பொல்லாதவளாகவே

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 32 in the series 13 ஜனவரி 2013

கோமதி நடராஜன்

அநியாயங்களைச் ,சகித்துக்
கொண்டே போனேன் .
நல்லவளானேன் .
சகிப்பு தொலைந்து ,
நிமிர்ந்து பார்த்தேன்
கெட்டவளாய் ஆனேன்

நக்கல்களை ,நல்லவிதமாய்,
எடுத்துக் கொண்டே நகர்ந்தேன்
நம்மவள் ஆனேன்.
ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன்.
யாரோ என்றானேன் .

பொய்யென்று தெரிந்தும்,
பொறுத்துப் போனேன்
ஏற்றவளானேன்
நம்பாத முகம் காட்டினேன்
தகாதவளானேன்

நல்லவளாய்
ஏற்றவளாய்
இனியவளாய்
என்றுமிருக்க
நல்லவை அல்லாதவைகளைப்,
பொறுத்துப் போனால்தான்
சாத்தியமென்றால் ,
பாதகமில்லை !
நான் ,பொல்லாதவளாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்.
————————–

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….12 க.நா.சுப்ரமண்யம் – ‘இலக்கிய விசாரம்’வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)
author

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *