள். தலைகீழாகச் சொல்லிப் பழகி விட்டார்கள். சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள். கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல் பழகிவிட்டது.
நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தி தருகிறது..
படித்துப் பாருங்கள். இந்நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.
நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக்கூடுமென்று தோன்றுகிறது.
நாகர்கோயில்
23 ஜூன் 1966 சுந்தரராமசாமி.
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.
- இலக்கு
- தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
- மரண தண்டனை- நீதியின் கருநிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !
- பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்
- நாம்…நமது…
- மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்
- நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.
- தளபதி .. ! என் தளபதி ..!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38
- நினைவுகளின் சுவட்டில்(104)
- நதியும் நானும்
- விருப்பும் வெறுப்பும்
- நம்பிக்கை ஒளி! (9)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5
- அக்னிப்பிரவேசம்-12
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!
- அடங்கி விடுதல்
- ஆமைகள் புகாத உள்ளம் …!
- நம்பிக்கை என்னும் ஆணிவேர்
- சன் ஆப் சர்தார் ( இந்தி )
- கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்
- குரு
- என்னைப் போல் ஒருவன்
- பிஞ்சு மனம் சாட்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு
- நன்னயம் – பின்னூட்டம்
- மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’
சுரா பாணி. மெல்லிய அங்கதம். மிகையற்ற நடை. எல்லாவற்றை விட கவனிக்கவேண்டியது அவருடைய கவிதை கதை நாவல் இவற்றின் நடைகளை கலப்பதில்லை.
சும்மா தனக்குப் பிடித்த முன்னுரைகள் என்று கட் அன்ட் பேஸ்ட் கட்டுரைகள் போட்டிருக்கிறார்.
இதை நானே போய் அந்நாவலை வாங்கி அந்த முன்னுரையப் படித்துக்கொள்ளலாமே? ஏன் சபாநாயகத்தின் உதவி தேவை? ஏன் திண்ணையில் கட் அன்ட் பேஸ்ட் ?
ஏன் பிடித்தது என்று சொல்லால்தானே கட்டுரை என்று சொல்லலாம். கட் அன்ட் பேஸ்டை எப்படி கட்டுரை என்றழைக்க முடியும்?
திண்ணை தன் எழுத்தாளர்களிடம் தயவு செய்து வெட்டி ஒட்டும் வேலை இங்கே பண்ணாதீர்கள் என்று சொல்லிவிட்டால் நன்று.
Out of 3 posts, only 1 has been allowed that appears above: rather disappointing as this s just a literary topic. The introduction was commented upon by me in the 2 posts. Still, a serious censorship has been unleashed.
It wd have been justifiable censorship if the posts had been in English. All were in Tamil only. I just said in the post that the introduction shd have focused on the novel, its germination, its background, and the impulses behind its creation, as we see in introductions of great novels authored by the novelists themselves. Instead, it launches a sarcastic attack on fellow writers in Tamil. Totally uncalled for. As it stands, it shows the author as possessing gigantic ego even b4 the public read his 1st novel and applauded it.
When one can’t express these views in this forum, the principles of the forum look questionable: Does it want only such views which will not b against a certain section?
More censorship will see me out, which, indeed, will hearten many of the section.
Thinnai wont finish if one quits. At the same time, the one won”t finish either if he r she quits.
Let Thinnai release the blocked posts so that the readers can decide whether they r worthy of censorship. If the majority of the readers endorse the censorship, to quit is graceful and I shall.
Regards to Thinnai editors.
கருத்துத் தெரிவிக்கும் வாசகர்களுக்கு : நான் படித்ததில்லை ஆனால் படிக்காத ஒன்றைப் பற்றி கருத்து சொல்வேன் என்று எழுத வேண்டாம். மற்ற எழுத்தாளர்களை அவமதிக்கும் விதமாக எழுத வேண்டாம். நன்றி
ஆசிரியர் குழு
dear editor.
