சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற நான்கு பகுதிக் கட்டுரையை இங்கு வெளியிட்டேன். அதில், விஸ்வரூபம் படத்திலும் இது போன்ற சர்ச்சைகள் உருவாகும் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எதிர் பார்த்ததை போலவே, மிக மிகத் தீவிரமான ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் வியப்புக்கு இடம் தரும் ஒரு நிகழ்வு என்னவென்றால், மத்திய தணிக்கைத் துறையால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு சட்டவிரோதமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். நான் வேறு கோணத்தில் இந்த விவகாரத்தை பார்க்க விரும்புகிறேன்.
பொதுவாகவே கமல் ஹே ராம் மாதிரியான படங்களை எடுக்கும் போது இந்து சமய அடிப்படைவாதிகள், கமல் இந்துக்களை புன்படுத்துகிறார் என்றும், முசுலீம்களை பெரிதாகக் காண்பித்து இந்துக்களை மட்டம் தட்டி முசுலிம்களை கவர நினைக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிலர் படத்திற்கு தடை விதிக்கக் கூறி வன்முறையில் இறங்குவார்கள் (போஸ்டரை கிழிப்பது, திரையிடும் தியேட்டர் மீது கல் எறிவது போன்றவை ஹே ராம் வெளியான சமயத்தில் நடந்தன).
அதே போல, கமல் உன்னை போல் ஒருவன் மாதிரியான படங்களை எடுக்கும் போது இசுலாமிய சமய அடிப்படைவாதிகள், கமல் எல்லா முசுலீம்களையும் தீவிரவாதி என்று சித்தரிக்கிறார் என்று கோஷம் எழுப்புவது வழக்கம். வன்சொற்களை பயன்படுத்தி கமலை திட்டுவது வழக்கம்.
இப்போதும் இது தான் நிகழ்ந்திருக்கிறது. தான் முசுலிம்களுக்கு எதிரான படத்தை எடுக்கவில்லை என்று சொன்ன கமல் இந்த இரு எதிர்ப்புகழையும் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையே நான் இந்தக் கட்டுரையின் மூலம் காண விரும்புகிறேன்.
இந்து மத அடிப்படைவாதிகள் எதிர்த்த போதும் கமல் சட்ட ரீதியான வழிகளை நாடினார். சில நேரங்களில் அவருடைய தரப்பு ஞாயம் வென்றிருக்கிறது. சில நேரங்களில் சூழ்நிலைகளின் கட்டாயத்திற்கு அவர் பணிந்து போயிருக்கிறார்.
இப்போதும், இத்தனை கடுமையான சூழ்நிலையிலும் சட்ட ரீதியான தீர்வை தான் நாடியுள்ளார் கமல். அவர் கொடுத்துள்ள பேட்டியில், “விஸ்வரூபத்தை தணிக்கை செய்த குழுவில் ஒரு முசுலிம் இருந்தார். அந்தக் குழு இந்தப் படத்தை பார்த்து, ஆலோசனை செய்து, இதில் எந்த ஒரு மாற்றமும் தேவை இல்லை என்று கத்தரிப்பு இல்லாமல் வெளியிட அனுமதி அளித்தது. இது போன்ற முசுலிம்களுக்கு ஆதரவான படம் சமீபத்தில் வரவில்லை. தேச பக்தி மிக்க எந்த முசுலிமும் இந்தப் படத்தை தங்களுக்கு எதிரானது என்று எண்ண மாட்டார்கள். இந்தப் படத்தில் உண்மைகளை உள்ளபடியே சொல்லி இருக்கிறேன். எந்த விதமான பிரசங்கமும் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த எதிர்ப்பு தேவையற்றது. கலைஞர்களுக்கு எதிரான கலாச்சார தீவிரவாதம் தடுக்கப் படுவேண்டும்’, என்று தயக்கமில்லாமல் கூறியுள்ளார்.
கமல் முசுலீம்களை கவர நினைக்கிறார் என்று சொன்ன இந்து அடிப்படைவாதிகள், இப்போது, ”பார்த்தீர்களா? முசுலிம்களுக்கு எதிராக ஒரு படம் வந்தால் என்ன நடக்கும் என்று தெரிகிறதா? இனிமேலாவது இந்த ஒரு தலைபட்சமான பகுத்தறிவை கமல் விட வேண்டும். இந்துக்களை புன்படுத்துவதை விட வேண்டும்” என்று சொல்லி இந்து மத வெறிக்கு எதிரான கருத்துக்களை அமிழ்த்தப் பார்க்கிறார்கள்.
முசுலிம் அடிப்படைவாதிகளோ, “தமிழ் சினிமாவில் ஏன் இந்து மதவெறியை இசுலாமிய மதவெறிக்கு இணையாக விமர்சிப்பதில்லை? எங்களை மட்டுமே குறிவைப்பது ஏன்?” என்று கேட்கிறார்கள்.
இவ்விரு அடிப்படைவாதமும் முன்னுக்குப் பின் முரணாகவும், விவரங்களை, உண்மைகளை, அறியாமலும் முன்வைக்கப் படுகின்றன.
உண்மையில் இந்து அடிப்படைவாதிகள் சொல்வது போல எல்லா முசுலிம்களும் இந்தப் படத்தை எதிர்க்கவில்லை. சொல்லப் போனால் ஒரு முசுலிம் அமைப்பு இந்தப் படத்தை வெளியே வர விடவேண்டும் என்று அறிக்கையே விட்டிருக்கிறது!
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை என்ற முசுலிம் அமைப்பு ஜனவரி ஆறு, 2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்படம் மலேஷியாவில் போட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். படம் பார்த்த பல இசுலாமிய நண்பர்கள் கமலை பாராட்டியும் இருக்கின்றனர். துப்பாக்கியை போல விஸ்வரூபம் முசுலீம்களை காயப்படுத்தாது என்று இசுலாமிய தணிக்கை குழு உறுப்பினர்களே சொல்கின்றனர். ஆகவே படம் வெளிவருவதற்கு முன்னதாகவே பல பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது தேவையற்றது தான்” என்று எழுதப்பட்டு, அதன் தலைவர் திரு. மேலை நாசர் அவர்களின் கை எழுத்தோடு வெளிவந்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இணையத்தில் இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் முசுலிம் நண்பர்களும் அடக்கம். சொல்லப் போனால் ஒரு முக்கிய வேடத்தில் திரைப்பட நடிகரும், முசுலிமும் ஆன, நாசரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த ஒரு மலேஷிய முசுலிம் சகோதரர், எதிர் தரப்பு முசுலிம் அமைப்பின் வாதத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். “படம் ஆப்கானின் அமரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முசுலிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை. எந்த தமிழ் முசுளிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை.
கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும் போது ‘எப்படி தமிழ் பேசுறீங்க என் கேட்கும் போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும், மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார். இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்லவில்லை.
அடுத்து உமர் கமலை வைத்துக் கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார். அவர் அதை சரியாக சொல்வார். இந்த இரண்டு காட்சிகளை பார்த்து முசுலிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை”, என்று தன்னுடைய வலை தளத்தில் எழுதி இருக்கிறார் மொகமது பரூக்.
இவர்களுக்கேல்லாம் முசுலிம் தீவிரவாதமும், முசுலிம் மார்க்கமும் வேறு வேறு என்று தெரிந்திருக்கிறது. முசுலிம் தீவிரவாதத்தை எதிர்த்தால், முசுலிம் மதத்தை எதிர்த்தாகாது என்று புரிந்திருக்கிறது.