V.Saba s’ MunnuraikaL is very interesting.it is not cut and paste work as observed by kavya.i am always inspired on reading the selected prefaces.
ஸ்ரீ வே. சபாநாயகத்தின் நோக்கம், தாம் ரசித்த முன்னுரைகளை எடுத்தெழுதி மற்றவர்களுடன் தமது ரசனையைப் பகிர்ந்துகொள்வதுதான் என்று இதைப் புரிந்துகொள்வதைவிட்டு மனம் போன போக்கில் அவரை விமர்சிப்பது புரிந்துகொள்வதில் உள்ள பலவீனம், கோளாறு, அவ்வளவே. படித்து ரசித்த முன்னுரை தனக்கு ஏன் பிடித்தது என்று சொல்ல வேண்டும் என அவரைக் கட்டாயப்படுத்த முடியாது. சபாநாயகம் செய்வதும், திண்ணை அதனைப் பிரசுரம் செய்வதும் மிகச் சரி. வே. சபாநாயகம் தொடர்ந்து தமது ரசனையைத் தம்முடைய குறுக்கீடு எதுவுமின்றி மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அவரது ரசனை பலரும் அறிந்த ஒன்று.
-மலர்மன்னன்
பெரியவர் சபாநாயகம் அவர்கள் எத்தனை பிரயத்தனப்பட்டு இத்தகைய இலக்கிய சாரம் உள்ள விஷயங்களைத் தேடித் தேடிப் பகுத்து + தொகுத்து இப்படி, தலைவாழைஇலை விருந்தாக, ஆர்வமுள்ளவர்களுக்கு பகிர்ந்துகொள்கிறார்கள் என்கிற அருமை தெரியாத ஒரு நபரின் கருத்தை, இப்படி திண்ணை வெளியிட்டு இருக்கிறது.
முட்டாள்தனமான கருத்துக்களை சென்சார் செய்வதில் தப்பே இல்லை .
சில அசட்டுத்தனமான அபிப்ராயங்கள் வெளியே பலருக்குத் தெரியாது போனால் அது பல விதங்களிலுமே நல்லது.
ஒரு தேனீ போல, நல்ல இலக்கியத்தின் சாரத்தை அவர் காலம் காலமாக சிரமேற்கொண்டு சேகரித்து பகிர்ந்து வருகிறார் .
நினைவுத்தடங்கள் என்கிற அவரின் இணையத் தொகுப்பை யாராவது சற்றே பார்த்தால் அவரின், விஸ்வரூபத்தின் ஒரு பரிமாணம் தெரிய வரும் .
http://ninaivu.blogspot.com/
சும்மா சேற்றை வாரி இறைப்பது என்பது, குட்டையில் + சேற்றில் ஊறி உழலும் பலருக்கு, கைவந்த கலையாக இருப்பது, நமது சூழலின் ஒரு சோகமான துரதிர்ஷ்டமே .
நயமான இலக்கியநாயகமவே வாழ்ந்து வரும், சபாநாயகம் அவர்களுக்கு இது போன்ற முட்டாள்களின் கருத்துக்களால் சோர்வே ஏற்படுத்த முடியாது என்பதை நான்
அறிவேன் . பலப்பல நினைவுப் பெட்டகங்கள் பதித்துப் பொக்கிஷமாகப் பாதுகாக்கத்தகுந்த பல்வேறு அபூர்வமான தமிழ் இலக்கியச் சுரங்கங்கள் அவர் வசம் உள்ளது .
தயவு செய்து அதை இப்படி திண்ணை மூலமாக தரமான நபர்களுக்கு அவர் பகரிந்து கொள்வதை, தொடர இறையருள் அவருக்கு நீண்ட ஆயுளும், திண்ணைக்கு அந்த வாய்ப்பும் அமைய பிரார்த்திக்கிறேன் .
அப்படியே ஆகட்டும் .
ஸ்ரீ பராசக்தி துணை .
வெங்கடராமன் ஸ்ரீநிவாசன் .