முசுலிம் அமைப்பினரின் வற்புறுத்தலில் பேரில் அவர்களுக்கு படத்தை திரையிட்டுள்ள கமல், படத்தை புரிந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆனால், மேற்குறிப்பிட்ட காட்சிகளை முசுலிம் அமைப்பினர் எதிர்த்த போது, “இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவற்றை நீக்க முடியாது” என்றும் கூறியுள்ளார். இதை அந்த முசுலிம் அமைப்பின் தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு, தன்னுடைய அறிக்கையில், எதிர்க்கும் இந்த சிறு அமைப்புகள் எல்லோரும் தேச பக்தியை முன்னிறுத்தவில்லை என்று கூறியுள்ளார். இதுவே அவர் முசுலீம்களை கவர நினைக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
மறு புறம், இசுலாமிய அடிப்படைவாதிகள் பேசுவது போல தமிழ் சினிமாவும் கமலும் ஒன்றல்ல! விஜயகாந்த்-உம், அர்ஜூனும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த காலம் ஒன்று இருந்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் எல்லா முசுலிம்களும் தீவிரவாதிகள் என்பது போன்ற ஒரு மாயை ஏற்பட்டது. இந்த கருத்து பரவியதில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் பெரியது. ஆனால், அந்த காலக் கட்டத்தில், தைரியமாக இந்துத்வ வெறித்தனங்களை நேரடியாக சாடியவர் கமல் ஹாசன் ஒருவர் தான்.
இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், 1993-ல் நடந்த மும்பை கலவரத்தின் போது, அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்-இடம் சென்று ஒரு இந்தியனாக கமல் முறையிட்ட சம்பவத்தை சொல்லலாம். இதை பற்றிய முழு நீளச் செய்தி, 7-2-93 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது (விவரத்தை கேட்பவர்களுக்கு மின் அஞ்சலில் நான் அனுப்பி வைக்கிறேன்).
தன்னுடைய ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் படங்களில் கல்கத்தா, குஜராத் இந்துத்வ தீவிரவாதத்தை கடுமையாக சாடியுள்ளார் அவர். எல்லா முசுலிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்ற கருத்தை தசாவதாரத்தில் சொல்லி இருக்கிறார். இதை நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய கட்டுரையில் விளக்காமாக கூறியுள்ளேன். தமிழ் சினிமா நடிகர்கள் எல்லோரும் கூத்தாடிகள் என்று நா கட்டுப்பாடில்லாமல் பேசும் அடிப்படைவாதிகள் தான் தமிழ் சினிமாவிலிருந்து தனித்து நிற்கும் கமல் போன்ற கலைஞர்களை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தேச பக்தி மிக்க முசுலிம்களும், பகுத்தறியத் தெரியும் இந்துக்களும் கமலுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
கமல் உன்னை போல் ஒருவனில் கூறியது போல, இப்போது நடக்கும் இந்த சண்டை மற்றுமொரு இந்து-முசுலிம் விளையாட்டு. இந்து அடிப்படை வாதிகள், கமலை முசுலிம் அபிமானி என்று சொல்லி பந்தை(கமலை) எதிர் திசை நோக்கி தட்டிவிடுகிரார்கள். அவர்கள், இவர் முசுலிம் எதிர்ப்பாளர் என்று சொல்லி வேறு பக்கம் தட்டி விடுகிறார்கள். நடுவில், விசிலை வைத்துக் கொண்டு நீதி மன்றம் நிற்கிறது. படத்தை பார்த்துவிட்டு, இதில் எந்த முசுலிம் எதிர்ப்பும் இல்லை என்ற தீர்ப்பு வந்தால், இவர்கள், நீதிபதி ஒரு இந்து. அவர் முசுலிம்களுக்கு எதிராகத் தான் தீர்ப்பு எழுதுவார் என்று சொல்வார்கள். தணிக்கை அதிகாரியாக இருந்த நேர்மையான முசுலிமிற்கு துரோகி என்ற பட்டம் தான் மிஞ்சும். நாசரும், துரோகி! உண்மையைச் சொல்லும் அனைவரும் துரோகிகள்!
கண்ணன் ராமசாமி
Writer.kannan@gmail.com
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
- பறக்காத பறவைகள்- சிறுகதை
- சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
- இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
- கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
- வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
- வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
- அக்னிப்பிரவேசம்-20
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
- பள்ளியெழுச்சி
- விற்பனைக்குப் பேய்
- விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
- வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- விதி
- தாய்மை
- கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
- உண்மையே உன் நிறம் என்ன?
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
- குப்பை
- கவிதை பக்கம்
- ரயில் நிலைய அவதிகள்